10TH - TAMIL - UNIT TEST - UNIT 7

 

வகுப்பு : 10                                                        அலகு : இயல் -7

பாடம்    : தமிழ்                                                      மொத்த மதிப்பெண் : 50

I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                    5×1=5

1. குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ___________

அ) பி.ஜே.பொன்னையா                ஆ)  மா.பொ.சி                  இ) நேசமணி     

ஈ) மணிவர்மன்

2 குடிமக்கள் காப்பியம் எனச் சிறப்பிக்கப்படும் நூல்

அ) குண்டலகேசி             ஆ) சிலப்பதிகாரம்            இ) வளையாபதி 

ஈ) மணிமேகலை

3. கோயம்புத்தூர் – ஊரின் மரூஉ பெயரைக் காண்க.

அ) கோவன்புதூர்            ஆ) கோவை       இ) கோவன்புத்தூர்  ஈ) கோபுதூர்

4. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் ______

) நாட்டைக் கைப்பற்றல்    ) ஆநிரை கவர்தல்       ) வலிமையை நிலைநாட்டல்)  கோட்டையை முற்றுகையிடல்

5. புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்படுபவை ______

அ) காப்பியம்                   ஆ) இலக்கியம்    இ) கல்வெட்டு     ஈ) மெய்க்கீர்த்தி                                                       

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                                       4×1=4

“ இந்தி ரன்முதற் திசாபாலர் எண் மரும்ஒரு வடிவாகி

வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய

படியானையே பிணிப்புண்பன

வடிமணிச் சிலம்பே யரற்றுவன

செல்லோடையே கலக்குண்பன

வருபுனலே சிறைப்படுவன

மாவே வடுப்படுவன

            மாமலரே கடியவாயின “

6. யார் இங்கு பிணிக்கப்படுவதாக கூறப்படுகிறது?

அ. மன்னன்                    ஆ. இறைவன்                 இ. மக்கள்          ஈ. யானை

7. இப்பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை சொற்கள்

அ. வந்தபடி - நின்று        ஆ. சிலம்பு – அரற்றுவன    இ. படியானை – வடிமணி

ஈ. செல்லோடை - சிறை

8. பாடலில் குறிப்பிடப்படும் திசைபாலகர் எத்தனை பேர்?

அ. 10                             ஆ. 9                                இ. 8                          ஈ. 7

9. இலக்கண குறிப்புத் தருக : வருபுனல்

அ. உவமைத் தொகை                  ஆ. பண்புத்தொகை          இ. வினைத் தொகை

ஈ. அன்மொழித்தொகை

III) எவையேனும் மூன்று வினாக்களுக்கும் விடையளி:-                             3×2=6

10. விடைக்கேற்ற வினா அமைக்க:-

அ. சந்த நயத்தோடும் எதுகை மோனையோடும் உள்ள அம்மானைப் பாடல்களை அடிக்கடி பாடிப்பாடி பிள்ளைப் பருவத்திலேயே இலக்கிய அறிவை வளர்த்தவர் ம.பொ.சி

ஆ. சங்கத் தமிழரின் திணை வாழ்வு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது.

11. உரைப்பாட்டு மடை என்பது யாது?

12. பாசவர்,வாசவர்,பல் பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

13. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

IV) எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி:-                            4×2=8

14.  புறத் திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.

15. கலைச்சொல் தருக:- அ. DOCUMENT     ஆ. GUILD

16. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- மயங்கிய

17. தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க:-

அ. இல்லாமல் இருக்கிறது             ஆ. முன்னுக்குப்பின்

18. தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக.

            மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகிறது.

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                             2×3=6

( வினா எண் – 20 கட்டயமாக விடையளிக்க வேண்டும் )

பிரிவு -1

19” முதல் மழை விழுந்ததும் ‘ என்னவெல்லாம் நிகழ்வதாக கு.பா.ரா கவிபாடுகிறார்?

20. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ இடம் சுட்டிப் பொருள் விளக்குக..

21.. “ தூசும் துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.

பிரிவு -2

VI) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                           2×3=6

21. அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

22. படம் தரும் செய்தியை பத்தியாகத் தருக.

 

23. மொழிபெயர்க்க:-

 Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.                                                            

VI) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                              3×5=15

24. நாமக்கல் மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு, கதவிலக்க எண்50 இல் வசிக்கும்  இளமாறன் மகள் யாழினி பத்தாம் வகுப்பு முடித்து அங்குள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வாள் வீச்சு பயிற்சியில் கலந்துக் கொள்ள இருக்கிறார். தேர்வர் தம்மை யாழினியாக கருதி உரிய படிவத்தை நிரப்புக.

25.. நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு

இக்குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் ‘ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக..

                                                            (  அல்லது )

ஆ ) நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கையாக எழுதுக.

            மகளிர் நாள் விழா

இடம்பள்ளிக் கலையரங்கம்                                          நாள் -08.03.2019

கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல்தலைமையாசிரியரின் வரவேற்புஇதழாளர் கலையரசியின் சிறப்புரைஆசிரியர்களின் வாழ்த்துரைமாணவத் தலைவரின் நன்றியுரை.

26. அ) நாளிதழ் ஒன்றிற்கு பொங்கல் மலரில் ‘ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் ‘ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.

 ( அல்லது )

ஆ.) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.

முன்னுரை – தமிழகம் தந்த தவப்புதல்வர் – நாட்டுப்பற்று – மொழிப்பற்று – பொது வாழ்வில் தூய்மை – எளிமை – மக்கள் பணியே மக்கத்தான பணி – முடிவுரை

 PLS WAIT FOR 10 SECONDS AFTER DOWNLOAD BUTTON ENABLE 

KINDLY DONWLOAD THIS QUESTION - PDF

STAY THIS PAGE

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post