நாள் : 13-02-2023 முதல் 17-02-2023
மாதம் : பிப்ரவரி
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. அணி இலக்கணம்
அறிமுகம் :
Ø அழகு என்பது குறித்து நீங்கள் கருதுவது யாது?
Ø நீங்கள் உங்களை எவ்வாறு அழகு செய்துக் கொள்வீர்கள்?
கற்பித்தல் துணைக் கருவிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
Ø பாடல்களில் இடம் பெறும் அணிகளை அடையாளம் காணும் திறன் பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
அணி இலக்கணம்
Ø அணியைப் பற்றிக் கூறல்
Ø அணி இலக்கணம் பற்றிக் கூறல்
Ø உருவக அணி பற்றி கூறல்
Ø உருவக அணிக்கு எடுத்துக்காட்டுக்கூறி விளக்கம் அளித்தல்
Ø ஏகதேச உருவக அணிப் பற்றிக் கூறல்
Ø ஏகதேச உருவக அணிக்கு எடுத்துக்காட்டுக்கூறி விளக்கம் அளித்தல்.
நினைவு வரைபடம் :
அணி இலக்கணம்
விளக்கம் :
( தொகுத்தல் )
அணி இலக்கணம்
Ø செய்யுளுக்கு அழகு கூட்டுவது அணி
Ø சொல்லாலும், பொருளாலும் அழகுக் கூட்டுவது அணி
Ø உருவக அணி :
§ உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என தோன்றும்படிக் கூறுவது.
· எ.கா : தமிழ்த்தேன்
Ø ஏகதேச உருவக அணி :
§ கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை உருவகப்படுத்தியும், மற்றொன்றை உருவகப்படுத்தாமலும் விடுவது
§ எ.கா :
· பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்
மாணவர் செயல்பாடு :
அணி இலக்கணம்
o தமிழ் இலக்கணம் பற்றி அறிதல்
o தமிழ் இலக்கண வகைகளைப் பற்றி அறிதல்
o அணியின் பொருள் அறிதல்
o உருவக அணி பற்றி அறிதல்
o ஏகதேச உருவக அணி பற்றி அறிதல்
o செய்யுள்களில் இடம் பெறும் அணியை அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø தமிழ் இலக்கணம் ________ வகைப்படும்
Ø அணி என்பதன் பொருள் _________
MOT
Ø உருவக அணியை விளக்குக.
Ø ஏகதேச உருவக அணியை விளக்குக
HOT:
Ø உருவக அணிக்கும் ஏகதேச உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
Ø புதுமை விளக்கு செய்யுளில் இடம் பெற்றுள்ள அணியை விளக்குக.
கற்றல் விளைவுகள் :
அணி இலக்கணம்
Ø T720 பல்வேறு பாடப் பொருள்களை பல்வேறு நோக்கங்களுக்காக எழுதும் போது பொருத்தமான சொற்கள், தொடர் அமைப்புகள், சொற்றொடர், மரபுத்தொடர், நிறுத்தற்குறிகள் மற்றும் பிற இலக்கண கூறுகளை காலம் பெயரடை இணைச்சொற்கள் பொருத்தமாகப் பயன்படுத்துதல்
Ø தொடர் பணி :
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்
Ø உவமைத் தொடர்களை எழுதி அவற்றை உருவகங்களாக மாற்றி எழுதி வருக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை