10TH-TAMIL-SUPPLYMENTRY EXAM- JUNE 23- ANSWER KEY - PDF


 சிறப்புத் துணைத் தேர்வு - ஜூன் 2023

பத்தாம் வகுப்பு

தமிழ்

விடைக்குறிப்பு

அரசு  பொதுத்தேர்வு வினாத்தாள் ( துணைத் தேர்வு )

ஜூன் - 2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                       மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ. வணிகக் கப்பல்களும், ஐம்பெரும் காப்பியங்களும்

1

2.

இ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

1

3.

ஆ. பண்புத் தொகை

1

4.

ஈ. வானத்தையும், பேரொலியையும்

1

5.

இ. கல்வி

1

6.

ஈ.கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

1

7.

அ. வேற்றுமை உருபு

1

8.

ஈ. சிலப்பதிகாரம்

1

9.

இ. எம் + தமிழ் + நா

1

10.

அ. அகவற்பா

1

11.

ஆ. க, உ

1

12.

இ. சீராக

1

13.

ஈ. பாடுகிறோம் - கூறுகிறோம்

1

14.

ஆ. பாரதியார்

1

15.

அ. நெடுமை + காலம்

1

பகுதி – 2 / பிரிவு - 1

16.

·         வருக, வணக்கம்

·         வாருங்கள்.

·         அமருங்கள், நலமா?

·         நீர் அருந்துங்கள்

2

17.

அ. “தமிழா துள்ளி எழு” என்னும் தலைப்புடைய துண்டறிக்கையை கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கியவர் யார்?

ஆ. விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரமே எந்த நூலில் அமைந்துள்ளது?

1

1

18.

மாமிசத்தையும், தினைச் சோற்றையும்  உணவாகப் பெறுவீர்கள்..

2

19

சீர்

அசை

வாய்பாடு

தஞ்/ சம்

நேர்நேர்

தேமா

எளி/ யர்

நிரைநேர்

புளிமா

பகைக்/ கு

நிரைபு

பிறப்பு

2

20.

v  மரம் வளர்ப்போம்; காற்றின் பயன் அறிவோம்

v  மரம் நடுவோம்; காற்றை பெறுவோம்

2

21

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

 மெய்ப்பொருள் காண்ப தறிவு

2

பகுதி – 2 / பிரிவு - 2

22

அ. உயிரெழுத்து

ஆ. சின்னம்

1

1

 

செவி மாற்றுத் திறனாளிகளுக்கான மாற்று வினா

அ. பழம் – பழக்குலை

ஆ. புல் – புற்கட்டு

2

 

23

கிளர்ந்த – கிளர் + த் (ந்) +த் + அ

கிளர் – பகுதி

த் – சந்தி

ந் – விகாரம்

த் – இறந்த கால இடைநிலை

அ – பெயரெச்ச விகுதி

2

24

பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி,சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்..பொ.சி

2

25.

·         கவிஞர்        – பெயர்ப் பயனிலை

·         சென்றார்     – வினைப் பயனிலை

·         யார்              - வினா பயனிலை

2

26.

தேனிலே ஊறிய செந்தமிழின்சுவை

தேறும் சிலப்பதி காமதை

ஊனிலே எம்முயிர் உள்ளளவும்நிதம்

ஓதி யுர்ந்தின் புறுவோமே

 கவிமணி தேசிக விநாயகனார்

2

27.

v  வெட்சிகரந்தை

v  வஞ்சிகாஞ்சி

v  நொச்சி - உழிஞை

2

28.

அள்ளி இறைத்தல்         –   கர்ணன் எளியவர்களுக்கு அள்ளி இறைத்து கொடை  தர்மம் செய்தான்.

ஆறப்போடுதல்               – கோபத்தை ஆறப்போடுதல் வேண்டும்

1

1

பகுதி – 3 / பிரிவு - 1

29

Ø  வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

Ø  நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும்

3

30

அ. 5000

ஆ. ஆங்கிலம்

இ. புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.

3

31.

·         ஓரளவு மேம்படுத்துகின்றன.

·         மனிதனுக்கு தேவையான தேவைகளை மேம்படுத்தி இருக்கிறது.

·         மனிதனிடம் இரக்கம், அன்பு போன்றவை இல்லை.

·         மனிதன் இயந்திரத் தனமான வாழ்வை வாழ்கின்றான்

3

பகுதி – 3 / பிரிவு - 2

32

·           மன்னன் இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார்.

·           இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார்

·           இறைவன் கோவிலை விட்டு நீங்கினார்

·           மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார்

·           மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார்

3

33.

v  உயிர் பிழைக்கும் வழி

v  உடலின் தன்மை

v  உணவைத் தேடும் வழி

v  காட்டில் செல்லும் வழி

3

34.

அ) அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

 

 

ஆ)  தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;                     -இளங்கோவடிகள்

 

பகுதி – 3 / பிரிவு - 3

35

வ.எண்

சீர்

அசை

வாய்பாடு

1

கரு-வியும்

நிரை – நிரை

கருவிளம்

2

கா-லமும்

நேர் – நிரை

கூவிளம்

3

செய்-கை-யும்

நேர் – நேர் - நேர்

தேமாங்காய்

4

செய் – யும்

நேர் – நேர்

தேமா

5

அரு – வினை- யும்

நிரை-நிரை-நேர்

கருவிளங்காய்

6

மாண் – ட

நேர் – நேர்

தேமா

7

தமைச்சு

நிரைபு

பிறப்பு

இக்குறள் பிறப்பு எனும் வாய்பாட்டில் முடிந்துள்ளது

3

36.

இலக்கணம்: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல்.

.கா:

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்

..................................................................................

................... கூவினவே கோழிக் குலம்.

விளக்கம்:

1.     அதிகாலை விடிந்ததும் கோழிகளும் இயல்பாகக் கூவும்.ஆனால் புலவர் தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார்.

3

37

Ø  ஆற்றுநீர்ப் பொருள்கோள்

Ø  விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராகப் பொருள் கொள்ளுமாறு அமைவது.

Ø  பொருத்தம் : முயற்சி ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும். முயற்சி இல்லாதிருந்தால் வறுமை சேரும். இக்குறள் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது.

3

பகுதி – 4

38

      அ)

சுந்தரனார் வாழ்த்து

பெருஞ்சித்திரனார் வாழ்த்து

கடலெனும் ஆடை உடுத்திய நிலமகளுக்கு முகம் பாரத கண்டம்

மண்ணுலகப் பேரரசி

நெற்றியில் மணம் வீசூம் திலகமாக தமிழ்நாடு

சங்க இலக்கியங்கள் அணிகலன்கள்

எல்லா திசைகளில் உன் புகழ்

தும்பி போல உன்னை சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்

5

38

·         ஆ. சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும்,வலிமையில்லாமலும் இருந்தால் அவர் எப்படிப்பகைவரின் வலிமையை எதிர்கொள்ள முடியும்.

·         மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய்,பொருந்தும் பண்பு இல்லாதவராய்,பிறருக்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும்.

5

39

அ) அனுப்புதல்

      பெறுதல்

      விளித்தல்

      பொருள்

      விண்ணப்பகுதி

      இப்படிக்கு,

     நாள் – இடம்

   உறைமேல் முகவரி

அனுப்புநர்

                   ஊர் பொதுமக்கள்,

          100,பாரதி தெரு,

          சக்தி நகர்,

          சேலம் – 636006.

 

பெறுநர்

          நகராட்சி ஆணையர் அவர்கள்,

          நகராட்சி அலுவலகம்,

,         சேலம் – 636001.

ஐயா,

பொருள்:  மழைநீர் அகற்றவும், சாக்கடையைத் தூர்வார வேண்டுதல் – சார்பு

          வணக்கம். எங்கள் பகுதியில் 100 குடும்பங்கள் உள்ளன. இரு நாட்களுக்கு முன் பெய்த மழையில், மழைநீர் அப்படியே தேங்கியுள்ளது. மேலும் சாக்கடை கழிவுகளும் மேலே மிதக்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும். எனவே விரைந்து மழைநீரை அகற்றியும், சாக்கடையைத் தூர்வார வேண்டியும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறோம்.

நன்றி.

இடம் : சேலம்                                           இப்படிக்கு,

நாள் : 04-03-2021                                 தங்கள் உண்மையுள்ள,                                                                ஊர் பொதுமக்கள்.

உறை மேல் முகவரி:

பெறுநர்

          நகராட்சி ஆணையர் அவர்கள்,

          நகராட்சி அலுவலகம்,

,         சேலம் – 636001.

என படிநிலைகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

5

39

ஆ. சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

        பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,

                   சேலம்.

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

 என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி திறன்பேசி என் ஆளுமையைப் பற்றிஎழுது என்றது

மனிதன் என் அடிமைத்தனத்தை பற்றி எழுது என்றான்

 நான் எழுதுகிறேன் திறன்பேசிக்கு

 அடிமையாகாதே என்று

5

41.

உரிய படிவத்தில் அனைத்துப் பகுதிகளும் நிரப்பி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

5

42

அ. இன்சொல் பேசுவதால் நண்பர்கள் கிடைப்பர்

இன்சொல் பேசுவதால் சுற்றத்தார் நட்புடன் பழகுவர்

இன்சொல் பேசுவதால் உறவுகள் வலுபடும்

இன்சொல் பேசுவதால் ஒழுக்கப்பண்புகள் வளரும்

இன்சொல் பேசுவதால் நல்லப் பழக்கவழக்கங்கள் உண்டாகும்.

 

இவைப் போன்று ஏற்புடைய விடைகள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

42

ஆ. மொழிபெயர்க்க

கலைஞர்களால் தெருவில் இசை நாடகம் போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து. இதில் இராமாயணம்,மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை,நிறைய பாடல்களுடன் நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள் மெருகேற்றி நடிப்பார்கள். பதினைந்திலிருந்து இருபது கலைஞர்கள் ஒரு குழுவாககூத்து குழுஒன்றை அமைத்து இதை நடத்துவர். குழுவுக்கென பாடகர் இருந்தாலும் அனைவருமே தங்கள் குரலில் பாடுவர். கலைஞர்கள் மிக கனமான உடைகளும்,ஆபரணங்களும் அணிந்து கனமாக முகப்பூச்சும் அணிந்து பங்கு கொள்கிறார்கள். இவை கிராமங்களில் புகழ் பெற்றவை.

5

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

 

i)              மனிதன் தனியானவன் அல்லன். அவன் சமூகக் கடலின் ஒரு துளி

ii)             மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய மகிழ்ச்சி பெருகிறது.

iii)            மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொது விதியான அறத்தை மனிதன் ஏற்க வேண்டும்

iv)           சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர்.

v)            சங்ககால அறங்கள் இயல்பானவை

 

 

பகுதி – 5

 

43

அ. காற்று மாசு அடைதல்

உரிய உட்தலைப்புகள் இட்டு காற்று மாசு அடைவதற்கான காரணங்களை  ஏற்புடைய பதிலாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

8

 

ஆ. பாராட்டுரை

நெகிழ்ப் பைகளின் தீமை விழிப்புணர்வு

இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

அன்புடையீர் வணக்கம்,

எங்கள் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை தந்து பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தித் தந்த குழுவினருக்குப் பள்ளியின் சார்பாக வணக்கம்.

நெகிழியானது பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், நம் மண்ணின் வளத்தைக் குன்றச் செய்து நிலத்தடி நீர் குறைவதை, மிக அழகாக பொம்மலாட்டம் மூலம் எடுத்துரைத்ததற்குப் பாராட்டுகள்.

நெகிழிப்பைகள் மூலம் மனிதர்களுக்குப் புற்றுநோய் வரக்கூடும் என்பதனை அழகாக எடுத்துரைத்தமைக்குப் பாராட்டுகள்.

நெகிழிகளை எரிப்பதால் உயிரினங்களுக்கு ஏற்படும் தீமையை அழகாக எடுத்துரைத்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

இதன் மூலம் எங்கள் பள்ளி மாணவர்கள் இனிமேல் நெகிழியைப் பயன்படுத்தமாட்டோம் என உறுதிக் கொண்டுள்ளோம்.

நன்றி.

8

44.

அ.

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும்,துவையலும் வைத்து கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

 

8

 

ஆ)

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

        கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø  குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்

Ø  உறவினர்கள் இவனை அனாதைப் போல நடத்தினார்கள்.

Ø  காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø  வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்க சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø  பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø  குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துகுடியும்,ஒரு ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø  பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கி கொடுத்த அந்த மூன்று ரூபாயும் அவரின் மனதை மாற்றியது.

Ø  மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

        எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது.

 

 

8

45

அ. குறிப்புச் சட்டகம்

முன்னுரை

தமிழன்னையின் அணிகலன்கள்

தமிழ்ச் சான்றோர்

தமிழின் வளர்ச்சி

தமிழின் எதிர்காலம்

முடிவுரை

மேற்கண்ட குறிப்புகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

8

45

ஆ. முன்னுரை

சாலைப் பாதுகாப்பு உயிர்பாதுகாப்பு

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்

விபத்துகளை தவிர்ப்போம்

விழிப்புணர்வு தருவோம்

முடிவுரை

மேற்கண்ட தலைப்புகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

10 விநாடிகள் காத்திருக்கவும்

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post