9TH - TAMIL - NOTES OF LESSON - MARCH/23 - 3RD WEEK

 

நாள்               :           13 -03-2023 முதல் 17-03-2023     

மாதம்                          மார்ச்

வாரம்               :             மூன்றாம்  வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

            தலைப்பு        :     திருப்புதல் - இயல் 5 மற்றும் இயல் -6

பொது நோக்கம்       :

Ø  மாணவர்களைப் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயார் செய்யும் வண்ணம் பாடங்களை மீள்பார்வை செய்தல்

Ø  இயல் – 5,6 கானப் பாடப்பகுதிகளில் உள்ள வினாக்கள், மொழித்திதிறன்கள் இவற்றில் பயிற்சி மேற்கொள்ளல்

Ø  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்தல்

Ø  செய்யுளில் உள்ள எதுகை, மோனை நயங்களை காணுதல்

Ø  பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், குறுவினா, சிறு வினா, சிந்தனை வினா இவற்றில் போதிய பயிற்சி வழங்குதல்

Ø  சிறு சிறுத் தேர்வுகள் நடத்துதல்

Ø  மனப்பாடக்குறளை மனனம் செய்தல்

சிறப்பு நோக்கம்        :

Ø  பாடப்பகுதியில் உள்ள முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  கட்டுரைப் பகுதியில் போதிய பயிற்சி தருதல்

Ø  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்ய வைத்தல்.

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்

Ø  மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சில முக்கிய வினாக்கள் அல்லது முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் உள்ள வினாக்களில் திரும்ப திரும்ப பயிற்சி அளித்தல்.

Ø  முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்

Ø  வினாத்தாளில் தவறாது

முக்கிய வினாக்கள்

·         தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?

·         மூவாது மூத்தவர், நூல் வல்லார்- இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக.

·         நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?

·         சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக

·         மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.

·          நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப் பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.

·         நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.

·          குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக

·         நடுகல் என்றால் என்ன?

·          இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?

·          கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?

·          இடிகுரல் , பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.

·         பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?

·         முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?

·         நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?

·         இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.

·         தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக

·         ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக

·         கைபிடி, கைப்பிடி – சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக

 

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post