பொது நோக்கம் :
Ø மாணவர்களை ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயார் செய்யும் வண்ணம் பாடங்களை மீள்பார்வை செய்தல்
Ø இயல்
– 6 கானப் பாடப்பகுதிகளில் உள்ள வினாக்கள், மொழித்திதிறன்கள் இவற்றில் பயிற்சி மேற்கொள்ளல்
Ø மனப்பாடப்
பகுதிகளை மனனம் செய்தல்
Ø செய்யுளில்
உள்ள எதுகை, மோனை நயங்களை காணுதல்
Ø பாடப்
புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், குறுவினா, சிறு வினா, சிந்தனை வினா இவற்றில்
போதிய பயிற்சி வழங்குதல்
Ø பாடங்களுக்குகான
செயல்பாடுகளை செய்ய வைத்தல்
Ø சிறு
சிறுத் தேர்வுகள் நடத்துதல்
Ø திருக்குறள்
கருத்துகளை பயிற்சி அளித்தல்
Ø மனப்பாடக்குறளை
மனனம் செய்தல்
சிறப்பு நோக்கம் :
Ø பாடப்பகுதியில்
உள்ள முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்.
Ø கட்டுரைப்
பகுதியில் போதிய பயிற்சி தருதல்
Ø மனப்பாடப்
பகுதிகளை மனனம் செய்ய வைத்தல்.
Ø மெல்லக்
கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்
Ø மெல்ல
கற்கும் மாணவர்களுக்கு சில முக்கிய வினாக்கள் அல்லது முந்தைய ஆண்டு வினாத்தாள்களில்
உள்ள வினாக்களில் திரும்ப திரும்ப பயிற்சி அளித்தல்.
முக்கிய வினாக்கள் : இயல்
- 6
குறுவினா
1. பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது யாது?
2. உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?
சிறுவினா
1. உழவுத் தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை?
சிந்தனை வினா
உழவுத் தொழில் சிறக்க இன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?
குறுவினா
1. மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறுப்படுகிறது?
2. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?
சிறுவினா
1. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?
2. மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.
3. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?
சிந்தனை வினா
மழைவளம் பெருக நாம் செய்ய வேண்டுவன யாவை?
கொங்கு நாட்டு வணிகம்
குறுவினா
1. மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.
2. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?
3. ‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
சிறுவினா
1. கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?
2. கரூர் மாவட்டம் பற்றிய செய் திகளைச் சுருக்கி எழுதுக.
நெடுவினா
கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டுவணிகம் குறித்து எழுதுக.
சிந்தனை வினா
நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து வேறு எவையெல்லாம் உதவும்
என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
புணர்ச்சி
சிறுவினா
1. இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
2. மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை