அரசு பொதுத் தேர்வு - 2023
பத்தாம் வகுப்பு / கணிதம்
அன்பிற்கினிய மாணவர்களே அரசு பொதுத் தேர்வு - 2023 கணிதப்பாடத்தில் இயற்கணித்தத்தின் பங்கு எவ்வளவு இருக்கும்? எத்தனை மதிப்பெண்களுக்கு வினாத்தாளில் வினா இருக்கும். என்பதனை ஆசிரியர் உங்களுக்கு இந்த காணொளியில் எளிமையாக விளக்கியுள்ளார். சென்ற ஆண்டு இவர் எடுத்த இந்த வகுப்பின் நேரலை தொகுப்பு அப்படியே உங்களுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இவர் அளித்தப் பதில்களும் உங்களுக்கு அப்படியே வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் முழுமையாகப் பார்க்கும் படி அன்போடு வேண்டுகிறோம். ஏனெனில் சிறிது தள்ளி விட்டு தள்ளி விட்டு பார்த்தலும் அவர் என்ன சொல்ல வந்தார் என்பதனை முழுமையாக தெரிந்துக் கொள்ள இயலாமல் போகக் கூடிய வாய்ப்பு அதிகம். அதனால் முழுமையாக கடைசி வரைப் பார்க்கும் படி வேண்டுகிறோம். மேலும் இந்த பாடத்தை அவர் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரு சேர எளிமையாக மாணவர்களுக்கு புரியும் படி நடத்தி இருப்பார். எனவே மாணவர்களே இந்த இயற்கணித்தத்தின் பங்கும் மதிப்பெண்ணும் இந்த காணொளி வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம்.
( 2022 இல் கணிதப் பொதுத் தேர்வுக்கு முன்பு நடத்தப்பட்ட காணொளி )