அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச்செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். சேலம் மாவட்டத்தில் 14-08-23 முதல் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை முதல் இடைத் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் மூலம் அனைத்து வகுப்புகளுக்கும் மாதிரி முதல் இடைத் தேர்வு வினாத்தாளினை பதிவேற்றம் செய்து வருகிறோம். அந்த வகையில் ஒன்பதாம் வகுப்பிற்கான முதல் இடைத் தேர்வு 50 மதிப்பெண் கொண்ட வினாத்தாளானது தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளினை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள CLICK HERE என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் இந்த ஒன்பதாம் வகுப்பு மாதிரி முதல் இடைத் தேர்வு வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
_______________________________________________________________________________________________________
ஒன்பதாம் வகுப்பு
முதல் இடைத் தேர்வு – 2023
நேரம் : 1.30
மணி மொத்த மதிப்பெண் : 50
I. அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:- 5×1=5
1.
‘’ தமிழ்விடுதூது ____ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
அ) தொடர்நிலைச்
செய்யுள் ஆ) புதுக்கவிதை இ) சிற்றிலக்கியம்
ஈ) தனிப்பாடல்
2
பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.
கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக
______
அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும்
_______
அ) வந்தான்,
வருகிறான் ஆ)
வந்துவிட்டான், வரவில்லை
இ) வந்தான், வருவான் ஈ) வருவான், வரமாட்டான்
3.
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்த
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!.............
இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்
அ) முரண்,எதுகை,இரட்டைதொடை
ஆ) இயைபு,அளபெடை,செந்தொடை
இ) மோனை,எதுகை,இயைபு ஈ) மோனை,முரண்,அந்தாதி
4. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) அகழி ஆ) ஆறு இ)
இலஞ்சி ஈ) புலரி
5. பொருத்தமான பெயரடையை காண்க:- ________________ விலங்கிடம் பழகாதே
அ) நல்ல ஆ) இனிய இ)
பெரிய ஈ) கொடிய
II) பாடலைப்
படித்து வினாக்களுக்கும் விடையளி:- 3×1=3
“ மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு
பூவி ரித்த புதுமதுப் பொங்கிட
வாவி யிற்பொலி நாடு வளந்தரக்
காவி ரிப்புனல் கால்பரந்தோங்குமால்”
6.‘ வாவி ‘
என்பதன் பொருள்
அ. வண்டு ஆ. பொய்கை இ. தேன் ஈ. சங்கு
7. இவ்வடிகள் இடம் பெற்ற நூல்
அ. பெரிய புராணம் ஆ. தமிழ்விடுதூது இ. புறநானூறு ஈ. நற்றிணை
8. இப்பாடலை
இயற்றியவர்
அ. யார் என
அறியப்படவில்லை ஆ. குடபுலவியனார் இ. சேக்கிழார் ஈ. தமிழன்பன்
III) எவையேனும்
மூன்று வினாக்களுக்கு விடையளி:- 3×2=6
9. விடைக்கேற்ற
வினா அமைக்க:-
அ. இந்திய நாடு
மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது எனக் குறிப்பிடுகிறார் ச.அகத்தியலிங்கம்
ஆ. இந்திய நீர்ப்
பாசனத்தின் தந்தை என அறியப்படுகிறார். சர்.ஆர்தர் காட்டன்
10.கண்ணி என்பதன்
விளக்கம் யாது?
11. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக
12. மணி நீரும்
மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண் – இக்குறள் கூறும் நாட்டின்
அரண்கள் யாவை?
13. நீங்கள்
பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
Iv) எவையேனும்
மூன்று வினாக்களுக்கு விடையளி:- 3×2=6
14. கலைச்சொல்
தருக:- அ. Comparative grammar ஆ. Tropical
Zone
15. பிறமொழிச்
சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி, ஏற்ற துணைவினைகளை இட்டு எழுதுக.
மார்னிங் எழுந்து,
பிரஷ் பண்ணி, யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்குப் போனாள்
16. வீணையோடு
வந்தாள், கிளியே பேசு – தொடரின் வகையைச் சுட்டுக
17. துணைவினையின்
பண்புகள் எவையேனும் இரண்டு கூறுக
18. பொருத்தமான
வினைமுற்றாக மாற்றி கோடிட்ட இடம் நிரப்புக.
அ) உலகில் மூவாயிரம்
மொழிகள்______ ( பேசு ) ஆ) தவறுகளைத்
____________ ( திருத்து )
V) எவையேனும்
மூன்று வினாக்களுக்கு விடையளி:- 3×4=12
( வினா எண்
: 22 கட்டாயம் விடையளிக்க வேண்டும் )
19. காலந்தோறும்
தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
20. சோழர்
காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
21. தன்வினை,
பிறவினை எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.
22.” தித்திக்கும்
தெள்அமுதாய் “ – எனும் தமிழ்விடுதூது பாடலை
எழுதுக
VI) எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடையளி;- 2×5=10
23. உங்களின்
நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் கால் முளைத்த
கதைகள் என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
24. நயம்
பாராட்டுக.
கல்லும் மலையும் குதித்துவந்தேன் –
பெருங்
காடும்
செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி –
எங்கும்நான்
இறங்கித்
தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல
ஏரி
குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத
ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்
ஓடைகள்
பொங்கிட ஓடிவந்தேன்.
– கவிமணி
25.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
VII) விரிவான
விடையளி 1×8=8
24.அ) தூது
அனுப்பத் தமிழே சிறந்தது – தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.
(அல்லது)
ஆ) 'தண்ணீர்’ கதையைக்
கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக