7TH - TAMIL - NOTES OF LESSON - MARCH-23 - 2ND WEEK

 

நாள்               :           06 - 03- 2023 முதல் 10 - 03 -2023     

மாதம்                          மார்ச்

வாரம்               :              இரண்டாம்  வாரம்                     

வகுப்பு              :            ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. தன்னை அறிதல்

அறிமுகம்                                 :

Ø  உனக்குப் பிடித்த பொழுதுபோக்கு எது?

Ø  உன் எதிர்கால நோக்கம் யாது? போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தி திறன் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

                                                தன்னை அறிதல்

Ø  தனித்தன்மை பற்றிக் கூறல்

Ø  சாதனைப் புரிய தம்முடைய திறனை கண்டறிதல் பற்றிக் கூறல்

Ø  கவிதையின் ஆசிரியர் பற்றிக் கூறல்

Ø  கவிதையை உணர்வுக்கு ஏற்ற வகையில் வாசித்துக் காட்டல்.

Ø  கவிதையின் உட் பொருளை விளக்குதல்

Ø  மாணவர்களை தம்முடைய தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள ஊக்குவித்தல்

 

 

நினைவு வரைபடம்                   :

                                                                                                     தன்னை அறிதல்

 


 

விளக்கம்  :

( தொகுத்தல் )

தன்னை அறிதல்

Ø  கவிதையின் ஆசிரியர்

o   சே, பிருந்தா

o   மழை பற்றிய பகிர்தல், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை

Ø  கவிதையின் உட் பொருள்

o   குயில் காக்கை கூட்டில் முட்டையிடுகிறது.

o   குயில் குஞ்சுவிற்கு காகம் உணவளிக்கிறது.

o   காகம் போல கரைய முயல்கிறது குயில் குஞ்சு

o   தான் குயில் என்பதனையும், தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது.

o   தன் ஆற்றலை உணர்த்தால் வாழ்வில் சாதனை புரியலாம் என கவிதை உணர்த்துகிறது.

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

தன்னை அறிதல்

Ø  தனித்தன்மை பற்றி அறிதல்

Ø  சாதனைப் புரிய தம்முடைய திறனை கண்டறிதல் பற்றி அறிதல்

Ø  கவிதையின் ஆசிரியர் பற்றி அறிதல்

Ø  கவிதையை உணர்வுக்கு ஏற்ற வகையில் வாசித்தல்

Ø  கவிதையின் உட் பொருளை அறிதல்

Ø   தம்முடைய தனித்திறன்களை அறிந்து கொள்ளுதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  கூடு கட்ட தெரியாத பறவை __________

Ø  காகம் __________ ( கரையும்/கூவும் )

MOT

Ø  காக்கை ஏன் குயில் குஞ்சைப் போக சொன்னது?

Ø  குயில் குஞ்சு தன்னை எப்போது ‘ குயில் ‘ என உணர்ந்தது?

HOT:

Ø  உங்களிடம் உள்ள தனித்திறமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

கற்றல் விளைவுகள்  :

தன்னை அறிதல்

·         T704 தாங்கள் படித்தவற்றை பற்றி சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.

·         T709 ஒன்றைப் படித்து முழுமையான பொறுமையை உணர்ந்து அதன் பயன்பாட்டினை கூறுதல்

·         T714  படிக்கும் போது வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் பாடப்பொருள்களை புரிந்து கொள்வதுடன் அகராதிகள், பார்வை நூல்கள், வரைபடங்கள் ,இணையதளம் அல்லது பொருள்கள் ஆகியவற்றின் துணைக் கொண்டு பொருண்மையை தெளிவாக அறிதல்

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  எல்லோரும் ஒற்றுமையாக இருக்க சமுதாயத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதி வருக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post