10TH - TAMIL - WEEKWISE QUESTIONS - WEEK-2

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். 2022 - 23 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 35,000 மாணவர்கள்  தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்ற செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த 2023 - 24 கல்வி ஆண்டில் தமிழ் பாடத்தில் அனைவரும் தேர்ச்சி என்ற தகவலை கேட்க பெருவிழைவாக உள்ளது. ஆசிரியர்களான உங்களின் முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியது. இந்த கல்வி ஆண்டில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் உங்களின் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள் மிகவும் உற்ற துணையாக இருந்து தோள் கொடுக்க நினைக்கிறோம். எனவே இதனை மனதில் கொண்டு இனி பத்தாம் வகுப்பிற்கு ஒவ்வொரு வாரமும் வாரத்தேர்வு வினாத்தாளினை பதிவிட முனைந்துள்ளோம். இதனை பயன்படுத்தி காலை நேரம் அல்லது மாலை நேர சிறப்பு வகுப்பில் மாணவர்களுக்கு தேர்வு வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் கற்றலை உறுதிப்படுத்தலாம். மேலும் நான்கு வாரங்கள் கடந்து ஒரு மாதத் தேர்வு வினாத்தாள் பதிவிடப்படும். இந்த வாரத் தேர்வு 40 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாளாகவும், மாத்த்தேர்வு 50 ( அ) 100 மதிப்பெண் கொண்ட வினாத்தாளாகவும் அமையப் பெறும். 19-06-2023 முதல் ஒவ்வொரு வாரமும் தவறாமல் உங்களுக்கு வாரத்தேர்வு வினாத்தாளும், மாத இறுதி நாளில் ஒரு மாதத் தேர்வு வினாத்தாளும் கல்விவிதைகள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். ஆசிரியர்கள் இந்த வினாத்தாளினை பதிவிறக்கம் செய்து மாணவர்களின் தேர்ச்சி நிலையில் பெரும் முயற்சி எடுத்து இந்த கல்வி ஆண்டில் தமிழ் பாடத்தில் அனைவரும் தேர்ச்சி என்ற செய்தியினை கேட்க வேண்டும். இதற்கு உங்களின் உழைப்பு வைரம் போன்றது. உங்களுக்கான வினாத்தாளினை மறவாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி வேண்டுகிறோம். மேலும் இந்த வாரத் தேர்வு வினாத்தாளில் ஆண்டு, நாட்கள் எவை என குறிப்பிடாமல் இதனை பதிவேற்றம் செய்து உள்ளேன். இந்த வினாத்தாளினை நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எந்த காலத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வாரத் தேர்வு மதிப்பெண்களை குறித்து வைத்துக் கொள்ள உங்களுக்கு மாணவர்கள் பெயர் பட்டியலை உள்ளடக்கிய ஒரு படிவத்தையும் உங்களுக்கு விரைவில் தயார் செய்து  இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுகிறோம்.

எங்களோடு இணைந்து மாணவர்களுக்காக நீங்கள் தயாரிக்கும் படைப்புகளையும் இந்த வலைதளம் மூலம் பதிவேற்றம் செய்ய நீங்கள் நினைத்தால் உடனே  8695617154 என்ற புலன எண்ணில் தகவலை பகிரவும். உங்களின் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் நாங்கள் வழங்குகிறோம். அது எந்த பாடமாக இருந்தாலும் சரி மாணவர்களுக்கு தயாரிக்கும் உங்களின் படைப்பு மிகவும் சிறப்பானது.  உங்கள் படைப்புகளை எங்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் THAMIZHVITHAI@GMAIL.COM.

வாருங்கள் இணைந்து செயல்படுவோம். மாணவர்களின் நலனுக்காக.....

முயற்சி + பயிற்சி + வெற்றி.

பத்தாம் வகுப்பு

தமிழ்

வாரத்தேர்வு வினாத்தாள் - 2

CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post