நாள் : 13 - 03- 2023 முதல் 17- 03 -2023
மாதம் : மார்ச்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. முடிவில் ஒரு தொடக்கம்
அறிமுகம் :
Ø தானங்களில்
சிறந்த தானமாக நீங்கள் எதனை கருதுவீர்கள்? ஏன்?
Ø கடையேழு
வள்ளல்கள் பற்றிக் கூறி அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
·
உறுப்பு
தானத்தின் அவசியம் உணர்தல்
ஆசிரியர் குறிப்பு :
முடிவில் ஒரு தொடக்கம்
Ø மனித
நேயப் பண்புகளில் தானத்தைப் பற்றிக் கூறல்
Ø கடையேழு வள்ளல்கள் சிறப்பைக்
கூறல்
Ø இன்றைய சூழலில் இரத்த
தானம் பற்றி அதிகம் கேள்விப்பட்டதைக் கூறல்
Ø உடல் உறுப்பு தானத்தின்
அவசியம் உணர்தல்
Ø உடல் உறுப்பு தானத்தில்
முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல்
கருத்துரு வரைபடம் :
முடிவில் ஒரு தொடக்கம்
விளக்கம் :
முடிவில் ஒரு தொடக்கம்
Ø பொன்னையும், பொருளையும்
கொடுப்பது மட்டும் கொடையன்று
Ø உறுப்பையும் தருவதே சிறந்த
கொடை
Ø பெங்களூரில் உள்ள சிறுமிக்கு
இதயம் பலவீன மடைகிறது.
Ø திருக்கழுக்குன்றத்தில்
ஒருவருக்கு விபத்து ஏற்படுகிறது. அவரின் இதயம் மட்டும் துடித்துக் கொண்டு இருக்கிறது.
Ø பெருங்களூரில் உள்ள சிறுமிக்கு
அந்த இதயம் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைகிறது.
Ø திருக்கழுக்குன்றத்தில் விபத்தில் இறந்தவரின் இதயம் பெங்களூரில் உள்ள அந்த
சிறுமிக்குப் பொருத்தப்படுகிறது.
Ø இறந்தும் அவரின் இதயம்
வாழ்கிறது. உறுப்புக் கொடை மூலமாக.
Ø உறுப்புக்கொடை மூலம்
அந்த சிறுமியின் உயிர் காக்கப்படுகிறது.
Ø உறுப்பு தானத்தின் அவசியம்
இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்க குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
o மனித நேய பண்புகளை அறிதல்
o தானத்தின் அவசியம் உணர்தல்
o கொடுத்து உதவும் பண்பினை
அறிதல்
o உறுப்புக் கொடையின் அவசியம்
பற்றி அறிதல்
o உறுப்பு தானத்தின் மூலம்
உயிர் பிழைக்கும் வழி அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø தானம் என்பது யாது?
Ø உனக்குத் தெரிந்த மனித
நேய பண்புகளைக் கூறுக.
MOT :
Ø உறுப்புக் கொடை என்பது
யாது?
Ø சமூகத்தில் உள்ள தானங்களின்
தன்மைகளைக் கூறுக.
HOT
Ø இந்த நிகழ்வின் மூலம்
நீங்கள் அறிவது யாது?
Ø உறுப்பு தானத்தின் அவசியத்தை
நீங்கள் எவ்வாறு மற்றவர்களுக்கு எடுத்துரைப்பீர்கள்?
கற்றல் விளைவுகள் :
முடிவில் ஒரு தொடக்கம்
·
T611 ஒலி யியைவு , சந்தம் முதலான
யாப்பமைதிக் கூறுதல் மரபுத் தொடர்கள் போன்ற
மொழியின் மரபு நடை நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள் கட்டுரைகளின் நயம்
பாராட்டல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø இந்நிகழ்வை சுருக்கி
கதையாக எழுதுக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை