10TH - TAMIL - UNIT TEST - UNIT 5

 

 

வகுப்பு : 10                                                         அலகு : இயல் -5

பாடம்    : தமிழ்                                                       மொத்த மதிப்பெண் : 50

I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                    6×1=6

1. ‘ வால்காவிலிருந்து கங்கை வரை ‘ என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர் __

அ) என்.ஸ்ரீதர்      ஆ)  கணமுத்தையா  இ) ராகுல் சாங்கிருத்யாயன்     ஈ) யூமா வாசுகி

2 அருந்துணை என்பதனைப் பிரித்தால்

அ) அருமை + துணை                  ஆ) அரு + துணை           இ) அருமை + இணை

ஈ) அரு + இணை

3.” தா” எனும் வினையடியின் பெயரெச்சத் தொடரைக் காண்க.

அ) தந்து சென்றான்          ஆ) தந்தான்                    இ) தந்த அரசர்    ஈ) அரசே தருக

4. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் _____ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் __________

) அமைச்சர்,மன்னன்     ) அமைச்சர்,இறைவன்     ) இறைவன்,மன்னன்

)  மன்னன், இறைவன்

5. எந்த ஆண்டு கா.ப.செய்குதம்பிப் பாவலர் “ சதாவதானி “ பட்டம் பெற்றார்?

அ) 1904             ஆ) 1905                        இ) 1906                        ஈ) 1907                                                        

6. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு பொருள் கொள்வது__

) ஆற்றுநீர்ப் பொருள்கோள்                     ) கொண்டுகூட்டுப் பொருள்கோள்

) நிரல் நிறைப் பொருள்கோள்     ) எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                                      4×1=4

“பெண்ணினைப் பாகம் கொண்ட பெருந்தகைப் பரம யோகி

விண்ணிடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர்

புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ

எண்ணிய பெரியோர்க்கு என்னா ஏத்தினான் இறைஞ்சி னானே”

7. பாடலில் இடம்பெற்ற அடி எதுகை சொற்கள் _________

அ. பெண்ணினை - கொண்ட       ஆ. விண்ணிடை – மீனவன்         இ. புண்ணிய - எண்ணிய         

ஈ. சிறியோர் - பெருமை

8‘ பாடலில் இடம் பெற்றுள்ள சீர் மோனைச் சொற்கள் ______

அ. பெண்ணினை - புண்ணிய     ஆ. பெருந்தகை - பெருமை          

இ. விண்ணிடை - வானோர்       ஈ. புண்ணிய – பரம யோகி

9. ‘ மீனவன் ‘ என்பது யாரைக் குறிக்கிறது?

அ. கபிலன்          ஆ. இடைகாடன்              இ. இறைவன்                 ஈ. பாண்டியன்

10. இப்பாடலை இயற்றியவர் _____________

அ. நப்பூதனார்                 ஆ. பெருங்கெளசிகனார்                இ. பரஞ்சோதி முனிவர்

ஈ. கா.ப.செய்குதம்பிப் பாவலர்

III) எவையேனும் மூன்று வினாக்களுக்கும் விடையளி:-                           3×2=6

11. விடைக்கேற்ற வினா அமைக்க:-

அ. தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்கிறது திருக்குறள்.

ஆ. மொழிபெயர்ப்பின் மூலம் இலக்கியத் திறனாய்வு கொள்கைகளையும் பெற்றிருக்கிறோம்..

12. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

13. . “ கழிந்த கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்” – இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?

14. மொழிபெயர்ப்பின் பயன்கள் இரண்டு கூறுக.

IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                             4×2=8

15. குறிப்பு விடைகள் யாவை?

16. கலைச்சொல் தருக:- அ. EMBLEM                     ஆ. INTELLECTUAL

16. தொடர்களில் உள்ள எழுவாயை செழுமை செய்க

அ. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்                ஆ. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்

17. வினா வகையையும்,விடை வகையையும் காண்க.

“ காமராசர் நகர் எங்கே இருக்கிறது? “ இந்த வழியாகச் செல்லுங்கள் “. என்று விடையளிப்பது.

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                             2×3=6

( வினா எண் – 20 கட்டயமாக விடையளிக்க வேண்டும் )

பிரிவு -1

18. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்கம் தருக.

19.                ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு

          ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு ( translation ) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது;ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது  ( Interpreting ) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளருக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் ( Headphone )  கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலி வாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன்  உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார்.

            இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

20. கல்வியின் சிறப்பை உணர்த்தும் கா.ப.செய்குதம்பிப் பாவலரின் “ நீதிவெண்பா “ பாடலை அடிபிறழாமல் எழுதுக.

பிரிவு -2

VI) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                           2×3=6

21. கொண்டுக்கூட்டுப் பொருள்கோளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

23. வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?.

24. பள்ளியிலும் வீட்டிலும் நீங்கள் நடந்து கொள்ளும் விதங்கள் மூன்று எழுதுக..

VII) கீழ்க்காணும்  வினாவிற்கு  விடையளி:-                                            1×4=4

24. அ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-

VIII) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                       2×5=10

25.அ) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அறிவழகனின்  23 வயது மகன் அன்பழகன், இளங்கலை தமிழ் படித்து போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்தில் காமராஜர் நகர், பாரதியார் தெருவில், 51ம் இலக்க எண்ணில்  தனது நண்பர்களுடன் அறை எடுத்து பயில்கிறார். அதற்காக அவர் அங்குள்ள மைய நூலகத்தில் உறுப்பினராக சேர  விரும்புகிறார். திரு.சுந்தர வடிவேலு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அவருக்கு பிணைப்பாளராக கையொப்பமிடுகிறார்.  தேர்வர் தம்மை அன்பழகனாக கருதி உரிய படிவத்தை நிரப்புக.

26. அ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே  பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

(அல்லது )

ஆ) தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை

            மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘ செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை ‘ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

 

PLS WAIT FOR 10 SECONDS AFTER DOWNLOAD BUTTON ENABLE 

KINDLY DONWLOAD THIS QUESTION - PDF
STAY THIS PAGE

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post