7TH - TAMIL - NOTES OF LESSON - MARCH-23 - 1ST WEEK

   

நாள்               :           27 - 02- 2023 முதல் 03 - 03 -2023     

மாதம்                          மார்ச்

வாரம்               :              முதல்  வாரம்                     

வகுப்பு              :            ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. மலைப்பொழிவு

அறிமுகம்                                 :

Ø  உங்கள் மீது யார் அன்பாக இருப்பார்கள்?

Ø  உங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் யார்? போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

                                                மலைப்பொழிவு

Ø  நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு பற்றிக் கூறல்

Ø  மதங்கள் பற்றிக் கூறல்

Ø  இயேசு நாதரின் அறிவுரைகளைக் கூறல்

Ø  பாடலின் பொருளை விளக்குதல்

Ø  பாடலின் பொருளை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்

Ø  மனப்பாடப் பகுதியை  இனிய இராகத்தில் பாடுதல்

 

நினைவு வரைபடம்                   :

                                                                     மலைப்பொழிவு

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

மலைப்பொழிவு

Ø  ஆசிரியர் குறிப்பு :

o   பெயர் : கண்ணதாசன்

o   இயற்பெயர் : முத்தையா

o   பண்புகள் : பல்வேறு இலக்கிய நூல்களையும், திரைப்பட பாடல்களையும் எழுதியவர்

o   சிறப்பு பட்டம் : கவியரசு

o   தமிழகத்தின் அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.

Ø  இயேசு நாதர் அறிவுரை :

o   சாந்தம் என்னும் பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்

o   மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை

o   இவ்வுலகம் ஏற்ற தாழ்வு இல்லா வாழ்வை பெற வேண்டும்.

o   இரக்கம் உடையோர் பேறு பெற்றோர்.

o   மனிதர்கள் சண்டை சச்சரவுகள் இன்றி வாழ வேண்டும்.

o   அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

மலைப்பொழிவு

o  கண்ணதாசன் பற்றி அறிதல்

o  மதங்களைப் பற்றி அறிதல்

o  பாடலை சீர்ப் பிரித்து வாசித்தல்

o  புதியச் சொற்களுக்கான பொருளை அகராதிக் கொண்டு அறிதல்

                                                                பாடலின் பொருளை அறிதல். வாழ்வியலோடு                                                                                          தொடர்புப்படுத்துதல். 

o  மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  மனித வாழ்க்கையில் தேவைப்படுவதாக இயேசு நாதர் கூறுவது யாது?

Ø  மலையளவு என்பதன் பொருள் என்ன?

MOT

Ø  இந்த உலகம் யாருக்கு உரியது?

Ø  வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?

VHOT:

Ø  எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?

கற்றல் விளைவுகள்  :

மலைப்பொழிவு

·         T702 ஒன்றைப் படிக்கும் போது அந்த படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்தலும் கருத்துக்களை தமது சொந்த கருத்துக்களுடனும் , அனுபவங்களுடனும் ஒப்பிட்டு தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்.

·         T704 தாங்கள் படித்தவற்றை பற்றி சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.

·         T709 ஒன்றைப் படித்து முழுமையான பொறுமையை உணர்ந்து அதன் பயன்பாட்டினை கூறுதல்

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  எல்லோரும் ஒற்றுமையாக இருக்க சமுதாயத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதி வருக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post