வகுப்பு : ஆறாம் வகுப்பு
பருவம் : இரண்டு
பாடம் : தமிழ் இயல் : 01
பாடத்தலைப்பு : 1. மூதுரை
2. துன்பம் வெல்லும் கல்வி
அறிமுகம் :
Ø கல்வி கற்பதால் கிடைக்கும்
பயன்களை கூறுக.
Ø கற்பதனால் பின் நாளில் கிடைக்கும் விளைவுகளை கூறு என கல்வி
சார்ந்த வினாக்களைக் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி,
மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø கல்வியின் சிறப்பையும்
பயனையும் அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø
மூதுரை
கூறும் அறக்கருத்தினை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்
Ø
கல்வியினால் ஏற்படும் பயன்களை துன்பம் வெல்லும்
கல்வி பாடல் வாயிலாக கூறல்
Ø
இரு செய்யுள்களின் ஆசிரியர் குறிப்பு, நூற்
குறிப்பு பற்றிக் கூறல்
Ø
பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
கருத்துரு வரைபடம் :
மூதுரை
துன்பம் வெல்லும் கல்வி
விளக்கம் :
மூதுரை
Ø மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது
பொருள்
Ø இந்நூலின் ஆசிரியர் ஒளவையார். இவர் ஆத்திசூடி, கொன்றை
வேந்தன், நல்வழி
போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்
Ø மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து
பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே
சிறந்தவர்.
Ø மன்னனுக்குத்
தன் நாட்டில் மட்டுமே சிறப்பு.
Ø கல்வி
கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.
துன்பம்
வெல்லும் கல்வி
Ø எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப்
பாடியவர் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்
Ø மக்கள்
கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்
Ø நாம்
நூல்ளை கற்றதோடு அதன் பயனை மறக்கக் கூடாது.
Ø நல்லவர்கள் குறைசொல்லும்
படி வளரக் கூடாது.
Ø பெரியோர்
கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது.
Ø மேலான
அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழவேண்டும்
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்க குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø
பாடப்பகுதியினை வாசித்தல்
Ø
சிறு சிறுத் தொடர்களை வாசித்தல்
Ø
நீதி நூல்கள் பற்றி அறிதல் அறிதல்
Ø
கல்வியின் சிறப்பை உணர்தல்
Ø
கல்வி கற்றவர்களின் இயல்புகளை அறிதல்
Ø
பாடலை மனனம் செய்தல்
Ø
பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
மதிப்பீடு :
LOT
:
Ø மூதுரையை இயற்றியவர்
_______
Ø மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர்
________
MOT :
Ø கற்றவர்களின் பெருமைகளாக
மூதுரை கூறுவது யாது?
Ø எதை நம்பி வாழக் கூடாது?
HOT
Ø கல்வி கல்லாததால் ஏற்படும்
இழப்புகளை பட்டியலிடுக.
Ø நீங்கள் படித்து என்னவாக
வர விரும்புகிறீர்கள்? ஏன்?
கற்றல் விளைவுகள் :
Ø மிக நுட்பமான நூலை ஆய்தல்
Ø பாடல்கள் வழியே ஒன்றை குறித்து ஆழ்ந்த
கருத்துகளை பெறுதல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø கல்வி பற்றிய பழமொழிகள் மற்றும் பாடலடிகளை எழுதி வருக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை