பாடம் : தமிழ் மொத்த மதிப்பெண் : 50
I. அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:- 6×1=6
1. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம்
கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி ஈ) நோயாளியிடம் மருத்துவர்
2. குலசேகர ஆழ்வார் “ வித்துவக்கோட்டம்மா”
என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.
பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள
வழுவமைதி முறையே
அ) மரபு வழுவமைதி,திணை வழுவமைதி ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி,திணை வழுவமைதி ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி
3. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.
கல் சிலைஆகும் எனில் நெல்
_______________
அ) சோறு ஆ) கற்றல் இ)
எழுத்து ஈ) பூவில்
4. பரிபாடல் அடியில் ‘ விசும்பும் இசையும் ‘என்னும்
தொடர் எதனைக் குறிக்கிறது?
அ) வானத்தையும் பாட்டையும் ஆ) வானத்தையும் புகழையும்
இ) வானத்தையும் பூமியும் ஈ)
வானத்தையும் பேரொலியையும்
5. கண்ணகி உண்டான் என்பது
------------- வழு
அ) திணை ஆ) காலம் இ) பால் ஈ) இடம்
6. அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின்
ஹப்பிள் எந்த ஆண்டு நம் பால் வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என நிரூபித்தார்
அ)
1934 ஆ) 1944
இ) 1914 ஈ) 1924
II) பாடலைப் படித்து வினாக்களுக்கும்
விடையளி:- 4×1=4
“ விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து
இசையில் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி
கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் “
7.
ஊழ்
ஊழ் – இலக்கணக் குறிப்பு
அ. இரட்டைக் கிளவி ஆ. பண்புத் தொகை இ. அடுக்குத் தொடர் ஈ. வினைத் தொகை
8.
பாடலின்
ஆசிரியர்
அ. கீரந்தையார் ஆ. பூதஞ்சேந்தனார் இ. நப்பூதனார் ஈ. குலசேகராழ்வார்
9.
பாடலில்
உணர்த்தப்படும் கருத்து
அ. தத்துவக் கருத்து ஆ. அறிவியல் செய்தி இ. நிலையாமை
ஈ. அரசியல் அறம்
10.
விசும்பு
, இசை , ஊழி – பாடலில் இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள் முறையே
அ. காற்று, ஓசை, கடல் ஆ. மேகம், இடி, ஆழம் இ. வானம், பேரொலி,யுகம்
ஈ. வானம்,காற்று,காலம்
III)
எவையேனும் மூன்று வினாக்களுக்கும் விடையளி:- 3×2=6
(
வினா எண் : 14 கட்டாயமாக விடையளிக்க வேண்டும் )
11.
விடைக்கேற்ற வினா அமைக்க:-
அ.
ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்.
ஆ.
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு எனலாம்.
12.
வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த
இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.
எ.கா. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்
13. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை
எழுதுக.
14.
இலா – குறித்து எழுதுக
IV)
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 4×2=8
15.
கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.
அ.
அவனும் நீயும் அலுவலரைப் பார்க்க ஆயத்தமாகுங்கள்.
ஆ.
“ இந்த கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர் “ என்று கூறினான்
16.
கலைச்சொல் தருக:- அ. COSMIC RAYS ஆ. NANOTECHNOLOGY
16.
அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
அ.
“ இதோ முடித்துவிடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார்.
(
வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக )
ஆ.
தந்தை,” மகனே ! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா? “ என்று சொன்னார்.
(
ஆண்பாற்பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக )
17.
பகுபத உறுப்பிலக்கணம் தருக.:- கிளர்ந்த
V)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-
வினா
எண் : 20 கட்டாயமாக விடையளிக்க வேண்டும். 2×3=6
பிரிவு -1
18.
இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்து சிந்தனைகளை
முன் வைத்து எழுதுக.
19.
‘ மாளாதா காதல் நோயாளன் போல் ‘ என்னும் தொடரில் உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
20.
“ வாளால் அறுத்துச் சுடினும் “ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி பாடலை எழுதுக.
பிரிவு -2
VI)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;- 2×3=6
21.
நயம் பாராட்டுக:- மையக் கருத்துடன் ஏதேனும் மூன்று நயங்களை எழுதுக
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக்
குழம்பைக் குடிதொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு
புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை
வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ? -
பாரதியார்
22.
மொழிபெயர்க்க:-
Malar: Devi,switch
off the lights when you leave the room
Devi : Yeah! We
have to save electricity
Malar : Our nation
spends a lot of electricity for lighting up our streets in the night.
Devi: Who knows? In future our country may launch
artificial moons to light our night time sky!
Malar: I have read
some other countries are going to launch these types of illumination satellites
near future.
Devi: Superb news! If we launch artificial moons,they can
assist in disaster relief by beaming light on areas that lost power!
23.
நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத்
தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது: தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப்
பார்” என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன்.துள்ளிய குட்டியைத்
தடவிக்கொடுத்து,”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன்.என்
தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,” நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட
இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
VII)
கீழ்க்காணும் வினாவிற்கு விடையளி:- 1×4=4
24.
அ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-
VIII)
அனைத்து வினாக்களுக்கு விடையளி 2×5=10
25.அ)
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் எனும் தலைப்பில் ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக
(அல்லது )
ஆ.
தமிழர்
மருத்துவ முறைக்கும், நவீன மருத்துவ முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து கருத்துகளை தொகுத்து
எழுதுக.
26. அ) ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை
எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை
ஒட்டிச் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிபாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
(அல்லது )
ஆ) கருந்துளை சார்ந்த செய்தியை அறிவியல் இதழ் ஒன்றிற்குக் குறுங்கட்டுரையாக எழுதுக.