10TH - TAMIL - WEEKWISE QUESTIONS - WEEK-2- PDF

 

பத்தாம் வகுப்பு

தமிழ்  - வாரத்தேர்வு

தேர்வு எண் : 02                            இயல் - 1                                  மதிப்பெண் : 40

) அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                            5×2=10

1. வேங்கை -  என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!

   முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்ப்பியங்களின் பெயர்களை எழுதுக.

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

4. உடுப்பத்தூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

  வடுக்காண் வற்றாகும் கீழ் இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.

5 தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

ஆ. அனைத்து வினாவிற்கும் விடையளி                                                                          1×2=2

6. சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:- ( 2 மதிப்பெண் )

தேணிலே ஊரிய செந்தமிழின்சுவை

தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும்நிதம்

ஓதி யுனர்ந்தின் புருவோமே

7. ) வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக                4×1=4

1.கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.

4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.

8. குறிப்புகளைக் கொண்டுவினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க:-    5×1=5

        குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்

9. எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.                                           1×5=5

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

 

 

எறும்புந்தன் கையால் எண் சாண்

 

 

ஐந்து சால்பு ஊன்றிய தூண்

 

 

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

 

 

ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி

 

 

இ. பாடலை அடிமாறாமல் எழுதுக:-                                                                    1×5=5

10. “ அன்னை மொழியே “ பாடலை அடிமாறாமல் எழுதுக

ஈ ) நிற்க அதற்குத் தக                                                                                 1×5=5

இன்சொல் வழி

தீய சொல் வழி

பிறர் மனம் மகிழும்

அறம் வளரும்

புகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் சேருவர்

அன்பு நிறையும்

பிறர் மனம் வாடும்

அறம் தேயும்

இகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் விலகுவர்

பகைமை நிறையும்

இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

உ) மொழி பெயர்க்க:-                                                                                 2×2=4

1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

 

WWW.KALVIVITHAIGAL.COM

WWW.TAMILVITHAI.COM

 CLICK HERE TO PDF

CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post