10TH - TAMIL - UNIT -6- BOOK IN ONE WORD - ONLINE QUIZ
byKALVIVITHAI-
0
புத்தக உள் வினாக்கள்
புத்தகத்திலிருந்து ஒரு 15 வினாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வினை எழுதலாம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
இயல் - 6
பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தக உள் வினாக்கள்
பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தக உள் வினாக்கள்
புத்தக உள் வினாக்கள் பத்தாம் வகுப்பு - தமிழ் பகுதி -6
INSTRUCTIONS TO THE STUDENT: 1.மாணவர்கள் வினாக்களை ஒருமுறைக்கு இரு முறை நன்கு வாசித்து கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் எது மிகச்சரியாக பொருந்துகிறதோ அதனை தேர்வு செய்க. 2. ஒரு கேள்விக்கு ஒரு விடை மட்டுமே. 3. இந்த தேர்வினை முடிப்பதற்கான கால அவகாசம் 45 நிமிடங்கள் மட்டுமே. 4. மாணவர்கள் இந்த இணைய இணைப்பைப் பயன்படுத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். 5. முயற்சி.., பயிற்சி..., வெற்றி..., மகிழ்ச்சி..
வாழ்வின் முறையைக் கூறுவது-------------------------------இலக்கணம் ஆகும்.
அ) எழுத்து
ஆ) சொல்
இ) யாப்பு
ஈ) பொருள்
கீழ்க்கண்ட திணைகளுள் வேறுபட்டதைக் கண்டறிக.
அ) குறிஞ்சி
ஆ) கைக்கிளை
இ) முல்லை
ஈ) மருதம்
வளவன் காலையில் வயலுக்குச் சென்றான்- இது எத்திணைக்குரியது?
அ) முல்லை
ஆ) நெய்தல்
இ) மருதம்
ஈ) குறிஞ்சி
ஒரு பெரும்பொழுதிற்கு --------------------------- மாதங்கள்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஒன்று
ஈ) நான்கு
ஆவணி, புரட்டாசி மாதங்கள் முல்லைத் திணையக்குரியது . இதில் அடிக்கோடிட்ட மாதங்கள் குறிக்கும் பெரும்பொழுது எது?
அ) குளிர்காலம்
ஆ) கார்காலம்
இ) முன்பனிக்காலம்
ஈ) இளவேனில் காலம்
பரதவர் ,முருகனைத் தொழுது தேனும் தினையும் படைத்தனர். இதில் பிழையான கருப்பொருள் எது?
அ) முருகன்
ஆ) தேன்
இ) தினை
ஈ) பரதவர்
கொடைக்கானல் மலையில் கிழங்கு வாங்கினேன். இதில் உள்ள திணை-----------ஆகும்.
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) பாலை
ஞாயிறு மறையும் நேரத்தில் பாடினாள்- இதிலுள்ள சிறுபொழுது -----------------------ஆகும்.
அ) காலை
ஆ) எற்பாடு
இ) யாமம்
ஈ) வைகறை
கம்பராமாயணம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?
அ) ஆறு காண்டங்களை உடையது
ஆ) இராமாவதாரம் என்று பெயரிடப்பட்டது
இ) அழகுணர்ச்சி குறைந்த நூல்
ஈ) சந்தநயம் மிக்க நூல்
கீழ்க்கண்ட நூல்களுள் வேறுபட்டது எது
அ) திருக்கை வழக்கம்
ஆ) சரசுவதி அந்தாதி
இ) ஏரெழுபது
ஈ) தேவாரம்
நெடும்படை என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உவமைத்தொகை
ஈ) உம்மைத் தொகை
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) தாது - மகரந்தம்
ஆ) வண்மை - கொடைத்தன்மை
இ) வெய்யோன் – கதிரவன்
ஈ) பொய்கை - ஆறு
பிள்ளைத்தமிழ் --------------------------- நூல்களுள் ஒன்று.
அ) சிற்றிலக்கியங்கள்
ஆ) காப்பிய இலக்கியங்கள்
இ) பேரிலக்கியங்கள்
ஈ) அற இலக்கியங்கள்
ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான பருவங்களின் எண்ணிக்கை---------------------ஆகும்.