10TH - TAMIL - WEEKWISE QUESTIONS - WEEK-4-PDF

பத்தாம் வகுப்பு

தமிழ்  - வாரத்தேர்வு

தேர்வு எண் : 04                            இயல் - 2                                 மதிப்பெண் : 40

) அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                       5×1=5

1. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

   உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

) உருவகம்,எதுகை        ) மோனை,எதுகை ) முரண்,இயைபு ஈ) உவமை,எதுகை

2. செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாக கொண்டாடி வருகிறோம்.

  செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே

 செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள்  தமிழர்கள்!

அ) செய்தி 1 மட்டும் சரி                ஆ) செய்தி 1,2 ஆகியன சரி

இ) செய்தி 3 மட்டும் சரி                ஈ) செய்தி 1,3 ஆகியன சரி

3. பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப் பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

இ) கடல் நீர் ஒலித்தல்                  ஈ) கடல் நீர் கொந்தளித்தல்

4. பெரிய மீசை சிரித்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

) பண்புத்தொகை           ) உவமைத்தொகை        ) அன்மொழித்தொகை 

) உம்மைத்தொகை

5. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல்        -        1. மேற்கு       ஆ) கோடை            -        2. தெற்கு

இ) வாடை              -        3. கிழக்கு      ஈ) தென்றல்            -        4. வடக்கு

அ) 1,2,3,4               ஆ) 3,1,4,2              இ) 4,3,2,1               ஈ) 3,4,1,2

ஆ. அனைத்து வினாவிற்கும் விடையளி                                                                    5×2=10

6 நமக்கு உயிர் காற்று

  காற்றுக்கு வரம் மரம்மரங்களை

  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான

  இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

7. வசன கவிதைகுறிப்பு வரைக.

8. தண்ணீர் குடி,தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.

9.பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

10. மாஅல் – பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

 

) அனைத்து வினாவிற்கும் விடையளிக்க                                                    2×3=6

11. சோலைக் ( பூங்கா ) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

12. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

ஈ அடிமாறாமல் எழுதுக                                                                            1×5=5

13. சிறுதாம்பு எனத் தொடங்கும் முல்லைப் பாட்டு பாடலை எழுதுக.

உ) வாழ்த்து மடல் எழுதுக:-                                                                      1×5=5

14.‘ மரம் இயற்கையின் வரம் ‘ என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

ஊ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-                                                     1×5=5

15.



எ) கலைச்சொல் தருக :-                                                                        1×4=4

16. Torando

17. Whirlwind

18. Land Breeze

19. Storm

       

 CLICK HERE

 

         

WWW.KALVIVITHAIGAL.COM

WWW.TAMILVITHAI.COM

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post