|
|
|
|
|
|
|
மொழிப்பாடம் – பகுதி - I - தமிழ்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
அறிவுரைகள்
: 1) அனைத்து வினாக்களும்
சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின்
அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2)
நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்பு
: I ) இவ்வினாத்தாள்
ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15
)
i)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும்
II ) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக்
குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 15×1=15
1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்____________
அ) எம் + தமிழ் + நா ஆ) எந்த + தமிழ் + நா
இ) எந் + தமிழ் + நா ஈ) எ + தமிழ் + நா
2. காசிக்காண்டம் என்பது –
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
3. ‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –
அ) திருப்பதியும்,திருத்தணியும் ஆ) திருத்தணியும்,திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
4. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது________________
அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
இ) அறிவியல் முன்னேற்றம்
ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
5. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி ஈ) நோயாளியிடம் மருத்துவர்
6.
மேன்மை தரும் அறம் என்பது______________________
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ) புகழ் கருதி அறம் செய்வது
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
7.
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது – தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே________________
அ) பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய
இ) கேட்டவர்;பாடிய ஈ) பாடல்;கேட்டவர்
8. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
9.
இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்__________________
அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
10.
‘பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப் பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
இ) கடல் நீர் ஒலித்தல் ஈ) கடல் நீர் கொந்தளித்தல்
11. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ..............
அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15 )
“முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்க்காக ஆழிக்கும்
இணைகிடந் தேதமிழ் ஈண்டு “
1.
இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?
அ) தனிப்பாடல் திரட்டு ஆ) சிலப்பதிகாரம் இ) கனிச்சாறு
ஈ) பள்ளிப் பறவைகள்
2.
இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) தமிழழகனார் ஆ) பாவாணர் இ) பெருஞ்சித்திரனார்
ஈ) பாரதியார்
3.
முத்தமிழ் விரித்தெழுதுக, பிரித்தெழுதுக.
அ) தமிழழகனார் ஆ) பாவாணர் இ) பெருஞ்சித்திரனார் ஈ) பாரதியார்
4. ஆழி என்பதன் பொருள்
அ) மழை ஆ) கடல் இ)ஆறு ஈ) குளம்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
16.விடைக்கேற்ற வினா அமைக்க.
அ..சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்
தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்.
ஆ..சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின்
காலத்தை அறநெறிக்காலம் என்பர்
17. "வேங்கை'
என்பதைத் தொடர்மொழியாகவும்,
பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டு
18.வசன கவிதை – குறிப்பு வரைக.
19..மருத்துவத்தில்
மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
20.வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம்
கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக
.21. “ முயற்சி “ – எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
5×2=10
22. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு
எது?
அ) தேமா புளிமா காசு ஆ)
கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா காசு ஈ)
புளிமா தேமா பிறப்பு
23. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி
எழுதுக
அ) உழவர்கள் மலையில் உழுதனர் ஆ) முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறு பரதவர் கடலுக்குச் சென்றனர்.
24. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும்.
துள்ளல் ஓசை
கலிப்பாவுக்கு உரியது – இத்தொடர்களை ஒரேத் தொடராக இணைத்து எழுதுக.
25. கலைச்சொல் தருக:- அ) INTELLECTUAL ஆ) DOCUMENT
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளிகளுக்கான மாற்று வினா
தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க:- மரத்தை வளர்ப்பது
நன்மை பயக்கும்
26. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின் விளக்கின் சொடுக்கி
எந்தப் பக்கம் இருக்கிறது?
இதோ…………இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே!
மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
27. மயங்கிய – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
28. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர்
அமைக்க.
இயற்கை – செயற்கை
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29.சோலைக் காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.
30.முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். விருந்தே புதுமை என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.அமிழ்தே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பார் நல்லார். அத்தகையோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது. விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர். நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை. விதைத்துவிட்டு வந்த நெல்லை அரிந்து வந்து பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.
1. விருந்து குறித்து தொல்காப்பியம் குறிப்பிடுவது யாது?
2. விருந்தோம்பல் குறித்து சிறுபாணாற்றுப்படை கூறுவன யாவை?
3. நம் முன்னோர்களின் மகிழ்ச்சி எதில் உள்ளது.
31. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை?
33. எவையெல்லாம் அறியேன் என கருணையன் கூறுகிறார்?
34. அடிபிறழாமல்
எழுதுக.
அ.“ சிறு தாம்புத் “ எனத் தொடங்கும் முல்லைப்பாட்டு பாடல் ( அல்லது )
ஆ. “ தூசும் துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. . அருளொடும்
அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள
விடல் – இக்குறட்பாவிற்கு அலகிட்டு வாய்பாடு தருக.
36. தன்மை அணியினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
37.
வினாவின் வகைகளை எழுதி
எடுத்துக்காட்டுத் தருக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25.
38. அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக ( அல்லது )
ஆ) முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
39. அ)
நீங்கள்
விரும்பி படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் கூறி,உங்கள் நண்பரையும் அந்நூலினைப் படிக்குமாறுப்
பரிந்துரைத்துக் கடிதம் எழுதுக.
( அல்லது )
ஆ. உணவு
விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்,விலைக் கூடுதலாகவும் இருந்ததைக் குறித்து
உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
41. 4/45, பூங்கா நகர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் கருப்பையாவின் மகள் இனியா நூலகத்தில் உறுப்பினராகச் சேர உள்ளார். தேர்வர் தன்னை இனியாவாகப் பாவித்து உரிய படிவத்தில் நிரப்புக.
42.அ)
மொழிபெயர்க்க.
அல்லது
ஆ) கற்ற அறங்கள் நமக்குக் கைகொடுக்கும்
நிலையில், நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும்
பட்டியலிடுக.
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள்
கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம்
தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து
மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து
திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம்
கடந்தது.
1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை
எடுத்து எழுதுக.
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
3. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து
வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) தமிழரின் சொல்வளம் பற்றியும், புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும், தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக
( அல்லது )
ஆ) இறைவன், புலவர் இடைக்காட ன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
44. அ) கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
( அல்லது )
ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
45. அ) குறிப்புகளைக் கொண்டு
கட்டுரை எழுதுக.
முன்னுரை – அமுதமொழி – சங்கத்
தமிழ் – தமிழ் வளர்த்த சான்றோர் – தமிழ் இலக்கிய வரலாறு - முடிவுரை
( அல்லது )
ஆ) முன்னுரை – இளமையும் கல்வியும்
– முதல் விண்வெளிப் பயணம் – இறுதிப் பயணம் -
விருதுகளும் அங்கீகாரங்களும் – முடிவுரை – குறிப்புகளைக் கொண்டு “ விண்வெளியும்
கல்பனா சாவ்லாவும் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
PLS WAIT FOR 10 SECONDS AFTER DOWNLOAD THIS PDF