10TH - TAMIL - UNIT TEST - UNIT 9

 

 

வகுப்பு : 10                                                        அலகு : இயல் -9

பாடம்    : தமிழ்                                                       மொத்த மதிப்பெண் : 50

I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                    5×1=5

1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது _

அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்        

ஆ)  பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

இ) அறிவியல் முன்னேற்றம்                     

ஈ) வெளிநாட்டு முதலீடுகள்

2. இஸ்மத் சன்னியாசி என்பது ___________ சொல்

அ) வடமொழி                  ஆ) உருது                      இ) பாரசீகம்        ஈ) அரேபியம்

3. ஓரிடத்தில் நின்ற சொல் செய்யுளின் அனைத்து இடங்களிலும் சென்று பொருந்தி பொருளை விளக்குவது _____ அணி

அ) தற்குறிப்பேற்ற அணி               ஆ) தீவக அணி               இ) நிரல்நிறையணி

ஈ) தன்மையணி

4. தந்தையை இழந்த தன் மகளை தாய் மிகவும் பாதுகாப்பாக வளர்த்து வந்தாள் – இத்தொடருக்குப் பொருத்தமான உவமையைக் காண்க

) தாமரை இலை நீர் போல                    ) மழை முகம் காணாப் பயிர் போல

இ. கண்ணினைக் காக்கும் இமை போல   ஈ.) சிலை மேல் எழுத்து போல         

5. “ பிரிந்தன புள்ளின் கானில்

    பெரிதழுது இரங்கித் தேம்ப     - பாடலடிகளில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருளைத் தெரிவு செய்க

அ) கிளை, துளை ஆ) நிலம்,வாட     இ) காடு,வாட     ஈ) காடு,  நிலம்

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                                      4×1=4

“பூக்கையைக் குவித்துப் பூவே

புரிவோடு காக்கென்று அம்பூஞ்

சேக்கையைப் பரப்பி இங்கண்

திருத்திய அறத்தை யாவும்

யாக்கையைப் பிணித்தென்று ஆக

இனிதிலுள் அடக்கி வாய்ந்த

ஆக்கையை அடக்கிப் பூவோடு

அழுங்கணீர் பொழிந்தான் மீதே“

6. இப்பாடலின் ஆசிரியர்

அ. இளங்கோவடிகள்       ஆ. கண்ணதாசன்           இ. வீரமாமுனிவர்

ஈ. அதிவீரராம பாண்டியன்

7. இப்பாடல் இடம்பெற்ற நூல்-------

அ. காலக்கணிதம்            ஆ. தேம்பாவணி இ. சிலப்பதிகாரம்   ஈ. இரட்டுறமொழிதல்

8. இப்பாடலில் உள்ள எதுகைச் சொற்கள் _________

அ. பூக்கை - பூவை                     ஆ. குவித்து - காக்கென்று           

இ. ஆக்கை - அழுங்கணீர்           ஈ. சேக்கை - யாக்கை

9. யாக்கை  – என்பதன் பொருள்

அ. உணவு                     ஆ. உறக்கம்                   இ. உடல்           ஈ. உடை

III) எவையேனும் மூன்று வினாக்களுக்கும் விடையளி:-                             3×2=6

10. விடைக்கேற்ற வினா அமைக்க:-

அ. சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் ஜெயகாந்தன்.

ஆ.வீரமாமுனிவர் இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக் கொண்டார்.

11. “ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தென் காய்ந்தேன் “ – உவமை உணர்த்தும் கருத்து யாது?

12. ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள் சிலவற்றை எழுதுக

13. ‘ வாழ்வில் தலைக்கனம்’,’ தலைக்கனமே வாழ்வு ‘ என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?

IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                             4×2=8

14.  தீவக அணியின் வகைகள் யாவை?

15. கலைச்சொல் தருக:- அ. HUMANISM                 ஆ. CULTURAL VALUES

16. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

    பண்பும் பயனும் அது – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

17. பொருத்தமான நிறுத்தற் குறியிடுக

            சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                             2×3=6

( வினா எண் – 20 கட்டயமாக விடையளிக்க வேண்டும் )

பிரிவு -1

18. “ சித்தாளின் மனச்சுமைகள்

      செங்கற்கள் அறியாது “ – இடஞ்சுட்டிப் பொருள் தருக.

19.   முன்னுரையில் முகம் காட்டும் ஜெயகாந்தன் குறித்து எழுதுக.

20. “ நவமணி வடக்க “ எனத் தொடங்கும் தேம்பாவணிப் பாடலை எழுதுக.

பிரிவு -2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                               2×3=6

21.  கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக..

22.  பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘ மரம் நடுவிழாவுக்கு ‘ வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும் பெற்றோருக்கும் பள்ளியின் ‘ பசுமைப் பாதுகாப்புப் படை ‘ சார்பாக நன்றியுரை எழுதுக.

23. நீங்கள் செய்த, பார்த்த உதவிகளால் எய்திய மனநிலை குறித்து மூன்று வரிகள் எழுதுக.

VI) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                                                                 3×5=15

24.அ) 100,இளங்கோவடிகள் தெரு, வள்ளுவர் நகர், புதுக்கோட்டை மாவட்டத்தினை இருப்பிடமாகக் கொண்ட தமிழன்பன் மகன் ஆடலரசன் இளம் வணிகவியலில் பட்டம் , தட்டச்சில் ஆங்கிலம் மேல்நிலை, கணினி பயிற்சியில் டேலி படித்து அங்குள்ள உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் கணக்கு ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கிறார். தேர்வர் தம்மை ஆடலரசனாக நினைத்து உரிய படிவத்தை நிரப்புக.

25. அ) ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.

(அல்லது )

 

 

 

 

 

 

ஆ) விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க.

 

 

 

 

 

 

 

 

 

 


26. அ) ‘ அழகர்சாமியின் “ ஒருவன் இருக்கிறான் “ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.  

( அல்லது )

ஆ ) விளையாட்டு உலகில் உங்களுக்குப் பிடித்த ஆளுமைத்திறன் மிக்க விளையாட்டு வீரர் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

 

 

ஆக்கம் :-

 வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப்பள்ளி,

கோரணம்பட்டி.


PLS WAIT FOR 10 SECONDS AFTER DOWNLOAD BUTTON ENABLE 

KINDLY DONWLOAD THIS QUESTION - PDF
STAY THIS PAGE






நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post