அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். இனி வரும் காலங்களில் கணினி தான் மிக முக்கியம் என்ற நிலை வரப்போகிறது. அதற்கு ஏற்றாற் போலவே நம்முடைய கல்வித்துறையில் பல்வேறு விதமான மாற்றங்களை அடைந்து வருகிறது. மாணவர்களின் விபரங்கள் சார்ந்தும், ஆசிரியர்களின் விபரங்கள் சார்ந்தும் அனைத்தும் கணினி மையமாக்கப்பட்டுள்ளது. எனவே நாமும் இனி வரும் காலங்களில் கணினியை அறிந்துக் கொள்வது அவசியம். ஆசிரியர்களில் இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் மடிகணினி அல்லது கணினி வைத்துள்ளனர். இந்த கணினியின் மூலம் நம் மாணவர்களுக்கு நாமே நம்முடைய கற்றல் வளங்களை எவ்வாறு உருவாக்குவது? வினாத்தாளினை வடிவமைப்பது ? போன்ற கணினி சார்ந்த பயிற்சிகளை வழங்க கல்விவிதைகள் முயற்சி எடுக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கணினி பயிற்சி பெற்று இனி வரும் காலங்களில் இன்னும் சிறப்பாகவும், விரைவாகவும் நாம் பணியாற்றி மன நிறைவுக் கொள்வோம்.
இன்றைய தினத்தில் ஒரு ஆவணம் ஆங்கிலத்தில் தயார் செய்வது என்றால் எளிமையாக தயார் செய்து விடலாம். ஏனெனில் விசைப்பலகையில் ஆங்கில எழுத்துகள் உள்ளன. அவற்றைக் கொண்டு நாம் ஆங்கிலத்தில் எளிமையாகவும், விரைவாகவும் ஆவணத்தை உருவாக்கிட முடிகிறது. அதே தமிழில் ஆவணம் உருவாக்கு என்றால் சற்று கடினம். ஏன்? விசைப்பலகை ஆங்கிலத்தில் உள்ளது. ஆங்கில எழுத்துகளைக் கொண்டு தமிழில் தட்டச்சு செய்வது என்பது அதற்கு பயிற்சி பெற வேண்டும். இந்த காணொளியில் நாம் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் தமிழில் ஆவணத்தை உருவாக்கிட முடியும். அந்த செயலி என்ன? அதனை எவ்வாறு பயன்படுத்துவது? என்பதனை அறிய இந்த காணொளியினை இறுதிவரை பாருங்கள். உங்களுக்கு தமிழில் ஆவணம் உருவாக்குவதற்கான அனைத்து படிநிலைகளும் இங்கு விளக்கப்பட்டுள்ளது. காணொளியில் எந்த ஒரு பகுதியினை தவிர்த்து விட்டு பார்க்காதீர்கள். ஏனெனில் உங்களுக்கான புரிதல் குறைந்து விடும். இந்த சேனலை SUBSCRIBE செய்தும் LIKE செய்தும் SHARE செய்தும் எங்களுக்கு ஊக்கத்தை தர வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறோம்.
தமிழில் ஒரு ஆவணத்தை உருவாக்குவது எப்படி?