பத்தாம் வகுப்பு
தமிழ் - வாரத்தேர்வு
தேர்வு எண் : 03 இயல்
- 1 மதிப்பெண் : 40
அ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி
5×1=5
1.
‘ மெத்த வணிகலன் ‘ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது _______
அ)
வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ)
ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும் ஈ) வணிக
கப்பல்களும் அணிகலன்களும
2.
காய்ந்த
இலையும்,காய்ந்த
தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில்
அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது___________________
அ)
இலையும்,சருகும் ஆ)
தோகையும் சண்டும் இ)
தாளும் ஓலையும் ஈ)
சருகும் சண்டும்
3.
எந்தமிழ்நா என்பதைப்
பிரித்தால் இவ்வாறு வரும்____________
அ) எந் + தமிழ் + நா ஆ) எந்த + தமிழ் + நா இ) எம் + தமிழ் + நா ஈ)
எந்தம் + தமிழ் + நா
4.
கேட்டவர் மகிழப்
பாடிய பாடல் இது
– தொடரில் இடம்
பெற்றுள்ள தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே________________
அ) பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய இ) கேட்டவர்;பாடிய ஈ) பாடல்;கேட்டவர்
5.
வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும்
பயிர்வகை________
அ) குலை வகை ஆ)
மணிவகை இ) கொழுந்து வகை ஈ) இலை வகை
ஆ. அனைத்து வினாவிற்கும்
விடையளி
2×3=6
6. தமிழன்னையை வாழ்த்துவதற்கான
காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை?
7. தமிழழகனார் தமிழையும்,கடலையும்
இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக
இ
) அனைத்து வினாவிற்கும் விடையளிக்க 3×8=24
8. மனோன்மணீயம் சுந்தரனாரின்
வாழ்த்துப்பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு
ஒன்றை உருவாக்குக.
9.
தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவைக் குறித்தும் தமிழ் மன்றத்தில்
பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.
10.
சான்றோர் வளர்த்த தமிழ் – என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
ஈ
நயம் பாராட்டுக- 5×1=5
தேனினும் இனிய செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென்
மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினும் குணர்வதாய் ஒளிர்தமிழ்
மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
தானனி சிறப்புறந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவதாய் தண்டமிழ்
மொழியே - கா.நமச்சிவாயர்
CLICK HERE TO PDF