அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர்.அதேபோல, 11ஆம் வகுப்பு தேர்வுகளும் இதே சமயத்தில் நடந்து முடிந்தன. இதனிடையே 10ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு எப்போது ரிசல்ட் வெளியிடப்படும் என கேள்வி எழுந்திருந்தது. முன்னதாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியாகி இருந்தது.இந்நிலையில் 10 வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்தது. இதன்படி 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அதே தினம் பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.மேலும்தேர்வுமுடிவுகள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளதாகவும், பள்ளி மாணவர்கள் சமர்பித்த செல்போன் எண்ணிலும் குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துதிருந்தது.
மேலும் இந்த தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கும், தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும் சிறப்புத் துணைத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜீன் மாதம் -2023 முதல் சிறப்புத் துணைத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்புத் துணைத் தேர்வானது கீழ்க்கண்ட நாட்களில் நடைபெறும்.
27-06-2023 - செவ்வாய் - LANGUAGE
28-06-2023 - புதன் - ENGLISH
30-06-2023 - வெள்ளி- MATHS
01-07-2023 - சனி - OPTIONAL LANGUAGE
03-07-2023 - திங்கள் - SCIENCE
04-07-2023 - செவ்வாய் - SOCIAL SCIENCE
இந்த கால அட்டவணையை PDF இல் பெற கீழ் உள்ள CLICK HERE என்பதனை சொடுக்கி நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.