வகுப்பு : ஆறாம் வகுப்பு
பருவம் : இரண்டு
பாடம் : தமிழ் இயல் : 01 , 02
பாடத்தலைப்பு : 1. இன எழுத்துகள்
2. ஆசாரக்கோவை
அறிமுகம் :
Ø உனது வகுப்பில் உனக்கு
மிகவும் பிடித்த நண்பர் யார்? ஏன் அவர் உனக்கு நண்பர்?
Ø உனக்கு யாரேனும் உதவி
செய்து உள்ளார்களா? எப்படிப்பட்ட உதவி செய்துள்ளனர்?
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø சொற்களில் எழுத்துகள்
அமையும் முறையறிந்து பயன்படுத்துதல்.
Ø நல்லொழுக்கப்பண்புகளை
அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø
இன
எழுத்துகள் பற்றி அறிதல்
Ø
ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள்
எனப்படும்.
Ø
ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு
மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.
Ø
ஆசாரகோவை என்னும் நீதி நூல் பற்றி அறிதல்
Ø
ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல
ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்
Ø
ஆசாரக்கோவைக் கூறும் நல்லொழுக்க வித்துகளை
நடைமுறை வாழ்வியலுடன் ஒப்பிடல்
கருத்துரு வரைபடம் :
இன எழுத்துகள்
ஆசாரக்கோவை
விளக்கம் :
இன
எழுத்துகள்
Ø
ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள்
எனப்படும்.
Ø ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின
எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.
Ø சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும்
அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
Ø இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே
இனமாகும்
Ø உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும்
இன எழுத்துகள் ஆகும்.
Ø குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன
எழுத்தாகும். ஔ என்னும் எழுத்துக்கு உ என்பது இன
எழுத்தாகும்..
ஆசாரக்கோவை
Ø பிறர்
செய்த உதவியை மறவாதிருத்தல்;
Ø பிறர் செய்யும்
தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்;
Ø இனிய
சொற்களைப் பேசுதல்;
Ø எவ்வுயிர்க்கும்
துன்பம் செய்யாதிருத்தல்;
Ø கல்வி
அறிவு பெறுதல்;
Ø எல்லோரையும்
சமமாகப் பேணுதல்;
Ø அறிவுடையவராய்
இருத்தல்;
Ø நற்பண்புகள்
உடையவரோடு நட்புக் கொள்ளுதல்
Ø எட்டும்
நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும்.
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்க குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
செயல்பாடு :
Ø
பாடப்பகுதியினை வாசித்தல்
Ø
சிறு சிறுத் தொடர்களை வாசித்தல்
Ø
தமிழ் எழுத்துகளில் இன எழுத்துகள் அறிதல்
Ø
சொற்களில் முறையாக எழுத்துகளை அமைத்து சொற்கள் உருவாக்கல்
Ø
எந்த்தெந்த எழுத்திற்கு எந்தெந்த எழுத்துகள் இனமாக
வரும் என அறிதல்
Ø
ஆசாரக் கோவைப் பற்றி அறிதல்
Ø ஆசாரக்கோவை எனும் நீதி நூலில் கூறப்பட்டுள்ள
அறக்கருத்துகளை
வாழ்வில் பின்பற்றுதல்
மதிப்பீடு :
LOT
:
Ø இன எழுத்துகள் என்பது
யாது?
Ø ஆசாரக்கோவை ________
நூல்களில் ஒன்று
MOT :
Ø உயிர் எழுத்துகளில் இன
எழுத்துகள் யாவை?
Ø எட்டு நல்லொழுக்க வித்துகள்
யாவை?
HOT
Ø ஆய்த எழுத்துக்கு இன
எழுத்து உண்டா? இல்லையா? காரணம் கூறுக.
Ø உங்கள் நண்பரிடம் உங்களுக்கு
பிடித்த பண்புகளை கூறுக,
கற்றல் விளைவுகள் :
Ø 604 - பல்வேறு சூழல்களில் பிறரால் சொல்லப்பட்ட
சொற்களை திரும்பக் கூறல்
Ø 610 பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித்
தமிழில் உள்ள பனுவல்களை படித்துப் புரிந்து கொண்டு அவற்றின் மீதான கருத்துரைகளைப் பகிர்தல்
தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø இன எழுத்துகளை பட்டியலிடுக
Ø நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வாறெல்லாம் உதவி புரியலாம் என பட்டியலிடுக.
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை