அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பார்ந்த வணக்கம். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்கு உங்கள் தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் பல்வேறு விதமான கற்றல் வளங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் மொழித்திறன் பகுதியில் கவனம் செலுத்தும் விதமாக அனைத்து இயல்களிலும் உள்ள மொழித்திறன் பயிற்சிகளில் எவ்வாறு விடையளிப்பது? என்ற காணொளியை தொடர்ந்து உங்களுக்காக தயார் செய்து வருகிறோம். அதனைக் கண்டு மாணவர்கள் மொழித்திறன் பகுதியில் முழுமையான மதிப்பெண் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அந்த வகையில் இங்கு இயல் 1 முதல் 9 வரையிலான மொழ்த்திறன் பயிற்சிகளை உங்களுக்கு PDF வடிவில் தற்போது வழங்குகிறோம். இதனைக் கொண்டு மாணவர்கள் நன்றாக பயிற்சி செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு இயலின் மொழித்திறன் பகுதி காணொளியினை இங்கு உங்களுக்கு வழங்குகிறோம். அந்த காணொளியின் கீழ் அந்த இயலின் மொழித்திறன் பயிற்சி PDF பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பும் வழங்கப்பட்டு இருக்கும். காணொளியின் மூலம் விடைகளைக் காணுங்கள். PDF மூலம் பயிற்சி பெறுங்கள். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற தமிழ் விதை மற்றும் கல்விவிதைகளின் வாழ்த்துகள்.
பத்தாம் வகுப்பு
தமிழ்
மொழித்திறன் - பயிற்சி
இயல் - 9
காணொளி
PDF - FORMAT
Tags:
CLASS 10