வகுப்பு : ஆறாம் வகுப்பு
பருவம் : இரண்டு
பாடம் : தமிழ் இயல் : 03
பாடத்தலைப்பு : 1. உழைப்பே மூலதனம்
2. சுட்டு, வினா எழுத்துகள்
அறிமுகம் :
Ø உங்களிடம்
தேவைக்கு அதிகமான பணம் கிடைத்தால் என்னவெல்லாம் செய்வீர்கள்?
Ø முன்னர்
கற்ற இலக்கணப் பகுதியிலிருந்து வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக்
காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø தொழில்
மூலம் அடையும் முன்னேற்றத்தை உணர்தல்
Ø சுட்டு
எழுத்துகள், வினா எழுத்துகளை அறிந்துப் பொருத்தமாகப் பயன்படுத்துதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை
ஆர்வமூட்டல்
Ø
பாடப்பகுதியின் மையக் கருத்தை உணர்த்துதல்
Ø
கதையின் கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்தல்
Ø
நிறுத்தற் குறிக்கு ஏற்றாற் போல் உரைப்
பகுதியினை வாசித்துக் காட்டல்
Ø
மாணவர்களை பின் தொடர்ந்து வாசிக்க வைத்தல்
Ø
சுட்டு
எழுத்துகள் பற்றிக் கூறல்
Ø
அகச்சுட்டு,
புறச்சுட்டு பற்றிக் கூறல்
Ø
அண்மைச்சுட்டு,
சேய்மைச் சுட்டு பற்றிக் கூறல்
Ø
சுட்டுத்
திரிபுகளைப் பற்றிக் கூறல்
Ø
வினா எழுத்துகளில் அக வினா,
புற வினா பற்றிக் கூறல்
கருத்துரு வரைபடம் :
உழைப்பே மூலதனம்
சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்
விளக்கம் :
உழைப்பே மூலதனம்
Ø அருளப்பர் என்னும் வணிகர்
Ø வளவன், அமுதன், எழிலன்
என மூன்று பிள்ளைகள்
Ø அருளப்பர் வெளிநாடு செல்ல
திட்ட மிடுகிறார்.
Ø தமது பிள்ளைகளுக்கு ஐம்பதாயிரம் தருகிறார். தான் திரும்பி
வரும் போது அதைத் திருப்பி பத்திரமாக எனக்குத் தர
வேண்டுமென்கிறார்.
Ø வளவன் உழவுத் தொழிலில் ஆர்வம் கொண்டு முதலீடு செய்து
தொழில் செய்தான்
Ø அமுதா ஆடு,மாடுகள் வளர்த்து பால், வெண்ணை, நெய்
போன்றவற்றை விற்பனை செய்தாள்
Ø எழிலன் பணத்தை பத்திரமாக
வைத்திருந்தான்
Ø அருளப்பர் வந்ததும் மூவரும் தன்னிடம் உள்ள பணத்தினை
என்ன செய்தார்கள் எனக் கூறிக் கொடுத்தனர்.
Ø எழிலன் எதுவும் செய்யாமல்
பணத்தை திருப்பிக் கொடுத்தான்
Ø எழிலனுக்கு அறிவுரைகள் கூறி அருளப்பன் தன்னிடம்
தொழிலைக் கற்றுக் கொள்ளக் கூறினார்.
சுட்டு எழுத்துகள்,
வினா எழுத்துகள்
Ø ஒன்றைச்
சுட்டிக் காட்ட வரும் எழுத்துக்களுக்கு சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
அகச்சுட்டு
:
சொல்லின்
உள்ளேயே இருந்து சுட்டுப் பொருளைத் தருவது.
எ.கா : அவன்
புறச்சுட்டு
சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டுப் பொருளைத்
தருவது.
எ.கா : அம்மலை
அண்மைச்
சுட்டு
அருகில் உள்ளவற்றை சுட்டுவது. - இவன்
சேய்மைச்
சுட்டு
தொலைவில் உள்ளவற்றைச் சுட்டுவது - அவள்
சுட்டுத் திரிபு
சுட்டு எழுத்துகளில் மாற்றம் பெற்று வருவது – அம்மரம்
– அந்த மரம்
வினா எழுத்துகள்
வினாப் பொருளைத் தரும்
எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்
யா,ஆ,எ,ஓ,ஏ – ஐந்தும்
வினா எழுத்துகள்
மொழிக்கு முதலில் வருபவை
– எ,யா
மொழிக்கு இறுதியில் வருபவை
– ஆ, ஓ
மொழிக்கு இடையிலும்,
இறுதியிலும் வருபவை - ஏ
அக வினா :
அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது – எது? யார்?
புற வினா :
புறத்தே இருந்து வினாப்
பொருளை தருவது – அவனா?
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு
அறிதல்
Ø மையக் கருத்தை அறிதல்
Ø பணத்தின் தேவையை உணர்தல்
Ø பணத்தைக் கொண்டு பொருலீட்டும் வழிகளை அறிதல்
Ø சுட்டு எழுத்துகள் பற்றி அறிதல்
Ø சுட்டு எழுத்துகளில் அகச்சுட்டு, புறச்சுட்டு, அண்மைச் சுட்டு,
சேய்மைச் சுட்டு, சுட்டுத் திரிபு பற்றி அறிதல்
Ø வினா எழுத்துகளில் அக வினா, புற வினா பற்றி அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø அருளப்பர்
என்பவர் யார்?
Ø சுட்டு
எழுத்துகள் என்பது யாது?
MOT
:
Ø அருளப்பர்
பிள்ளைகள் பணத்தை என்ன செய்தார்கள்?
Ø அந்த வீடு யாருடையது? உன்னுடன் வந்தவன் அவனா?
-இத்தொடர்களில் காணப்படும் சுட்டுச்சொற்கள் மற்றும் வினாச்
சொற்கள் யாவை?
HOT
Ø பணம்
சார்ந்த பழமொழிகளைக் கூறுக
Ø அகச்சுட்டு,அகவினா,புறச்சுட்டு,புறவினா
என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.
கற்றல் விளைவுகள் : உழைப்பே மூலதனம்
Ø T609 மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து குறிப்பிட்ட
செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல்மற்றும்
முடிவு செய்தல்
சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்
Ø T T816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம்
மொழியில்
எழுதும் போது பயன்படுத்துதல்
Ø
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø நீங்கள் எழிலனாக இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்து
இருப்பீர்கள் என எழுதி வருக
Ø வினாச் சொற்களைக் கொண்டு தொடர் அமைத்து வருக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை