அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச்செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். சேலம் மாவட்டத்தில் 14-08-23 முதல் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை முதல் இடைத் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் மூலம் அனைத்து வகுப்புகளுக்கும் மாதிரி முதல் இடைத் தேர்வு வினாத்தாளினை பதிவேற்றம் செய்து வருகிறோம். அந்த வகையில் எட்டாம் வகுப்பிற்கான முதல் இடைத் தேர்வு 50 மதிப்பெண் கொண்ட வினாத்தாளானது தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளினை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள CLICK HERE என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் இந்த ஒன்பதாம் வகுப்பு மாதிரி முதல் இடைத் தேர்வு வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
_______________________________________________________________________________________________________
முதல் இடைத் தேர்வு வினாத்தாள்
பாடம் : தமிழ் மொத்த மதிப்பெண் : 50
I. அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:- 5×1=5
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்__________
அ) வைப்பு ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழி
அ) கடல் ஆ) ஓடை இ) குளம் ஈ) கிணறு
3. ‘ இன்னோசை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
அ) இன் + ஓசை ஆ) இனி + ஓசை இ) இனிமை + ஓசை ஈ) இன் + னோசை
அ) வலிமையற்றவர் ஆ) கல்லாதவர் இ) ஒழுக்கமற்றவர் ஈ) அன்பில்லாதவர்
5. சரியான மரபுச் சொல்லைக் காண்க : பால் _____.
அ) குடி ஆ) பருகு இ) உண் ஈ) சாப்பிடு
II) கோடிட்ட இடம் நிரப்புக:- 3×1=3
6. ‘செவ்விந்தியர்கள் நிலத்தை _________ மதிக்கின்றனர்
7. உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக் கூறியவர் _______________
8. கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ________ என அழைக்கப்பட்டன
III) . பொருத்துக:- 2×1=2
9. தொல்காப்பியம் - அ. ஓரெழுத்து ஒரு மொழி
10. எழுத்து சீர்திருத்தம் - ஆ. வீரமாமுனிவர்
- இ. பழமையான இலக்கண நூல்
IV) அடி பிறழாமல் எழுதுக:- 3+2=5
11. “ வாழ்க நிரந்தரம் “ – பாரதியாரின் தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை எழுதுக.
12. “ தக்கார் “ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக
V) எவையேனும் ஐந்து வினாக்களுக்கும் விடையளி:- 5×2=10
13. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
14. உலகம் எவற்றால் ஆனது?
15. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?
16. விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?
17. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
18. புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
19. பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?
20.வினைமுற்று என்றால் என்ன?
VI) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:- 2×3=6
21. எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக
22. ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
23. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
VI) எவையேனும் இரண்டிற்கு விடையளி 2×2=4
25. மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள்
26. பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக. : கல், பூ
27. கலைச்சொல் தருக: அ. Vowel ஆ. Leopard
VII) விரிவான விடையளி:- 3×5=15
28. அ ) எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக. ( அல்லது )
ஆ) தாய் மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றை தொகுத்து எழுதுக.
29. அ. தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இ்ளங்குமரனார் கூறும் செய்திகளை தொகுத்து எழுதுக. ( அல்லது )
ஆ. ‘ வெட்டுக்கிளியும் சருகுமானும் ‘ – கதையைச் சுருக்கி எழுதுக
30. அ) நான் விரும்பும் கவிஞர் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக ( அல்லது )
ஆ) விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.
JOIN OUR GROUPS:
TELE GRAM : https://t.me/thamizhvithai
ஆக்கம் : தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம்