6TH - TAMIL - NOTES OF LESSON - MARCH/23 - 1ST WEEK

 

நாள்               :           27 -02-2023 முதல்  03 -03-2023     

மாதம்                          மார்ச்

வாரம்               :              முதல்  வாரம்                     

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்

தலைப்பு         :     ஆசிய ஜோதி

அறிமுகம்                                 :

Ø  உங்கள் வீட்டில் நீ வளர்க்கும் உயிரினங்கள் யாவை?

Ø  உனது வீட்டின் அருகில் உள்ள உயிரினங்களின் பெயர்களைக் கூறுக

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                                   :

·         பிற உயிர்களைத் தம் உயிர் போல் மதித்தல்

·         பிற உயிர்களுக்குத் துன்பம் தராமல் இருத்தல்.

ஆசிரியர் குறிப்பு                     :

                                ஆசிய ஜோதி

Ø  நூல் குறிப்பு மற்றும் ஆசிரியர் குறிப்பு அறிதல்

Ø  புத்தர் பற்றி அறிதல்

Ø  புத்தரின் அறிவுரைகளை பின்பற்றுதல்

Ø  பாடப்பகுதியில் உள்ள செய்யுளின் பொருள் அறிதல்

Ø  செய்யுளின் பொருளை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்

கருத்துரு வரைபடம்                 :

ஆசியஜோதி


 

 

விளக்கம்  :

                              ஆசியஜோதி

Ø  தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.

Ø  கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.

Ø  ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது.

Ø  இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிற ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது.

Ø  இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது

Ø  அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் புத்தர்பிரான்.

Ø  பிம்பிசார மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன.

Ø  அவற்றின் நடுவில் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் புத்தர் தம் தோளில் சுமந்து சென்றார்.

Ø  யாகசாலையை அடைந்தார். மன்னனுக்கு அறவுரை கூறினார். நாடெங்கும் உயிர்க்கொலையைத் தடுத்து நிறுத்தினார்.

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

o  ஆசிரியர் குறிப்பு பற்றி அறிதல்

o  புத்தர் பற்றி அறிதல்

o  செய்யுள் பகுதியின் பொருள் அறிதல்

o  செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்

o  புதிய சொற்களுக்கான பொருளை அகராதிக் கொண்டு அறிதல்.

o  செய்யுளின் பொருளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் __________

Ø  நேர்மையான வாழ்வை வாழ்பவர் _________

MOT :

Ø  அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?

Ø  உலகம் முழுமையும் எப்போது ஆள முடியும்?

HOT

Ø  மற்ற உயிரினங்களும் சுதந்திரமாக வாழ வேண்டுமெனில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

Ø  புத்தபிரானின் அறிவுரைகளைக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :

                                         ஆசிய ஜோதி

T609 மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல்மற்றும் முடிவு செய்தல்

தொடர் பணி                            :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  நீங்கள் விரும்பும் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் பெயர்களைப் பட்டியலிடுக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post