இளந்தமிழ்
ஏழாம் வகுப்பு
தமிழ்
இரண்டாம் பருவம்
வினா - வங்கி
_____________________________________________________________________________________________
மொழியை ஆள்வோம்
கவிதையை நிறைவு செய்க
வானும் நிலவும் அழகு
வயலும் __________ ___________
_________ ____________ _______
_________ ___________ _________ அழகு.
படம் உணர்த்தும் கருத்தை ஐந்து வரிகளில் எழுதுக.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒரு தொடரில் முதல் மற்றும் இறுதிச்சொல்லாகக் கொண்டு சொற்றொடர் அமைக்க.
எ.கா: ஓவியக்கலை
ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.
நுண்கலைகளுள் ஒன்று ஓவியக்கலை.
இடைச்சொல் ‘ ஐ ‘ சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.
( எ.கா ) வீடு கட்டினான் – வீடு + ஐ + கட்டினான் = வீட்டைக் கட்டினான்.
1. கடல் பார்த்தான் 2. புல் தின்றது 3. கதவு தட்டும் ஓசை
4. பாடல் பாடினாள் 5. அறம் கூறினார்.
கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
எங்கள் ஊர்
முன்னுரை – அமைவிடம் – பெயர்க்காரணம் – தொழில்கள் – சிறப்பு மிகு இடங்கள் – திருவிழாக்கள் – மக்கள் ஒற்றுமை – முடிவுரை
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும் புதிரைப் படித்து விடையைக் கண்டறிக.
1. நான் இனிமை தரும் இசைக் கருவி. எனது பெயர் ஆறு எழுத்துகளை உடையது. அதில் இறுதி நான்கு எழுத்துகள் விலை உயர்ந்த ஒரு உலோகத்தைக் குறிக்கும். முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு எழுத்துகளைச் சேர்த்தால் விலங்கின் வேறு பெயர் கிடைக்கும்.
நான் யார்? ______________.
2. நான் ஒரு காற்றுக் கருவி. நான் புல் வகையைச் சேர்ந்த தா வரத்திலிருந்து உருவாக்கப்படுகிறேன். எனது பெயர் ஏழு எழுத்துகளைக் கொண்டது. முதல் இரண்டு எழுத்துகள் ஒரு தாவர வகையைக் குறிக்கும். இறுதி மூன்று எழுத்துகள் எனது வடிவத்தைக் குறிக்கும்.
நான் யார்? _______.
பின்வரும் பத்திகளை ப் படித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க
சாலை விபத்துகளைத் தவிர்க்கச் சாலை விதிகளை அறிந்து ஒவ்வொருவரும் வாகனங்களை ஓட்ட வேண்டும். சாலையில் வாகனங்களை இடப் புறமாகவே செலுத்த வேண்டும். இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக் கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும். வாகனங்களை முந்துவதற்குக் கோட்டுக்கு வலது பக்க ம் உள்ள சாலையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக் கூடாது.
ஒருவழிப்பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்த வேண்டும். தடக் கோடுகள் இடப்பட்டுள்ள சாலையில் தடத்தின் உள்ளேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். வாகனத்தைப் பின்தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக் கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண் டும்.
வினாக்கள்
1. சாலையின் எந்தப் பக்கமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும்?
2. விட்டுவிட்டுப் போடப்படும் வெள்ளைக் கோடு எதனைக் குறிக்கும்?
3. எந்தக் கோட்டைத் தாண்டி வாகனங்களை முந்திச் செல்ல அனுமதி இல்லை?
4. ஒருவழிப் பாதை எனப்படுவது யாது?
5. வாகனங்களைப் பின் தொடர்வதற்கான முறையைக் கூறு
கலைச்சொல் அறிவோம்
1. creator 6. Manuscripts
2. sculpture 7. aesthetics
3. artist 8. brush
4. inscriptions 9. Cartoon
5. cave paintings 10. Modern art
PDF - FILE
KINDLY WAIT FOR 10 SECONDS
பத்து விநாடிக்குப் பின் தோன்றும் DOWN LOAD என்பதனை அழுத்தி பெறவும்