பொது நோக்கம் :
Ø மாணவர்களை ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயார் செய்யும் வண்ணம் பாடங்களை மீள்பார்வை செய்தல்
Ø இயல்
– 3 கானப் பாடப்பகுதிகளில் உள்ள வினாக்கள், மொழித்திறன்கள் இவற்றில் பயிற்சி மேற்கொள்ளல்
Ø மனப்பாடப்
பகுதிகளை மனனம் செய்தல்
Ø செய்யுளில்
உள்ள எதுகை, மோனை நயங்களை காணுதல்
Ø பாடப்
புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், குறுவினா, சிறு வினா, சிந்தனை வினா இவற்றில்
போதிய பயிற்சி வழங்குதல்
Ø பாடங்களுக்குகான
செயல்பாடுகளை செய்ய வைத்தல்
Ø சிறு
சிறுத் தேர்வுகள் நடத்துதல்
சிறப்பு நோக்கம் :
Ø பாடப்பகுதியில்
உள்ள முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்.
Ø கட்டுரைப்
பகுதியில் போதிய பயிற்சி தருதல்
Ø மனப்பாடப்
பகுதிகளை மனனம் செய்ய வைத்தல்.
Ø மெல்லக்
கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்
Ø மெல்ல
கற்கும் மாணவர்களுக்கு சில முக்கிய வினாக்கள் அல்லது முந்தைய ஆண்டு வினாத்தாள்களில்
உள்ள வினாக்களில் திரும்ப திரும்ப பயிற்சி அளித்தல்.
முக்கிய வினாக்கள் : இயல்
- 3
1. நோயின் மூன்று வகைகள்
யாவை?
2. நோயின் வகைகள், அவற்றைத்
தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
3. துன்பமின்றி வாழ நாம்
கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை?
4.நம்மை
நோய் அணுகாமல் காப்பவை எவை?
5.
உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
6 மருத்துவம்
எப்போது தொடங்கியது?
7. நல்வாழ்விற்கு
நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
8.நோய்கள்
பெருகக் காரணம் என்ன?
9. பள்ளிக்
குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
10.தமிழர்
மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
11. எச்சம்
என்றால் என்ன? அதன்
வகைகள் யாவை?
12. ‘அழகிய
மரம்’ – எச்ச வகையை விளக்குக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை