8TH - TAMIL - NOTES OF LESSON - MARCH/23- 3RD WEEK

 
நாள்               :           13-03-2023 முதல்   17-03-2023      
மாதம்                          மார்ச்
வாரம்               :              மூன்றாம்    வாரம்                     
வகுப்பு              :           எட்டாம் வகுப்பு    
 பாடம்               :           தமிழ்  
தலைப்பு          :             திருப்புதல்         இயல் - 7
பொது நோக்கம்       :
Ø  மாணவர்களை ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயார் செய்யும் வண்ணம் பாடங்களை மீள்பார்வை செய்தல்
Ø  இயல் – 7 கானப் பாடப்பகுதிகளில் உள்ள வினாக்கள், மொழித்திதிறன்கள் இவற்றில் பயிற்சி மேற்கொள்ளல்
Ø  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்தல்
Ø  செய்யுளில் உள்ள எதுகை, மோனை நயங்களை காணுதல்
Ø  பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், குறுவினா, சிறு வினா, சிந்தனை வினா இவற்றில் போதிய பயிற்சி வழங்குதல்
Ø  பாடங்களுக்குகான செயல்பாடுகளை செய்ய வைத்தல்
Ø  சிறு சிறுத் தேர்வுகள் நடத்துதல்
சிறப்பு நோக்கம்        :
Ø  பாடப்பகுதியில் உள்ள முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்.
Ø  கட்டுரைப் பகுதியில் போதிய பயிற்சி தருதல்
Ø  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்ய வைத்தல்.
Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்
Ø  மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சில முக்கிய வினாக்கள் அல்லது முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் உள்ள வினாக்களில் திரும்ப திரும்ப பயிற்சி அளித்தல்.
 
முக்கிய வினாக்கள்                                  :                               இயல் - 7
படைவேழம்
குறுவினா 

1. சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர்? 

2. கலிங்க வீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்? 

3. சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் யாவை? 

சிறுவினா 

சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப் படை வீரர்களின் செயல்களாகக் 

கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை? 

சிந்தனை வினா 

ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவை யானவை எவை எனக் கருதுகிறீர்கள்? 

விடுதலைத் திருநாள்
குறுவினா 

 1. பகத்சிங் கண்ட கனவு யாது?
2. இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்? 

சிறுவினா 

இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்? 

சிந்தனை வினா 

நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?
 
பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் 

குறுவினா 

1. எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் என்ன?
2. திரைத் துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் யாவை?
3. எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்களுள் நான்கனை எழுதுக. 

சிறுவினா 

1. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படை யாக அமைந்த நிகழ்வை எழுது
2. தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் யாவை? 

நெடுவினா 

எம்.ஜி.ஆரின் பண்புநலன்களை விளக்கி எழுதுக. 

 சிந்தனை வினா 

சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளாக நீங்கள் கருதுவன யாவை? 

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் 

பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.
1. சுட்டுத் திரிபு - __________________________.
2. திசைப் பெயர்கள் - __________________________.
3. பெயரெச்சம் - __________________________.
 4. உவமைத் தொகை - __________________________.
5. நான்காம் வேற்றுமை விரி - __________________________.
 6. இரண்டாம் வேற்றுமை தொகை - __________________________.
7. வினைத் தொகை - __________________________.
 8. உருவகம் - __________________________.
9. எழுவாய்த் தொடர் - __________________________.
10. எதிர்மறைப் பெயரெச்சம் - __________________________. 

சிறுவினா 

1. சந்திப்பிழை என்றால் என்ன? 

2. வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக. 

3. வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post