10TH-TAMIL-1ST MID TERM - MODEL QUESTION PAPER -2023

 

வகுப்பு : 10                                      மாதிரி முதல் இடைப்பருவத் தேர்வு                    அலகு : இயல் 1 - 3

பாடம்    : தமிழ்                                                                                           மொத்த மதிப்பெண் : 50

I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                                             5×1=5

1. ‘’ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி ‘ என்னும் அடியில் பாக்கம் என்பது --------

அ) புத்தூர்                                 ஆ) மூதூர்                     இ) பேரூர்                                 ஈ) சிற்றூர்

2 விளாவின் இளநிலை 

அ) மடலி                                    ஆ) வடலி                      இ) குட்டி                                    ஈ) பைங்கூழ்

3. முல்லைப்பாட்டு பாடலில் உள்ள அடிகளின் எண்ணிக்கை ____________

அ) 103                                      ஆ) 107                         இ) 110                                       ஈ) 400

4. காண்  எனும் வினையடியின் எதிர்மறை தொழிற்பெயர் ___________

) காணுதல்                             ) காணாமை              ) காட்சி                       )  காணல்

5. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்ப்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா நாள்            இ) தேமா புளிமா காசு     ஈ) புளிமா தேமா பிறப்பு                                                        

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                                                                              3×1=3

“ விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

 வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

ஒழுக்கமும் வழிபடும் பண்பே,”

.6 இப்பாடல் இடம் பெற்ற நூல் ___________

அ. முல்லைப்பாட்டு         ஆ. குறுந்தொகை           இ. காசிக்காண்டம்                      ஈ. மலைபடுகடாம்

7. இலக்கணக் குறிப்பு தருக:- உரைத்தல்

அ. வினைத்தொகை       ஆ. பண்புத்தொகை        இ. தொழிற்பெயர்                       ஈ. அன்மொழித்தொகை

8. செப்பல் என்பதன் பொருள் யாது?

அ. உணவிடுதல்            ஆ. வரவேற்றல்              இ. கூறல்                                  ஈ. வழியனுப்புதல்

III) எவையேனும் மூன்று வினாக்களுக்கும் விடையளி:-                                                                           3×2=6

( வினா எண் : 12 கட்டாயமாக விடையளிக்க வேண்டும் )

9. விடைக்கேற்ற வினா அமைக்க:-

அ. பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல்

ஆ. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு மலேசியா.

10. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு எடுத்துக்காட்டுத் தருக.

11. ‘ இறடிப் பொம்மல் பெறுகுவிர் ‘ – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக

12. ‘ கண் ‘ என முடியும் குறளை எழுதுக.

IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                                                              3×2=6

13. ‘ எழுது என்றாள் ‘ என்பது விரைவு காரணமாக ‘ எழுது எழுது என்றாள் ‘ என அடுக்குத் தொடரானது.”சிரித்து பேசினார் “ என்பது எவ்வாறு அடுக்குத் தொடர் ஆகும்?

14. கலைச்சொல் தருக:- அ. LAND BREEZE                     ஆ. CONVERSATION

15. வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                                                                            2×3=6

( வினா எண் – 18 கட்டயமாக விடையளிக்க வேண்டும் )

பிரிவு -1

16. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப் படை எவ்வாறு காட்டுகிறது.?

17. சோலைக் ( பூங்கா ) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் உரையாடல் அமைக்க.

18. பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடலை எழுதுக.

பிரிவு -2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                                                                              2×3=6

19. மலை என்னை அடிக்கடி அழைக்கும்.மலை மீது ஏறுவேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்;சுற்றும் முற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும். – இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதி தொழிற்பெயர்களாக மாற்றுக.

20. The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

21. வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

     கோலோடு நின்றான் இரவு - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

VI) கீழ்க்காணும்  வினாவிற்கு  விடையளி:-                                                                                      2×4=8

22.அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

(அல்லது )

ஆ. மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

23 அ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-

 

VII) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                                                                        2×5=10

24.அ) ஒழுக்கமுடைமையில் வள்ளுவர் கூறும் கருத்துகளைத் தொகுத்து உரைக்க

(அல்லது)

ஆ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக

25. அ) அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக்

  கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க

(அல்லது)

ஆ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக் குறிப்புச்சொற்களும் புயலில் ,தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

CLICK HERE TO GET PDF

CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post