6TH - TAMIL - NOTES OF LESSON - FEBRUARY/23 - 3RD WEEK

 

நாள்               :           13 -02-2023 முதல் 17  -02-2023     

மாதம்                          பிப்ரவரி

வாரம்               :              மூன்றாம்  வாரம்                     

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்

தலைப்பு         :     பெயர்ச்சொல்

அறிமுகம்                                 :

Ø  சிலவகையான பெயர்களைக் கூற வைத்தும்,கரும்பலகையில் எழுதியும் பாடப்பொருளை ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                                   :

Ø  அறுவகைப்பெயர்கள், இடுகுறிப்பெயர், காரணப்பெயர்களை அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  இலக்கணப்பகுதிகளை புரிந்து படித்தல்

Ø  பெயர்ச்சொல்லின் வகைகளை கூறல்

Ø  இடுகுறிப்பெயரும்,காரணப்பெயரும் வகையினைப் பற்றிக் கூறல்

 

கருத்துரு வரைபடம்                 :

பெயர்ச்சொல்


 

 

விளக்கம்  :

பெயர்ச்சொல்

Ø ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்சொல்

Ø பொருட்பெயர் : பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர்

Ø இடப்பெயர் : இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்பெயர்

Ø காலப்பெயர் : காலத்தைக் குறிக்கும் பெயர் காலப் பெயர்

Ø சினை பெயர் : பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர்

Ø பண்பு பெயர் : பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர்

Ø தொழிற் பெயர் : தொழிலைக் குறிக்கும் பெயர்

Ø இடுகுறிப்பெயர் : நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும்.

Ø இடுகுறிப் பொதுப்பெயர் : ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்

Ø இடுகுறிச் சிறப்புப் பெயர் : ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.

Ø காரணப்பெயர் : காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.

Ø காரணப் பொதுப் பெயர் : காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும்

Ø காரணச் சிறப்புப் பெயர் : குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும்.

 

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø   பாடப்பகுதியினை வாசித்தல்

Ø   பெயர்ச்சொல் பற்றி அறிதல்

Ø   பெயர்ச்சொல் வகைகளை அறிதல்

Ø   இடுகுறிப்பெயர்,காரணப்பெயர் பற்றி அறிதல்

Ø   இடுகுறிசிறப்பு பெயர், இடுகுறி பொதுப் பெயர் பற்றி அறிதல்

Ø   காரணப் பொதுப்பெயர் பற்றி அறிதல்

Ø   காரண சிறப்புப்பெயர் பற்றி அறிதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  பெயர்ச்சொல் __________வகைப்படும்

Ø  பொருட்பெயர் என்பது யாது?

MOT :

Ø  தொழிற்பெயர் என்றால் என்ன?

Ø  காரணப்பொதுப் பெயர் பற்றிக் கூறுக

HOT

Ø  காரணச் சிறப்பு பெயரைக் காரணத்துடன் விளக்குக.

Ø  நீர் நிரம்பு இருந்தவரை ஊர் மக்களும், விலங்குகளும்,மரங்கொத்திப்  போன்ற பறவைகளும் பயன்படுத்தி மகிழ்ந்த குளம் அது. இத்தொடரில் காணப்படும் இடுகுறிப் பெயர்களையும், காரணப்பெயர்களையும் எழுதுக.

கற்றல் விளைவுகள்                  :

                                         பெயர்ச்சொல்

T620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றைப்  பயன்படுத்தி எழுதுதல்

தொடர் பணி                            :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post