10TH - TAMIL - UNIT TEST - UNIT 2

 

வகுப்பு : 10                                                        அலகு : இயல் -2

பாடம்    : தமிழ்                                                மொத்த மதிப்பெண் : 50

I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                            6×1=6

1. பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப் பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

இ) கடல் நீர் ஒலித்தல்                  ஈ) கடல் நீர் கொந்தளித்தல்

2. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

இருக்கும் போது உருவமில்லை – இல்லாமல் உயிரினம் இல்லை

அ. நறுமணம்      ஆ. காடு             இ. காற்று                       ஈ. புதுமை

3. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல்                 -          1. மேற்கு

ஆ) கோடை                    -          2. தெற்கு

இ) வாடை                      -          3. கிழக்கு

ஈ) தென்றல்                    -          4. வடக்கு

அ) 1,2,3,4                       ஆ) 3,1,4,2                      இ) 4,3,2,1           ஈ) 3,4,1,2

4. திறன்பேசியின் தொடு திரை உடைந்தது – இதில் தொடுதிரைக்கான தொகை யாது?

) வினைதொகை       ) பண்புத் தொகை   ) உம்மைத் தொகை ) வேற்றுமைத் தொகை

5. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்                                                          

 ) செய்யுள்        ) பாடல்    ) கவிதை    ) வசன கவிதை

6. பெரிய மீசை சிரித்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

) பண்புத்தொகை          ) உவமைத்தொகை     ) அன்மொழித்தொகை   

) உம்மைத்தொகை                                

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                            4×1=4

“ நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,

கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

பெரும்பயல் பொழிந்த சிறுபுன் மாலை”

7.             இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. முல்லைப்பாட்டு           ஆ. மலைபடுகடாம்           இ. நற்றிணை                

ஈ. குறுந்தொகை

8.             நனந்தலை உலகம் – இத்தொடரின் பொருள்

அ. சிறிய உலகம் ஆ. தலையாய உலகம்                 இ. நனைந்த உலகம்      

ஈ. அகன்ற உலகம்

9.             பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்

அ. பெரும்பெயல், பொழிந்த            ஆ. பாடுஇமிழ்,பனிக்கடல்

இ.பாடுஇமிழ்,கோடுகொண்டு         ஈ. நீர்செல,நிமிர்ந்த

10.           பாடலில் இடம் பெற்றுள்ள அளபெடை

அ. தடக்கை        ஆ. வளைஇ                   இ. பெரும்பெயல்     ஈ. கொடுஞ்செலவு

III) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                            3×2=6

11. விடைக்கேற்ற வினா அமைக்க:-

அ. கேலிச்சித்திரம் – கருத்துப்படம் உருவாக்கியவர் பாரதியார்.

ஆ. உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கியவர் தேவநேய பாவாணர்

12. வசன கவிதை குறிப்பு வரைக.

13. மாஅல் – பொருளும் இலக்கண குறிப்பும் தருக

IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                4×2=8

14.சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.

அ. கீரிபாம்பு                    ஆ. எழுகதிர்

15. கலைச்சொல் தருக:- அ. STORM                      ஆ. WHIRL WIND

16. வாசனையுடன் வா, அவித்து விடாதே – இவ்வசன கவிதையில் உள்ள வேண்டுகோள் சொல்லையும், கட்டளைச் சொல்லையும் காண்க.

17. இயற்கை பேரிடரின் போது நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் மேற்கொள்ளும் செயல்கள் இரண்டினை எழுதுக.

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                2×3=6

பிரிவு -1

18. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.

19. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

            கி.பி. ( பொ.ஆ) முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்னும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி, பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார். அதுமுதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்து சென்றன. அந்தப் பருவக் காற்றுக்கு யவனர்,அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள்.ஹிப்பாலஸ் பருவக் காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.

அ. ஹிப்பாலஸ் என்பவர் எந்த நாட்டு மாலுமி?

ஆ. ஹிப்பாலஸ் கண்டுபிடித்த புதிய வழி எது?

இ. ஹிப்பாலஸ் பருவக் காற்று என பெயர்ச்சூட்டியவர்கள் யார்?

20. விரிச்சி என்றால் என்ன?

பிரிவு -2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                    2×3=6

வினா எண் : 23 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

21. சோலைக்( பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக் கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.

22.தோட்டத்தில் மல்லிகைப் பூ பறித்த பூங்க்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்கு தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர் கடிகாரத்தில் மணி பார்த்தாள் – இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.

23. “ சிறு தாம்பு தொடுத்த “ எனத் தொடங்கும் முல்லைப்பாட்டுப் பாடலை அடிமாறாமல் எழுதுக.

VI) கீழ்க்காணும்  வினாவிற்கு  விடையளி:-                                      1×4=4

24. அ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-

 

 

 

 

 


VII) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                     2×5=10

25.அ) மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்று பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக

 (அல்லது )

ஆ) மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

            வளரும் விழி வண்ணமேவந்து

  விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

            விளைந்த கலை அன்னமே

  நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

            நடந்த இளந்தென்றலேவளர்

  பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

            பொலிந்த தமிழ் மன்றமே

  - கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.

26.அ) தூய்மையான காற்றைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எழுதுக.

(அல்லது )

ஆ) புயலிலே ஒரு தோணி – கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன.?

 PLS WAIT FOR 10 SECONDS AFTER DOWNLOAD BUTTON ENABLE 

KINDLY DONWLOAD THIS QUESTION - PDF

STAY THIS PAGE

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post