10TH - TAMIL - MODEL PUBLIC EXAM QUESTION PAPER -2023-3- PDF

  

 

 

 

 

 

 

 

பதிவு எண்

மொழிப்பாடம் – பகுதி - I – தமிழ்

 ( மீத்திற மாணவர்களுக்கானது )

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                    மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

            ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

II )         கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                                                                               15×1=15

1. காக்கைப் பாடினிய உரை – என்னும் நூலை எழுதியவர்_________________

அ) பெருஞ்சித்திரனார்     ஆ) தேவநேய பாவனார்             இ) இளங்குமரனார்                    ஈ) க.சச்சிதானந்தம்

2. கூத்தராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் __________

அ) மலைபடுகடாம்          ஆ) முல்லைப்பாட்டு       இ) காசிக்காண்டம்          ஈ) பொருநராற்றுப்படை

3. “ சொல்லத் தக்க செய்தி “ என்பது

அ) இடைச்சொல் தொடர்             ஆ) கூட்டு நிலைப் பெயரெச்சங்கள்  

இ) வினையெச்சத் தொடர்           ஈ)  வினைமுற்றுத் தொடர்.

4 பண்என்னாம் பாடகிற் கியைபின்றேல்; கண்என்னாம்

  கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில் பயின்று வரும் அணி

அ) வஞ்சப்புகழ்ச்சி அணி ஆ) உவமை அணி       இ) எடுத்துக்காட்டு உவமை அணி          ஈ) தற்குறிப்பேற்ற அணி

5. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்____________

அ) ஈலா             ஆ) பெப்பர்         இ) குலா            ஈ) இலா

6. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் – என்னும் அடிகள் இடம் பெறும் நூல்

அ) பரிபாடல்                   ஆ) முல்லைப்பாட்டு        இ)  திருவாசகம்             ஈ) தனிப்பாடல் திரட்டு

7. கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் எனப் பெருமைப்படுபவர்

) பாரதியார்             ) பாரதிதாசன்           ) கவிமணி             ) நாமக்கல் கவிஞர்

8.  மழைக் கொட்டிக் கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான் – இத்தொடரில் துணைத் தொடர் எது?

அ) பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான்                            ஆ) மழைக் கொட்டிக் கொண்டிருந்தாலும்

இ) பள்ளிக்கு                                                                 ஈ) நடந்து வந்தான்

9. காந்தி – இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு_________

அ) 1929            ஆ) 1930           இ) 1931            ஈ) 1932

10. நானிலத்தில் பசித்தவர்க்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகிறது. – இத்தொடரில் காணும் தொகைச்சொல்லுக்கான தமிழெண்கள்.

அ) ௪ ௬ ௧௦ ௮             ஆ) ௧௦ ௮ ௬ ௪            இ) ௮ ௪௬ ௧௦        ஈ) ௬ ௧௦ ௪ ௮

11. வாய்மையே மழைநீராகி = இத்தொடரில் வெளிப்படும் அணி

ஆ) உவமை      ஆ) தற்குறிப்பேற்றம்                    இ) உருவகம்                 ஈ) தீவகம்

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளி ( 12,13,14,15)

“ அல்லதை என் தமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து

எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ்நாட்டில் எய்திற்றாலோ

தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ

இல்லறனும் துறவறனும் பிழைத்தனவே யான் அறியேன் எந்தாய் ! எந்தாய் !”

12. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. முல்லைப்பாட்டு         ஆ. மலைபடுகடாம்         இ. கம்பராமாயணம்                    ஈ. திருவிளையாடற்புராணம்

13. தமர் – இத்தொடரின் பொருள்

அ. உறவினர்                 ஆ. புலவர்                     இ. கவிஞர்                               ஈ. ஆசிரியர்

14. பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்

அ. அல்லதை, எல்லை     ஆ. கள்வரால், கானத்து  இ.எந்தாய், எந்தாய்                      ஈ. தொல்லை,தவம்

15.இப்பாடலின் ஆசிரியர்

அ. கம்பர்                       ஆ. பரஞ்சோதி முனிவர்              இ. நப்பூதனா                 ஈ. அதிவீரராம பாண்டியர்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                               4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16.விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. ஒரு நிலத்தின் தெய்வம்,மக்கள்,தொழில்,விலங்கு இவையெல்லாம் கருபொருள்கள்.

ஆ. கம்பு கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கம்.

17. சதாவதானம் குறித்து எழுதுக

18.போர் அறம் குறித்து எழுதுக

19.. தமிழ்நாட்டின் சிறு கூலங்கள் யாவை?

20. மண்ணுள் வினைஞரும், மண்ணீட்டு ஆளரும்

     பொன்செய் கொல்லரும், நன்கலம் தருநரும் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

21. “ தறிவு “ – என முடியும் திருக்குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                                   5×2=10

22. பாடாண் திணை பற்றிக் கூறுக

23. மரபுத் தொடருக்கான பொருளை எழுதுக

அ) மனக்கோட்டை                       ஆ) கண்ணும் கருத்தும்

24. வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத் தொடர்கள் அமைக்க.

அ) மனித குல மேன்மை                           ஆ) சுவைக்காத இளநீர்

25. கலைச்சொல்லுக்கான ஆங்கிலச் சொல்லைக் காண்க:-  அ) கலைச்சொல்              ஆ) பக்தி இலக்கியம்

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளிகளுக்கான மாற்று வினா

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.        அ) மலை,மாலை              ஆ) தொடு, தோடு

26. அடிக்கோடிட்ட தொடரில்  காணும் தொடர் வகைகளை எடுத்து எழுதுக.

மாடியிலிருந்து இறங்கினார் முகமது. பாடல்களைப் பாடுவதும், கேட்பதும் அவருக்குப் பொழுது போக்கு.

27. மயங்கிய – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

28. குறிப்புவிடைகள் என்பவை யாவை?

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                        2×3=6

29. மொழிபயர்ப்பின் பயனை எழுதுக

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி

சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன,

அ) பழந்தமிழ் மக்களின் எந்தெந்த எச்சங்களை அறிவதற்கு நிகழ்கலைகள் துணை செய்கின்றன?

ஆ) நிகழ்கலைகளின் பயன்கள் இரண்டினை எழுதுக.

இ) நிகழ்கலைகள் எப்பகுதி மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக திகழ்கின்றன?

31. ‘ பொய்க்கால் குதிரையாட்டம் ‘ என்னும் நிகழ்கலை குறித்து நீங்கள் அறிந்தவற்றை எழுதுக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                                  2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுறப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.

இறுக்கி முடிச்சிட்டால்

காம்புகளின் கழுத்து முறியும்

தளரப் பிணைத்தால்

மலர்கள் தரையில் நழுவும்.

வாசலில் மரணம் நிற்பதறிந்தும்

வருந்தாமல் சிரிக்கும்

இந்தப் பூவை

எப்படித் தொடுக்க நான்         

                                        நவீன கவிதை

கையாலே பூவெடுத்தா – மாரிக்குக்

காம்பழுகிப் போகுமின்னு

விரலாலே பூவடுத்தா – மாரிக்கு

வெம்பி விடுமென்று சொல்லி

தங்கத் துரட்டி கொண்டு – மாரிக்குத்

தாங்கி மலரெடுத்தார்

   நாட்டுப்புறப் பாடல்

 

33 கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

34.  அடிபிறழாமல் எழுதுக.

அ.“ புண்ணியப் புலவீர் “ எனத் தொடங்கும் திருவிளையாடற் புராணம்  பாடல்    ( அல்லது )

ஆ. “ விருந்தினனாக “ – எனத் தொடங்கும் காசிகாண்டம்  பாடலை எழுதுக

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                            2×3=6

35. . கொண்டு கூட்டுப் பொருள்கோளினை விளக்கி, எடுத்துக்காட்டு ஒன்று தருக.

36 தன்மையணி என்பதனை விளக்கி, அதன் வகைகளை குறிப்பிடுக.

37. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

     டைந்துடன் மாண்ட தமைச்சு  – இக்குறளுக்கு அலகிட்டு வாய்பாடு தருக

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                         5×5=25.

38. அ) முல்லைப்பாட்டின் காட்சிகளிலிருந்து சங்ககால மக்களின் வாழ்க்கைச் சூழலையும் நிகழ்கால வாழ்க்கைச் சூழலையும் ஒப்பிட்டு எழுதுக.   ( அல்லது )

ஆ) பொருள் செயல் வகை, கூடாநட்பு ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளைக் கூறுக

39. அ) உங்கள் பகுதியில் ஏற்பட்ட கடும் புயலில் சாய்ந்துவிட்ட மரங்களை அகற்றியும்,பழுதுபட்ட சாலைகளை சீரமைத்தும்,பழுந்தடைந்த மின்கம்பங்களைச் சரிசெய்தும் தருமாறு மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.                                                ( அல்லது )

ஆ. உங்கள் பள்ளியில் நடைபெறும் விடுதலை நாள் விழாவிற்கு,நிகழ்கலை வல்லுநர் ஒருவரை சிறப்பு விருந்தினராகப் பள்ளிக்கு அழைத்துக் கடிதம் எழுதுக.

40. காட்சியைக் கண்டு ஐந்து தொடர்கள் எழுதுக.

41. மதுரை மாவட்டம் அழகப்பா நகர்,சுந்தரம் தெருவிலுள்ள 110ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் அன்பழகனின் மகன் குமரன் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கிறார்.அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கூடைப்பந்து விளையாட்டில் பயிற்சிபெற விரும்புகிறார். தேர்வர் தம்மைக் குமரனாகக் கருதி, கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக..

.42.அ) மொழிபெயர்க்க.

Malar: Devi,switch off the lights when you leave the room

Devi : Yeah! We have to save electricity

Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!

Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.

Devi: Superb news! If we launch artificial moons,they can assist in disaster relief by beaming light on areas that lost power!                                                ( அல்லது )

ஆ)  நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றிற்கான மதிப்புரையினைக் குறிப்புகளைப் பயன்படுத்தி எழுதுக.

குறிப்புகள் : நூலின் தலைப்பு – நூலின் மையப் பொருள் – மொழி நடை – சிறப்புக் கூறு – நூல் ஆசிரியர்.

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

கருத்தாழமும் வாசக சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமூக அமைப்பின் சமூக முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர் ஜெயகாந்தன். நேர்முக, எதிர்முக விளைவுகளைப் பெற்ரவர். உள்ளடக்க விரிவால் மனிதாபி – மானத்தை வாசகர் நெஞ்சங்களில் விதைத்தவர். இவருடைய படைப்புகளுக்குக் குடியரசுத் தலைவர் விருது., சாகித்திய அகாதெமி விருது, சோவியத்  நாட்டு விருது மற்றும் ஞானபீட விருது,தாமரைத் திரு விருதுகளும் கிடைத்துள்ளன. “ நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உணடு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும், எனது தனி முயற்சியின் பயனுமாகும்” என்று கூறுகிறார் ஜெயகாந்தன். ‘ அர்த்தமே படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது’ என்பது அன்னாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

( I ). ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?

( ii ). மனிதாபிமானத்தை வாசகர் நெஞ்சில் விதைத்தவர் யார்?

( iii ) வாசகர் மனதில் ஜெயகாந்தன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினார்?

( iv ) எது படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது?.

( v )  உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                                              3×8=24

43. அ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு . குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும் “ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

( அல்லது )

ஆ) ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா?வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் ‘ செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள் ‘ பற்றி விவரித்து எழுதுக.

44. அ) குறிப்புகளைக் கொண்டு நாடகம் ஒன்றை எழுதுக.

மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும். கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி

                                                                            ( அல்லது )

ஆ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

      பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க

45. அ) உழவே தமிழர் பண்பாட்டின் மகுடம் – உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் – சுழன்றும் ஏர் பின்னது உலகம்   -  இக்குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று எழுதி பொருத்தமான தலைப்பிடுக.

    (அல்லது )

ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.

குறிப்புகள் : முன்னுரை – மொழிபெயர்ப்பு நூல்கள் – எட்டுத்திக்கின் கலைச் செல்வங்கள் கொண்ர்ந்திங்கு சேர்ப்பீர் – மொழிபெயர்ப்பும் கல்வியே – முடிவுரை

.

 

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post