வகுப்பு : ஆறாம் வகுப்பு
பருவம் : இரண்டு
பாடம் : தமிழ் இயல் : 02
பாடத்தலைப்பு : 1. மயங்கொலிகள்
2. திருக்குறள்
அறிமுகம் :
Ø ஒரே
மாதிரியாக ஒலிக்கும் சில சொற்களை கரும்பலகையில் எழுதி மாணவர்களிடம் அதன் பொருள் கேட்டு
அறிமுகம் செய்தல்
Ø திருக்குறள்
கதையினை கூறு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக்
காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø மயங்கொலிகள்
வேறுபாடுகள் அறிந்து மொழியை சரியாகப் பயன்படுத்துதல்
Ø வாழ்விற்குத்
தேவையான அறக் கருத்துகளை இலக்கியங்கள் மூலம் பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை
ஆர்வமூட்டல்
Ø
உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே
வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள்
Ø
பல்லவ மன்னன் குறித்து அறிதல்
Ø
ண,ன,ந – கரம் பிறக்கும்
முறை பற்றிக் கூறல்
Ø
ல,ழ,ள –
எழுத்துகள் பிறக்கும் முறை பற்றிக் கூறல்
Ø
ர,ற – எழுத்துகள் பிறக்கும் முறை பற்றிக்
கூறல்
Ø
விருந்தோம்பல், கள்ளாமை,ஊக்கமுடைமை, பயனில
சொல்லாமை – அதிகாரங்கள் கூறும் கருத்துகளை வாழ்வியலுடன் தொடர்புப்படுத்துதல்
கருத்துரு வரைபடம் :
மயங்கொலிகள்
திருக்குறள்
விளக்கம் :
மயங்கொலிகள்
Ø டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும்,
Ø
தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம்
என்றும்,
Ø றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும்
அழைக்கப்படுகின்றன..
Ø ல- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின்
அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும்.
Ø ள- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல்
அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம்
தோன்றும்
Ø ழ- நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால்
ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில்
ஒலிக்கப்படும்)
Ø ர - நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத்
தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது
Ø ற - நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை
உரசுவதால் றகரம் தோன்றுகிறது.
திருக்குறள்
Ø
விருந்தோம்பல்
o விருந்தினர்
வரவேற்கும் முறை
Ø
கள்ளாமை
o களவாடுதல்
குற்றம்
Ø
ஊக்கமுடைமை
o ஊக்கம்
மிகப்பெரிய செல்வம்
Ø
பயனில சொல்லாமை
o பயனுடைய
சொற்களை நாம் பேசல் வேண்டும்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø மயங்கொலி எழுத்துகளை அறிதல்
Ø மயங்கொலி எழுத்துகளை உச்சரித்து பார்த்தல்
Ø மயங்கொலிகள் மூலம் காணும் பொருள் வேறுபாடு அறிதல்
Ø திருக்குறள் குறள்களை சீர் பிரித்து வாசித்தல்
Ø மனப்பாடக் குறளை மனனம் செய்தல்
Ø திருக்குறள் கூறும் கருத்துகளை வாழ்வியலோடு ஒப்பிடல்
மதிப்பீடு :
LOT :
Ø டகரத்தை
அடுத்துப் பிறப்பது _______ ( ண/ந/ன)
Ø திருக்குறளை
இயற்றியவர் யார்?
MOT
:
Ø ல,ழ,ள
– கரத்திற்கு வழங்கும் பெயர்கள் யாவை?
Ø ஊக்கம் உயர்ந்த செல்வமாக திருவள்ளுவர் கருத காரணம்
என்ன?
HOT
Ø இடையின ரகரம், வல்லின றகரம் இரண்டிற்கும் பொருள்
வேறுபாடு தரும் சொற்களை கூறுக
Ø நாம் வாழ்வில் எப்படிப்பட்ட சொற்களைப் பேச வேண்டும்?
எப்படிப்பட்ட சொற்களைப் பேசக் கூடாது?
கற்றல் விளைவுகள் :
Ø 614 – புதிய சொற்களை தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை
வெளிப்படுத்துதல் அகராதிகளைப் பார்த்து அவற்றின்
பொருளை புரிந்து
கொள்ள முயலுதல்
Ø 609 – மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து குறிப்பிட்ட
செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல் மற்றும்
முடிவு
செய்தல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø பொருள் வேறுபாடு மயங்கொலி சொற்களைக் கண்டு அவற்றின்
பொருள் எழுதி வருக.
Ø நீங்கள் எவ்வாறு ஊக்கமடைவீர்கள் என்பதனை எழுதி வருக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை