6TH-TAMIL-TERM1-UNIT1-50MARK QUESTION-PDF

 

ஆறாம் வகுப்பு

தமிழ்

பருவம் - 1

இயல் - 1

அலகுத் தேர்வு வினாத்தாள் - 50 மதிப்பெண்

ஆறாம் வகுப்பு

அலகுத் தேர்வு வினாத்தாள்

இயல் - 1

பாடம்    : தமிழ்                                                                            மொத்த மதிப்பெண் : 50

I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                        5×1=5

1. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும்

அ) மகிழ்ச்சி   ஆ) கோபம்    இ) வருத்தம் ஈ) அசதி                         

2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது

 அ) மேதினி  ஆ) நிலா  இ) வானம்  ஈ) காற்று

3. ‘ சீரிளமை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

அ) சீர் + இளமை  ஆ) சீர்மை + இளமை   இ) சீரி + இளமை  ஈ) சீற் + இளமை

4. . ’அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------

அ) அமுது + தென்று  ஆ) அமுது + என்றுஇ) அமுது + ஒன்று         ஈ) அமு + தென்று

5. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல் _____

அ) கொ        ஆ) ம            இ) கண்        ஈ) ஈ

II) கோடிட்ட இடம் நிரப்புக:-                                                                                           5×1=5

6. ‘ இடப்புறம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

7.  “ தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்___

8. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டுமெனில் அது ___ அடிப்படையில்  வடிவமைக்கப்பட வேண்டும்.

9. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல் _______

10. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

III) . பொருத்துக:-                                                                                                     5×1=5

11. 1. விளைவுக்கு              – இரண்டு மாத்திரை

12. அறிவுக்கு                    - வேல்

13. இளமைக்கு                  - நீர்

14. புலவர்க்கு                    - தோள்

15. பூ                               - பால்

IV) எவையேனும் ஐந்து வினாக்களுக்கும் விடையளி:-                                                    5×2=10

16. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

17. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

18. தமிழ் ஏன் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது?

19. மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.

20. பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக.

அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல்

அ - ------- தருவது தமிழ்

ஆ -  ­­­­­­______தருவது தமிழ்

இ - ______தருவது தமிழ்

21. ’மை’ என்னும் எழுத்தில் முடியும் சொற்களை எழுதுக

22 . கலைச்சொல் தருக : அ) Internet                  ஆ)Voice Search

V) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி:-                                                    3×4=12

18. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

19. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன?

20. அஃறிணை, பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது?

21. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

VI) அடிமாறாமல் எழுதுக                                                                                           1×5=5

22. “ தமிழுக்கும் அனுதென்று “ எனத் தொடங்கும் இன்பத் தமிழ் வாழ்த்து பாடலை எழுதுக.

VII) விரிவான விடையளி:-                                                                                         1×5=5

23. அ ) தமிழ் மொழி படிக்கவும், எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?  ( அல்லது )

      ஆ) கடிதம் எழுதுக.   விடுப்பு விண்ணப்பம்.

VIII) பத்தியைப் படித்து பதில் தருக:-                                                                       1×3=3

விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பல பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல் நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.

 1. பழமொழியின் சிறப்பு சொல்வது

அ) விரிவாகச்          ஆ) சுருங்கச்           இ) பழைமையைச்             ஈ) பல மொழிகளில்

2. நோயற்ற வாழ்வைத் தருவது  ______

3. உடல்நலமே ________  அடிப்படை

 click here to get pdf

JOIN OUR GROUPS:

WHATSAPP :            https://chat.whatsapp.com/FQTE7owwv618swxkBlTONp

TELE GRAM :            https://t.me/thamizhvithai

ஆக்கம் : தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம்

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post