இளந்தமிழ்
ஏழாம் வகுப்பு
தமிழ்
இரண்டாம் பருவம்
வினா - வங்கி
_____________________________________________________________________________________________
பருவம் : 2 இயல் : 2
கல்வி இன்பத்தமிழ்க் கல்வி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பெண்களுக்கு நிகராகப் பாரதிதா சன் கூறுவது________
அ) மயில் ஆ) குயில் இ) கிளி ஈ) அன்னம்
2. பின்வருவனவற்றுள் ‘ மலை’யைக் குறிக்கும் சொல்
அ) வெற்பு ஆ) காடு இ) கழனி ஈ) புவி
3. ’ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _
அ) ஏடெடு + தேன் ஆ) ஏட்டு + எடுத்தேன்
இ) ஏடு + எடுத்தேன் ஈ) ஏ + டெடுத்தேன்
4. ‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) துயின்று + இருந்தார் ஆ) துயில் + இருந்தார்
இ) துயின்றி + இருந்தார் ஈ) துயின் + இருந்தார்
5. என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________
அ) என்றுஉரைக்கும் ஆ) என்றிரைக்கும்
இ) என்றரைக்கும் ஈ) என்றுரைக்கும்
பொருத்துக.
1. கழனி - கதிரவன்
2. நிகர் - மேகம்
3. பரிதி - சமம்
4. முகில் - வயல்
குறுவினா
1. பாரதிதாசனின் மனத்தைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?
2. தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்?
சிறுவினா
1. ’இன்பத்தமிழ்க் கல்வி’ - பாடலின் மையக்கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.
சிந்தனை வினா
தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
PDF - FILE
KINDLY WAIT FOR 10 SECONDS
பத்து விநாடிக்குப் பின் தோன்றும் DOWN LOAD என்பதனை அழுத்தி பெறவும்