வகுப்பு : ஆறாம் வகுப்பு
பருவம் : இரண்டு
பாடம் : தமிழ் இயல் : 03
பாடத்தலைப்பு : 1. நானிலம் படைத்தவன்
அறிமுகம் :
Ø அன்றாட உணவுத் தேவைக்கான பொருட்களைப் பற்றி கூறி அவற்றை பெறும் வழிகளைக் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø தமிழர்களின் பண்டைய வணிகம் குறித்து அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø நானிலங்களை கூறல்
Ø நானிலங்களின் தன்மையினைக் கூறல்
Ø தமிழர்களின் வணிகம் பற்றிக் கூறல்
Ø ஏற்றுமதி, இறக்குமதி பற்றிக் கூறல்
Ø பொருட்களை வாங்குவதும், விற்பதும் வணிகம் என்பதனை உணர்த்துதல்
Ø அன்றைய வணிகத்தை இன்றைய வணிகத்தோடு ஒப்பிடல்
கருத்துரு வரைபடம் :
நானிலம் படைத்தவன்
விளக்கம் :
நானிலம் படைத்தவன்
Ø தமிழன் பெருநிலப்பரப்பைத் திருத்தி பண்படுத்தினான்
Ø ஊர்,நகரம்,நாடு உருவாக்கினான்
Ø நிலங்களை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என நால்வகைப்படுத்தினான்
Ø அச்சம் தரும் போர்களின் வெற்றி கண்டான்
Ø இமயமலையில் கொடியினை நட்டான்
Ø ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்
Ø கண்டங்கள் தோறும் வணிகம் செய்தான்
Ø அவன் எதற்கு அஞ்சாதவன்
Ø ஆசிரியர் : முடியரசன் ( துரைராசு).
Ø திராவிட நாட்டின் வானம்பாடி என அழைக்கப்பட்டவர்
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு அறிதல்
Ø பாடலின் மையக் கருத்தை அறிதல்
Ø பண்டைய தமிழர் வணிகம் பற்றி அறிதல்
Ø பாடலின் நயங்களை உணர்தல்
மதிப்பீடு :
LOT :
Ø நானிலம் பிரித்து எழுதுக.
Ø நிலம் என்பது யாது?
MOT :
Ø பண்டம் என்பது என்ன? தொடரில் அமைத்துக் கூறுக
Ø தமிழன் எதற்கு அஞ்சினான்?
HOT
Ø காடுகளில் வாழ்ந்த மனிதன் எவ்வாறு படிப்படியாக நாகரிகம் அடைந்திருப்பான் எனக் கூறுக
Ø பண்டைய வணிகமும், இன்றைய வணிகமும் பற்றிக் கூறுக
கற்றல் விளைவுகள் :
Ø 614 – புதிய சொற்களை தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்துதல் அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளை புரிந்து கொள்ள முயலுதல்
Ø 609 – மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல் மற்றும் முடிவு செய்தல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தலுக்குரிய நிலங்களை அறிந்து எழுதுக
Ø நீங்கள் எவ்வாறு ஊக்கமடைவீர்கள் என்பதனை எழுதி வருக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை