9TH - TAMIL - NOTES OF LESSON - FEBRUARY/23 - 4TH WEEK

 

நாள்               :           20 -02-2023 முதல் 24-02-2023     

மாதம்                          பிப்ரவரி

வாரம்               :              நான்காம்   வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

            தலைப்பு        :     அணியிலக்கணம்

அறிமுகம்                 :

Ø  அழகு என்பதன் பொருள் என்ன? எது எதெல்லாம் அழகு? இவ்வாறான சில வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                                   :

Ø  அணியிலக்கணத்தை அறிந்து கவிதையைச் சுவைத்தல்

ஆசிரியர் குறிப்பு                     :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  அணியிலக்கணத்தைப் பற்றிக் கூறல்

Ø  அணியிலக்கணத்தின் சிறப்பைக் கூறல்

Ø  பாடப்பகுதியில் இடம் பெற்ற அணிகளை விளக்குதல்

Ø  அணியிலக்கணத்தை இன்றைய கவிதைகளோடு ஒப்பிடல்

கருத்து  வரைபடம்                   :

அணியிலக்கணம்


 

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

அணியிலக்கணம்

Ø  செய்யுளின் கருத்தை அழகுப்படுத்துவது அணி

Ø  உவமை அணி

o    உவம உருபு வெளிபட்டு வரும்

Ø  உருவக அணி

o    உவமையின் தன்மையைப் பொருள்மேல் ஏற்றிக்கூறுவது

o    உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்றுத் தோன்றக் கூறுவது.

Ø  சொல் பின்வரு நிலையணி

o    வந்த சொல் பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது

Ø  பொருள் பின் வருநிலையணி

o    செய்யுளின் முன் வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது.

Ø  சொற்பொருள் பின்வரு நிலையணி

o    முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர் பல இடங்களிலும் வருவது.

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  தமிழின் இலக்கணங்களைப் பற்றி  அறிதல்

Ø  ஐவகை இலக்கணங்களை மீள்பார்வை செய்தல்

Ø  அணி இலக்கணத்தைப் பற்றி அறிதல்

Ø  பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள அணிகளை அறிதல்

Ø  இன்றைய சூழலில் அணிகள் பயன்படும் விதம் பற்றி தெரிதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது ____________

Ø  அணிகளில் இன்றியமையாத அணி ___________

MOT

Ø  உருவக அணி பற்றிக் கூறுக.

Ø  வஞ்சப் புகழ்ச்சி அணி எவ்வாறு அமையும்?

HOT

Ø  தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்     - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

கற்றல் விளைவுகள்                  :

Ø   T948 அணியிலக்கணத்தை அறிந்து செய்யுளைச் சுவைத்துப் படித்தல்.

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post