10TH - TAMIL-SALEM DT- QUARTERLY EXAM -23 - ANSWER KEY - PDF

  

 சேலம் – காலாண்டுத் தேர்வு  -2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 9

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ.சருகும் சண்டும்

1

2.

இ. அன்மொழித் தொகை

1

3.

ஆ. 3,1,4,2

1

4.

ஈ. சிற்றூர்

1

5.

அ. கூவிளம் தேமா மலர்

1

6.

இ. பால் வழுவமைதி, திணை வழுவமைதி

1

7.

ஈ. மன்னன், இறைவன்

1

8.

ஈ. வறுமை இல்லாததால்

1

9.

ஆ. உமா மகேஸ்வரி

1

10.

இ.௪ ,௨

1

11.

இ. அறியா வினா, சுட்டு விடை

1

12 .

ஆ. பரிபாடல்

1

13 .

அ. கீரந்தையார்

1

14 .

இ. பண்புத்தொகை

1

15

இ. குளிர்ந்த மழை

 

பகுதி - 2

16

அ. சிலேடை அணி எனப்படுவது யாது?

ஆ. ‘ வால்காவிலிருந்து கங்கை வரை ‘ என்ற நூலை எழுதியவர் யார்?

1

1

17.

காலை நேரம் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் . அவரை மாலையிட்டு வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!"என்றார் .எல்லோரும்   அந்தச் சொல்லின் சிலேடை நயத்தை மிகவும் சுவைத்தனர் .

2

18.

உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

2

19

ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம் ஆகும்.

2

20

நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு எனும் ஐம்பெரும் பூதங்கள்

2

21.

குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை

2

எனபரிவு - 2

22

தொழிற்பெயர்

வினையாலணையும் பெயர்

வினை, பெயர்த்தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும்

தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும்

காலம் காட்டாது

காலம் காட்டும்

1

1

23

அமர்ந்தான் – அமர் + த்(ந்)+த்+ ஆன்

அமர் – பகுதி

த்(ந்) – சந்தி

ந் – ஆனது விகாரம்

த் – இறந்த கால இடைநிலை

ஆன் – ஆண்பால் வினை முற்று விகுதி

1

1

24.

v  உடுப்பதூஉம் உண்பதூஉம் – இன்னிசை அளபெடை.

v  செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை

2

25

அ. விடுக்கு வீடு என எழுதினான்

ஆ. கொடுக்கு கோடு  என எழுதினான்

1

1

26

அ. சின்னம்          

ஆ. புற ஊதாக்கதிர்கள்

1

1

27

அ. நினை

ஆ. ஒரு சோறு பதம்

1

1

28

அ. அழகிய  கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்

ஆ) ஒழுக்கமான கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்

1

1

26

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

அ. புதுமை                ஆ. காற்று

2

பகுதி – 3

29

Ø  காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø  தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

Ø  புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

Ø  தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்

3

30

அ. மீண்டும் மீண்டும்

ஆ. தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது

இ. பெய்மழை

3

31

·      ஒரளவு மேம்படுத்துகின்றன.

·      மனிதனுக்கு தேவையான தேவைகளை மேம்படுத்தி இருக்கிறது.

·      மனிதனிடம் இரக்கம், அன்பு போன்றவை இல்லை.

·       மனிதன் இயந்திரதனமான வாழ்வை வாழ்கின்றான்

3

பகுதி -3 / பிரிவு - 2

32

Ø  அறிவார்ந்த பெரியோரைப் போற்றி உறவாகக் கொள்ளுதலே, ஒருவர் பெற வேண்டிய அரிய பேறுகளுள் எல்லாம் அரிய பேறு

Ø  குற்றம் கண்ட இடத்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடி கொள்ளாத அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர்கள் இல்லை எனினும், தானே கெட்டழிவான்.

Ø  நல்லவர் ஒருவர் நட்பைக் கைவிடுவது, பலரைப் பகைத்துக் கொள்வதனை விட பன்மடங்கு தீமை உடையதாகும்.

3

33

·                     கடற்கரைகளில் ஓய்வு விடுதிகள் பெருகி உள்ளன.எனினும் மீன் பிடித்தல்உப்பு காய்ச்சுதல் தொழில்கள் நடைபெறுகின்றன.

·                     மலைப்பகுதிகளில் ஓய்வு இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன.எனினும் காபி,தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.

·                     நிலப்பகுதிகளில் வீடுகள்,தொழிற்சாலைகள் பெருகி உள்ளனஎனினும் உழவுத் தொழில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

3

34

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “ கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர்,தாயார்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்                                             - நப்பூதனார்!

3

34

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

குலசேகராழ்வார்

 

பகுதி – 3 / பிரிவு - 3

35

கண்ணே கண்ணுறங்கு

விளித்தொடர்

மாமழை

உரிச்சொல் தொடர்

மாம்பூவே

விளித்தொடர் தொடர்

  பாடினேன் தாலாட்டு

வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி

அடுக்குத் தொடர்

3

36

Ø  ஆற்றுநீர் பொருள்கோள்

Ø  விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைவது.

பொருத்தம் : முயற்சி ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும்முயற்சி இல்லாதிருந்தால் வறுமை சேரும்இக்குறள் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது

3

37

இலக்கணம்: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல்.

.கா:

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்

..................................................................................

................... கூவினவே கோழிக் குலம்.

விளக்கம்:

அதிகாலை விடிந்து கோழிகளும் இயல்பாக கூவும்.ஆனால் புலவர் தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார்.

3

பகுதி - 4

38

v  அன்னை மொழியானவள்

v  அழகான செந்தமிழானவள்

v  பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி

v  பாண்டியன் மகள்

v  திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

v  பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்கணக்குஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்

5

38ஆ

·         தொழில் செய்வதற்கு தேவையான கருவி,அதற்கு ஏற்ப காலம்,செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும் பொருத்தமாக அமைகிறது.

·         மனவலிமை,குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல்,நூல்களைக் கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும்.

·         இயற்கையான நுண்ணறிவு,நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும் நடைபெறாது

·         ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து தான் நாம் செயல்பட வேண்டும்.

5

39அ

அனுப்புநர்

          அ அ அ அ அ,

          100,பாரதி தெரு,

          சக்தி நகர்,

          சேலம் – 636006.

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

          உணவு பாதுகாப்பு ஆணையம்,

          சென்னை – 600001

ஐயா,

பொருள்தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – சார்பு

          வணக்கம்நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன்அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்ததுஇத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன்தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                     இப்படிக்கு,

1. விலை இரசீது – நகல்                                                          தங்கள் உண்மையுள்ள,

2. விலைப்பட்டியல்நகல்                                                                     அ அ அ அ அ.

இடம் : சேலம்

நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி:

பெறுநர்

        உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம்,

சென்னை – 600001

5

39ஆ

1.        தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.      குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன்.

3.      உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

4.      நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

5.      வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டுஅதன்படி நடப்பேன்.

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி

மரம் என் அழிவைப் பற்றி எழுது என்றது

மனிதன் என் அறியாமையைப் பற்றி எழுது என்றான்

நான் எழுதுகிறேன்

மரமே வரம் என்று

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

திரண்ட கருத்து :

தமிழ் தேனைவிட இனிமையானது. தென்னாடு பெஉமை கொள்கிறது.உடலில் ஒளிவிடும் உயர் மொழி. உணர்வுக்கு உணர்வாய் விளங்குவது.வானத்தை விட உயர்ந்த வண்டமிழ் மொழியே. கண்களாக விளங்கும் மொழி.தானாகவே சிறப்புற்று வியளங்குவது. இனியும் தழைத்தோங்குவது.

மையக்கருத்து :

தமிழ்மொழியின் சிறப்புகளை மிகவும்  உயர்வாக கூறியுள்ளார். இரு கண்களாக விளங்குகிறது என உயர்வுப்படக் கூறியுள்ளார்.

மோனை நயம் :

தேனினும் – தென்னாடு     னினும் – ணர்வினும் ( சீர் மோனை )

எதுகை நயம் :

தேனினும் – ஊனினும்      வானினும் – தானி ( அடி எதுகை )

இயைபு நயம் :

மொழியே - மொழியே

அணி நயம் :

தமிழை மிக உயர்வாக கூறியுள்ளதால் உயர்வு நவிற்சி அணி வந்துள்ளது.

5

42ஆ

மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா.

தேவி: ஆமாம்நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.

மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தைச் செலவிடுகிறது.

தேவி: யாருக்குத் தெரியும்? நம்நாடு எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவுகளையும் செலுத்தலாம்

5

45

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1.மீளும் துயர்   2. வெளிபடுத்திக்காட்டு    3. தொலைவில் அமர்க

4. எழுதிய கவிதை   5. கொடுக்காமல் சிவந்த

5

பகுதி - 5

43அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மன்னனும் இடைக்காடனும்

இறைவனிடம் முறையிடல்

இறைவன் நீங்குதல்

மன்னன் முறையிடல்

புலவனுக்கு சிறப்பு செய்தல்

முடிவுரை

முன்னுரை :

        கபிலரின் நண்பர் இடைக்காடனரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு இறைவன புலவனின் குரலுக்கு செவி சாய்த்த நிகழ்வைக் இக்கட்டுரையில் காண்போம்.

மன்னனும் இடைக்காடனும்

·         மன்னன் குசேலேப் பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையை பாடினார்

·         மன்னன் அதனை பொருட்ப்படுத்தாமல்  இகழ்ந்தார்

·         புலவன்  அங்கிருந்து வெளியேறினார்.

இறைவனிடம் முறையிடல்

·         இடைக்காடன் இறைவனிடம் முறையிடல்

·         மன்னன் தன்னை இகழவில்லை.

·         இறைவனான உன்னை இகழ்ந்தான்.

இறைவன் நீங்குதல்

·         இறைவன் இதனைக் கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார்

·         வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார்.

மன்னன் முறையிடல் :

·         மன்னன் இறைவன் நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான்.

·         இடைக்காடன் பாடலை இகழ்ந்தது தவறு தான் பொறுத்தருள   வேண்டினான்

புலவனுக்கு சிறப்பு செய்தல்

·         மன்னன் இடைக்காடனாரிடம் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல்

·         இறைவன் சொல் கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான்

முடிவுரை :

        மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது.

இடைக்கானார் புலவரின் பாடலை இகழ்ந்தன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிச்சாய்த்தார்

8

43ஆ

சுந்தரனார் வாழ்த்து

பெருஞ்சித்திரனார் வாழ்த்து

கடலெனும் ஆடை உடுத்திய நிலமகளுக்கு முகம் பாரத கண்டம்

மண்ணுலகப் பேரரசி

நெற்றியில் மணம் வீசூம் திலகமாக தமிழ்நாடு

சங்க இலக்கியங்கள் அணிகலன்கள்

எல்லா திசைகளில் உன் புகழ்

தும்பி போல உன்னை சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்

 

44அ

குறிப்புச் சட்டம் எழுதி உட்தலைப்புகள் இட்டு எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்

Ø  மயில்கள் அழகுற ஆடுகிறது.

Ø  தாமரை மலர்கள் விளக்கு போல் விரிகிறது.

Ø  மேகங்களின் இடி மத்தளமாய் ஒலிக்கிறது.

Ø  குவளை மலர்கள் கண்கள் விழித்து பார்ப்பது போல உள்ளது.

Ø  அலைகள் திரைச்சீலைகளாய் விரிகிறது.

Ø  வண்டுகளின் ரீங்காரம் மகர யாழின் இசைப் போல இருக்கிறது.

8

44ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

        மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரி :

·         சாம் – பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

·         பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

·         மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

·         மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

·         பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

·         உனக்கு படிக்கத் தெரியாது என கூறினாள்.

·         மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

·         மேரிக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உணடானது.

·         ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேன்டும்.

·         மேரிக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

·         மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

·         சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

·         அதில் “ இந்த பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

உதவிக்கரம்

·         மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி

·         அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

·         அவள் மேல் படிப்புக்காக டவுணுக்கு செல்கிறாள்.

மேல்படிப்பு

·         மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது.

·         மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்தில் வந்தார்கள்.

முடிவுரை

        எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்.

 

8

45அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

பிறப்பும்,கல்வியும்

விண்வெளிப் பயணம்

இறப்பு

விருது

முடிவுரை

முன்னுரை :

        விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம்.

பிறப்பும், கல்வியும் :

பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961 இல் பிறந்தார்.

          பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி

கல்வி :       கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம்

·         டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம்.

·         1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம்.   

·         பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

 

விண்வெளிப் பயணம்:

·         1995 இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார்,

·         சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார்.

வீர மரணம் :

·         2003இல் ஜனவரி 16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ் 107 இல மீண்டும் பயணம் செய்தார்.

·         அந்த விண்கலம் ஆய்வை முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர்

விருது:

·         நியூயார்க் நகரின் ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

·         பிப்ரவரி 1ந் தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

·         2011 முதல் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது.

முடிவுரை:

        மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

8

45ஆ

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருட்காட்சி

நுழைவுச் சீட்டு

பல்துறை அரங்கம்

அங்காடிகள்

பொழுதுபோக்கு

முடிவுரை

முன்னுரை :

எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

        மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

        பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

        அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

        வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள்கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

        சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

        எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

 

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்.

விடைக்குறிப்பு

பதிவிறக்கம் செய்ய  10 விநாடிகள்  காத்திருந்து பின் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post