மாநில அளவிலான கவிதைப் போட்டி - 2023
சுதந்திர இந்தியா - 2023
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். நாம் இந்த இந்திய திருநாட்டில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம். அதற்கு பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை கொண்டு இருக்கிறது. இந்நாளில் நாம் அனைவரும் அவர்களின் தியாகங்களைப் போற்ற வேண்டும். இனி வரும் காலங்களில் எப்படி பட்ட இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்பது வகுப்பறையில் நான்கு சுவர்களில் தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவின் எதிர்காலமே வகுப்பறையின் நான்கு சுவர்களில் உள்ளது என்றால் அது மிகையாகது. மாணவர்களாகிய நீங்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். நீங்கள் வல்லவர்களாக மாறும் போது இந்தியாவும் வல்லமைக் கொண்டநாடாக மாறும். நீங்கள் உங்களின் இந்தியா எப்படி இருக்க வேண்டும் நினைக்கிறீர்களோ அந்த இந்தியாவாக மாற நாம் அதற்கேற்றவாறு உழைக்க வேண்டும். இந்த 2023 சுதந்திர தினத்தில் இந்தியாவின் சுதந்திரத்தைப் போற்றவும், பல சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் உங்கள் தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் இணைந்து மாநில அளவிலான கவிதைப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களின் உயர் சிந்தனைத் திறனை வளர்க்கும் கவிதைப் போட்டியில் கலந்துக் கொள்ளலாம். இந்த கவிதைப் போட்டியில் 6 முதல் 8 வகுப்பு வரை ஒரு பிரிவும், 9 மற்றும் 10 வரை ஒரு பிரிவும், 11 மற்றும் 12 வகுப்புகளுக்கும் ஒரு பிரிவாகவும் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களுடைய கவிதைகளை எழுதி உங்களின் வகுப்பாசிரியர் அல்லது தலைமை ஆசிரியர் அவர்களிடம் கையொப்பம் பெற்று அதனை PDF வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
போட்டியில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி தங்களுடைய படைப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும். எப்படி தங்களின் பெயரைப் பதிவு செய்து படைப்பை பதிவேற்றம் செய்வது என்பது குறித்த காணொளியை கண்டு முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களின் உயர்சிந்தனையை வளர்க்கும் இப்போட்டியில் தங்களுடைய கவிதை சொந்த படைப்பாக இருக்க வேண்டும். இணைய தளங்களிலிருந்தோ? புத்தகங்களிலிருந்தோ? மற்றவர்களிடம் எழுதி பெற்றோ அனுப்பப்க் கூடாது. அது முறையும் ஆகாது. தங்களின் சொந்த கைப்பட எழுதி அனுப்ப வேண்டும். தட்டச்சு செய்யக் கூடாது.
மாணவர்கள் சுதந்திர இந்தியா - 2023 என்னும் தலைப்பின் கீழ் கவிதை எழுதி அனுப்பலாம்.
போட்டியின் விபரம் அறிய