10TH - TAMIL - MODEL PUBLIC EXAM QUESTION PAPER -2- PDF

 

மாதிரி வினாத்தாள் -2 

 

 

 

 

 

 

 

                                                                பதிவு எண்

மொழிப்பாடம் – பகுதி - I - தமிழ்

                                                                                                                                            நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                      மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

            ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

II )         கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                                                                               15×1=15

1. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது _________________

அ) தொழிற்பெயர்                        ஆ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்                

இ) முதனிலைத் தொழிற்பெயர்    ஈ) வினையாலணையும் பெயர்

2. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம் __________

அ) நாட்டைக் கைப்பற்றல்                       ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல்               ஈ) கோட்டையை முற்றுகையிடல்

3. திருவள்ளுவர் அறிவுடையார் எல்லாம் உடையார் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.இத்தொடருக்குப் பொருத்தமான நிறுத்தற்குறியிட்டத் தொடரைத் தேர்க.

அ) திருவள்ளுவர்,’ அறிவுடையார் எல்லாம் உடையார்’என்று’அறுதியிட்டுக்’ கூறுகிறார்.

ஆ) திருவள்ளுவர்,’அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

இ) திருவள்ளுவர்,” அறிவுடையார்,எல்லாம் உடையார்” என்று,அறுதியிட்டுக் கூறுகிறார்.

ஈ) ‘திருவள்ளுவர்’,’அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

4 கருணையன் என்பவர் _____________

அ) வீரமாமுனிவர்          ஆ) யோசேப்பு                இ) அருளப்பன்               ஈ) சாந்தா சாகிப்

5. கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்___________

அ) கூத்துக்கலைஞர் பாடவில்லை என்றால் கூடியிருந்த மக்கள் அமைதியாயிரார்.

ஆ) கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

இ) கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கினார் என்பதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்

ஈ) கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கி கூட்டத்திலிருட்ந்தவர்களை அமைதிப்படுத்தி  வைத்தார்

6. குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள்_________

அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்                    ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்

இ)  குறிஞ்சி, மருதம்,நெய்தல் நிலங்கள்                ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

7. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இதுதொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே________________

) பாடிய;கேட்டவர்                                  ) பாடல்;பாடிய        

) கேட்டவர்;பாடிய                                  ) பாடல்;கேட்டவர்

8.  குலசேகர ஆழ்வார் “ வித்துவகோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

பூனையார் பால் சோற்றைக் கண்டதும் விரைந்து வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதிகள் முறையே-

அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி                     ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி

இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி                     ஈ) கால வழுவமைதி, இட வழுவமதி

9. ‘ சங்க இலக்கியங்கள்,ஐந்திணைகளுக்குமான ஒழுக்கங்களை இரு திணைகளும் பெற எடுத்தியம்புகின்றன” – இத்தொடரில் அமைந்துள்ள தொகைச் சொற்களின் பொருத்தமான விரியைக் கண்டறிக.

அ) குறிஞ்சி,முல்லை,செய்தல்,பாலை – நல் வினை, தீ வினை

ஆ) குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை – உயர்திணை,அஃறிணை

இ) குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை,மருதம் – அறம்,பொருள்,இன்பம்

ஈ) குறிஞ்சி,மருதம்,மலை,காடு,வயல் – பனை, திணை

10. மேன்மை தரும் அறம் என்பது ___________

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது  

ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது                

ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

 11. தமிழனத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சி. கருதியது ____

அ) திருக்குறள்               ஆ) புறநானூறு              இ) கம்பராமாயணம்                   ஈ) சிலப்பதிகாரம்

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளி ( 12,13,14,15)

“ நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,

கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

பெரும்பயல் பொழிந்த சிறுபுன் மாலை”

12. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. முல்லைப்பாட்டு         ஆ. மலைபடுகடாம்         இ. நற்றிணை               ஈ. குறுந்தொகை

13. நனந்தலை உலகம் – இத்தொடரின் பொருள்

அ. சிறிய உலகம்            ஆ. தலையாய உலகம்               இ. நனைந்த உலகம்     ஈ. அகன்ற உலகம்

14. பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்

அ. பெரும்பெயல், பொழிந்த          ஆ. பாடுஇமிழ்,பனிக்கடல்            இ.பாடுஇமிழ்,கோடுகொண்டு

ஈ. நீர்செல,நிமிர்ந்த

15.பாடலில் இடம் பெற்றுள்ள அளபெடை

அ. தடக்கை       ஆ. வளைஇ                  இ. பெரும்பெயல்             ஈ. கொடுஞ்செலவு

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                               4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16.விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. நாயக்கர் ,மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச்செல்வோர்காகக் கட்டப்பட்டன.

ஆ. மொழிபெயர்ப்பு,மொழியில் புதுக் கூறுகளை உருவாக்கி மொழி வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.

17. தமிழ்ச்சொல் வளம் குறித்து கால்டுவெல் குறிப்பிடும் கருத்தை எழுதுக.

18.வசன கவிதை குறிப்பு வரைக.

19.. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

 

20. உறங்குகின்ற கும்பகன்ன ‘ எழுந்திராய் எழுந்திராய் ‘ கால தூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய் ‘ – கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

21. “ விடல் “ – என முடியும் திருக்குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                                   5×2=10

22. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.

23. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

தேன்,மணி,மழை,மேகலை

24. பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.

சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

25. கலைச்சொல் தருக:-                          அ) HOMOGARPH                        ஆ) VOVEL

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளிகளுக்கான மாற்று வினா

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.        அ) சிலை, சீலை              ஆ) விடு, வீடு

 26. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதல் பொருள், கருப்பொருள் வகைப்படுத்தி எழுதுக.

27. உரைத்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

28. கல்,ஆடு,கீரை,மக்கள் – இச்சொற்களின் கூட்டப் பெயர்களை எழுதுக

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                        2×3=6

29. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார்.அவரிடம் கல்வி கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி

தற்போது  வெளிவருகிற சில உயர்வகைத் திறன்பேசியின் ஒளிபடக் கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. கடவுச்சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது.உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு திறப்பது, இன்றைய தொழில் நுட்பம். செயற்கை நுண்ணறிவு, படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு அதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.

அ. திறன்பேசியைத் திறக்கும் பழைய முறைகள் எவை?

ஆ. திறன்பேசியில் படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது?

இ. உயர்வகைத் திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் எது?

31. . ஜெயகாந்தனின் ‘ தர்க்கத்திற்கு அப்பால் ‘ சிறுகதையின் கதை மாந்தர் ஒருவரின் சிறப்புக் கூறு ஒன்றினைக் குறிப்பிட்டு எழுதுக

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                                  2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. மன்னன், இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்?

33.மாளாத காதல் நோயாளன் போல் – என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

34.  அடிபிறழாமல் எழுதுக.

அ.“ அருளைப் பெருக்கி “ எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடல்    ( அல்லது )

ஆ. “ ஒலித்து அழுவ போன்றே “ – என முடியும் தேம்பாவணிப் பாடலை எழுதுக

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                            2×3=6

35. . கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை விளக்குக..

36. வெண்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக

37. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

     தாழா துஞற்று பவர் – இக்குறளுக்கு அலகிட்டு வாய்பாடு தருக

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                         5×5=25.

38. அ) கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.      ( அல்லது )

ஆ) வள்ளுவம்,சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

39. அ) ‘ மரம் இயற்கையின் வரம் ‘ என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

                                    ( அல்லது )

ஆ. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் ‘ என்ற உங்கள் குறுங்கட்டுரையை வெளியிட வேண்டி,அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

40. காட்சியைக் கண்டு பத்தி அமைக்க

41. வேலூர் மாவட்டம், எண் -7 , பாரதி தெரு, ஊசூரில் வசிக்கும் தமிழ்செல்வன் த/பெ, ரவி என்பவர் பிறந்த தேதி 01-01-2000,அவர் உதவியாளர் பணி வேண்டிவிண்ணப்பிக்கிறார். தேர்வர் தம்மை தமிழ்ச்செல்வனாக நினைத்து உரிய படிவம் நிரப்புக.

.42.அ) மொழிபெயர்க்க.

          Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about out Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamil who have defined grammar for  language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughtout  India, Srilanka, Malaysia, Singapore, England and World wide. Though our culture is very old, it has been updated Consistently. We should feel proud about our culture. Thank you one and all.

அல்லது

ஆ)  பள்ளியில் நான், வீட்டில் நான் – என்னும் தலைப்புகளில் நீங்கள், பள்ளியிலும்,வீட்டிலும் நடந்துகொள்ளும் முறைகள் ஐந்தினைப் பட்டியலிடுக.

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

கருத்தாழமும் வாசக சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமூக அமைப்பின் சமூக முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர் ஜெயகாந்தன். நேர்முக, எதிர்முக விளைவுகளைப் பெற்ரவர். உள்ளடக்க விரிவால் மனிதாபி – மானத்தை வாசகர் நெஞ்சங்களில் விதைத்தவர். இவருடைய படைப்புகளுக்குக் குடியரசுத் தலைவர் விருது., சாகித்திய அகாதெமி விருது, சோவியத்  நாட்டு விருது மற்றும் ஞானபீட விருது,தாமரைத் திரு விருதுகளும் கிடைத்துள்ளன. “ நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உணடு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும், எனது தனி முயற்சியின் பயனுமாகும்” என்று கூறுகிறார் ஜெயகாந்தன். ‘ அர்த்தமே படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது’ என்பது அன்னாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

( I ). ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?

( ii ). மனிதாபிமானத்தை வாசகர் நெஞ்சில் விதைத்தவர் யார்?

( iii ) வாசகர் மனதில் ஜெயகாந்தன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினார்?

( iv ) எது படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது?.

( v )  உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                                              3×8=24

43. அ) நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்த உங்கள் கருத்துகளை நாளிதழ் ஒன்றிற்கான ‘ தலையங்கமாக ‘ எழுதுக.

( அல்லது )

ஆ) வீட்டில் திண்ணை அமைத்த காரணம்,விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை – பசித்தவருக்கு உணவிடல் – இவை போன்ற செயல்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதை அழகுற விவரித்து எழுதுக.

44. அ) பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயல்.’ அன்னமய்யா’ புதிதாக வந்தவருக்கு உணவிட்ட செயலோடு ஒத்திருத்தலை ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதை வழி விளக்கி எழுதுக.

                                                                            ( அல்லது )

ஆ) “ பாய்ச்சல் “ சிறுகதையில் அழகுவின் கதாப்பாத்திரம் போல், நீங்கள் கண்டு மகிழ்ந்த பகல்வேடக் கலைஞர் குறித்த நிகழ்வுகளை ஒப்பிட்டும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் குறித்தும் விரிவாக எழுதுக.

 

45. அ) நீங்கள் சென்று வந்த அரசு பொருட்காட்சியில் அறிவிப்பு – அமைப்பு – சிறு அங்காடிகள் – நிகழ்த்தப்பட்ட கலைகள் – பேச்சரங்கம் – அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளக்க அரங்குகள் போன்றவற்றைக் குறிப்புகளாகக் கொண்டு கட்டுரை எழுதுக.

    (அல்லது )

ஆ) விசும்பின் துளியும் பசும்புல் தலையும் – காற்று மாசு – பசுமையைக் காப்போம் – மரம் நமக்கு வரம் – மழை நீர் உயிர் நீர் –

இக்குறிப்புகளைப் பயன்படுத்தி ‘ இயற்கையைக் காப்போம் ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

.

 

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post