அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்களின் கற்றலில் அக்கறையுடன் செயல்படும் நமது கல்விவிதைகள் மற்றும் தமிழ்விதை வளதளமானது பல்வேறு வகையான கற்றல் வளங்களை தயாரித்து வழங்கி வருவது நீங்கள் அறிந்த ஒன்று. அந்த வகையில் பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இளந்தமிழ் சிறப்பு வழிகாட்டியை வழங்கியுள்ளோம். நீங்கள் அனைவரும் நல்ஆதரவினை வழங்கியுள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு உத்வேகமாகவும் அமைந்துள்ளது. அதற்கு கல்விவிதைகள் மற்றும் தமிழ்விதை வலைதளங்ள் கோடானக் கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. தற்போது காலாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளதால் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாளினை வழங்க உள்ளோம். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு மூன்று விதமான மாதிரி வினாத்தாளினை வழங்க உள்ளோம். அந்த வினாத்தாள்கள் எளிமை, நடுநிலை, கடினம் என்ற அடிப்படையில் உங்களுக்கு வழங்குகிறோம். இதனைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு நீங்கள் போதிய பயிற்சியை வழங்கலாம். உங்களுக்கு எவ்விதமான வினாத்தாள்கள் வேண்டும் என்ற கருத்துகளைக் கூறினாலும் அதனை உங்களுக்கு வழங்குவதில் உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் முயற்சிக்கும்.
தற்போது பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான முதல் மாதிரி வினாத்தாளினை உங்களுக்கு இங்கு வழங்கியுள்ளோம். இந்த வினாத்தாள் முற்றிலும் எளிமையான வினாத்தாளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் வினாத்தாள்கள் நடுநிலைமை, கடினம என்ற அடிப்படையில் வழங்கப்படும். மாணவர்கள் மூன்று விதமான வினாக்களையும் பயிற்சி மேற்கொள்ளும் சமயத்தில் நாம் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்ணை பெற இயலும் என்பது திண்ணம்.