விரிவானம்
நெடுவினாக்கள்
– விடைகள்
மெல்லக்
கற்போர் - பகுதி
இயல் – 1
ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.
குறிப்பு : வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு
வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம்
படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்.
உறவினர் மகள்: வணக்கம்
சித்தப்பா
சித்தப்பா: வணக்கம் மகளே
உறவினர் மகள்: தமிழில்
உரைநடை என்றால் என்ன?
சித்தப்பா: நீயும் நானும் பேசுவதை
எழுதினால் உரைநடை.
உறவினர் மகள்: உரை
நடை வளர்ச்சி பற்றி உங்கள் கருத்து யாது?
சித்தப்பா: உரைநடையில் எதுகை, மோனை போன்ற அணிகளோ
இல்லை. ஆனால் அடுக்கு மொழிகள் உண்டு.. உரைநடை இயல்பான ஒழுங்கில் அமையும்.
உறவினர் மகள்: எனக்கு வருணனை உரைநடைப் பற்றி கூற
முடியுமா?
சித்தப்பா: கூறுகிறேன். வருணனை உரைநடை
என்பது புலனுணர்வு அனுபவங்களை வருணனையாக விவரிப்பது. மக்கள், உயிரினங்கள், பொருள்கள் ஆகியவற்றை
வருணிப்பது.
உறவினர் மகள்: உரைநடையில்
ஓசை இன்பம் ஏற்படுமா?
சித்தப்பா: எதுகை, மோனை சொற்களை
மிகுதியாகப் பயன்படுத்தி உரையாசிரியர்கள் பலர் உரையெழுதி உள்ளனர். எடுத்துக்காட்டாக
இரா.பி. சேதுபிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலைக் கூறலாம்.
உறவினர் மகள்: மோனையும், இயைபும் வருவது போல்
உரைநடை சொல்லுங்கள் சித்தப்பா!
சித்தப்பா: சொல்கிறேன்.
இரா.பி.சேதுபிள்ளையின் “உமறுப்புலவர்” என்னும் கட்டுரையில்“பாண்டிய நாட்டில் பருவமழை பெய்யாது ஒழிந்தது. பஞ்சம் வந்தது. பசி நோயும் மிகுந்தது.
உறவினர் மகள்: கடைசியாக, முரண் நயம் பற்றி
மட்டும் கூறுங்கள் சித்தப்பா!
சித்தப்பா: முரண்
என்பது முரண்பட்ட இரண்டு சொற்கள் அருகே அருகே அடுக்கி வருதல்.. உதாரணமாக : இரவு பகல் பாராமல் உழைக்கிறார்
உறவினர் மகள்: மிக்க நன்றி சித்தப்பா.
தங்களிடமிருந்து உரைநடையின் சிறப்பினை நன்கு அறிந்து கொண்டேன்.
சித்தப்பா: நன்று. வா மகளே காலை உணவு
உண்ணலாம்.
இயல் – 2
“ புயலிலே
ஒரு தோணி “ கதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும், அடுக்குத் தொடர்களும் ஒலிக் குறிப்புச்
சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
குறிப்புச் சட்டம்
முன்னுரை புயல் வருணனை அடுக்குத் தொடர் ஒலிக் குறிப்பு முடிவுரை |
முன்னுரை
:
புயலிலே ஒரு தோணியில்
பா.சிங்காரம் எழுதியுள்ள புயல் வருணனை, அடுக்குத் தொடர், ஒலிக் குறிப்பு பற்றி இக்கட்டுரையில்
காணலாம்.
புயல்
வருணனை :
·
கொளுத்தும் வெயில்
·
மேகங்கள் கும்மிருட்டு
·
இடி முழக்கம் வானத்தைப் பிளந்தது.
·
மலைத் தொடர் போன்ற அலைகள்
·
வெள்ளத்தால் உடை உடலை ரம்பமாய் அறுக்கிறது
அடுக்குத்
தொடர் :
·
நடுநடுங்கி
·
தாவித் தாவி
·
குதி குதித்தது
·
இருட்டிருட்டு
·
விழுவிழுந்து
ஒலிக்
குறிப்பு :
·
கடலில் சிலுசிலு, மரமரப்பு
·
ஙொய்ங், புய்ங் ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங்
முடிவுரை
:
·
பகல் இரவாகி உப்பக்காற்று உடலை வருடியது
·
அடுத்த நாள் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள்.
·
இவ்வாறாக வருணனைகளோடு, அடுக்குத் தொடர்களையும்,
ஒலிக் குறிப்புகளையும் கொண்டு தோணி படும் பாட்டை பா.சிங்காரம் விவரிக்கின்றார்.
இயல் – 3
அன்னமய்யா
என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள்
கதைப் பகுதிக் கொண்டு விவரிக்க.
குறிப்புச் சட்டகம் முன்னுரை தேசாந்திரி கருணை அன்னமய்யா முடிவுரை |
முன்னுரை :
பசியென்று வந்தவர்களுக்கு
தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில்
கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.
தேசாந்திரி:
Ø சுப்பையாவின்
வயலில் அருகு எடுக்கும் பணி.
Ø அன்னமய்யாவுடன்
ஒரு ஆள் வந்தான்
Ø அவன்
மிக சோர்வாக இருந்தான்
Ø லாட
சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.
Ø குடிக்க
தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.
Ø வேப்பமர
நிழலில் சோர்வாக அமர்ந்தான்
கருணை
அன்னமய்யா:
Ø அவன்
பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும்
கூறினான்.
Ø அன்னமய்யா
ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக்
கொடுத்தார்.
Ø கடுமையான
பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.
Ø ஆனந்த
உறக்கம் கண்டான்.
முடிவுரை:
பசியென்று வந்தவர்களுக்கு
தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின்
விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.
இயல் – 4
“
அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் “ என்னும் தலைப்பில் கற்பனைக்
கதை ஒன்று எழுதுக
குறிப்புச்சட்டம்
முன்னுரை பேரண்டம் கருந்துளைகள் தலைவிதி திரும்புதல் முடிவுரை |
முன்னுரை
:
அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் என்பவருடன்
விண்வெளிப் பயணம் மூலம் கிடைத்த கருத்தையும், அனுபவத்தையும் இக்கட்டுரை வாயிலாகக் காணலாம்.
பேரண்டம்
:
இப்பேரண்டம் பெருவெடிப்பினால்
உருவானது என்பதற்கானச் சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார்.
கருந்துளைகள்:
ஞாயிறு ஒரு விண்மீன்.
ஒரு விண்மீன் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன்
சுருங்கத் தொடங்குகிறது. இதனால் அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே செல்கிறது என விளக்கினார்.
கருந்துளைகள்:
விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள்
செல்கிற எதுவும், ஒளி கூடத் தப்ப முடியாது. இவ்வாறு உள்ளே சென்ற யாவையும் வெளிவர முடியாததால்
இதனை கருந்துளை என்பதனை ஹாக்கின் விளக்கினார்.
தலைவிதி
:
தலைவிதி ஒன்று
இல்லை. தலைவிதி தான் நம்மை தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும்
பார்த்துக் கடக்கிறீர்கள்? எனக் கேட்டு எங்களைச் சிந்திக்க வைத்தார்.
திரும்புதல்
:
ஹாக்கின் அவர்களுடன்
விண்வெளிப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல்வேறு விதமான நிகழ்வுகளைக் கண்டும்
அவற்றை அறிந்தும் பூமியை வந்தடைந்தோம்.
முடிவுரை
:
ஹாக்கின் விண்வெளிப்
பயணம் விண்வெளியைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பாக எங்களுக்கு அமைந்தது.
இயல் – 5
பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட
புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின்
கருத்துகளை விவரிக்க.
குறிப்புச்சட்டம்
முன்னுரை மேரி அவமானம் புதிய நம்பிக்கை கல்வி உதவிக்கரம் மேல்படிப்பு முடிவுரை |
முன்னுரை
:
மேரியிடமிருந்து
பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி
இக்கட்டுரையில் காண்போம்.
மேரி
:
·
சாம் – பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள்
மேரி.
·
பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை
நடத்துகிறார்கள்.
அவமானம்
:
·
மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு
செல்கிறார்கள்.
·
மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை
எடுக்கிறாள்.
·
பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை
பிடிங்கினாள்.
·
உனக்குப் படிக்கத் தெரியாது எனக் கூறினாள்.
·
மேரி மனம் துவண்டாள்.
புதிய
நம்பிக்கை
·
மேரிக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம்
உண்டானது.
·
ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் “ உன் போன்ற
குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேன்டும்.
·
மேரிக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது.
கல்வி
·
மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி
கற்றாள்.
·
சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு
விழா நடந்தது.
·
அதில் “ இந்தப் பட்டம் பெறும் மாணவர்
எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.
உதவிக்கரம்
·
மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு
நல்ல செய்தி
·
அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப்
பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.
·
அவள் மேல் படிப்புக்காக டவுனுக்குச் செல்கிறாள்.
மேல்படிப்பு
·
மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக வழியனுப்ப
இரயில் நிலையத்தில் அவளது கிராமமே திரண்டு வந்தது.
·
மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்திற்கு வந்தார்கள்.
முடிவுரை
எப்படிப்பட்ட நிலையிலும்
கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.
மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது
என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்.
இயல் – 6
நிகழ்கலை
வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும் – இத்தகைய
மக்கள் கலைகள் அருகிவருவதற்கானக் காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன
– இவை குறித்து நாளிதழுக்கானத் தலையங்கம் எழுதுக.
நிகழ்கலை
வடிவங்கள் நிகழும்
இடங்கள் ஒப்பனைகள் சிறப்பும்,பழமையும் அருகி
வருவதற்கானக் காரணம் நாம்
செய்ய வேண்டுவன |
நிகழ்கலை
வடிவங்கள் :
சமூக பண்பாட்டுத்
தளத்தின் கருத்து கருவூலம் நிகழ்கலைகள். பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல்,புதுமை ஆகியவற்றை
அறிவதற்கு தற்காலத்தில் நிகழ்த்தப்படும் நிகழ்கலை வடிவங்கள் துணை செய்கின்றன.
நிகழும்
இடங்கள் :
நிகழ்கலைகள் பொதுவாக
மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் நிகழ்த்தப்படும். கோயில் திருவிழாக்களில் இவ்வகைக்
கலைகளை நாம் காணலாம்.
ஒப்பனைகள்
:
பல்வேறு விதமான நிகழ்கலைகளுக்கு கலைஞர்கள்
பல்வேறு விதமான ஒப்பனைகள் செய்து ஆடுகின்றனர். தெருக் கூத்து கலைகளில் தெய்வங்கள்,
மன்னர்கள் போன்ற பல்வேறு விதமான ஒப்பனைகளைக் காணலாம்.
சிறப்பும்
பழமையும்
வாழ்வியலில் ஒரு
அங்கமாக இருந்தது நிகழ்த்துகலைகள். இவை அறக்கருத்துகளைக் கூறும் சிறப்பாகவும் அமைந்தது,
பொம்மலாட்டம், கையுறைக் கூத்து, தெருக் கூத்து போன்றவை முன்னோர்களின் பழமை வாய்ந்த கலைகள் ஆகும்.
அருகி
வரக் காரணம்:
·
நாகரிக வளர்ச்சி
·
கலைஞர்களுக்கு போதிய வருமானம் இல்லை
·
திரைத்துறை வளர்ச்சி
·
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி
நாம்
செய்ய வேண்டுவன:
·
நமது இல்லங்களில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளில்
இந்நிகழ்கலைகளை நிகழ்த்துவது.
·
நமது ஊர் கோவில் திருவிழாக்களில் இக்கலைகளை
ஊக்கப்படுத்துவது.
·
ஊடகங்களில் இக்கலைகளைப் பற்றி விளம்பரப்படுத்துவது.
பாய்ச்சல் – கதை
முன்னுரை
·
உண்மைக் கலைஞன் தன் கலையில் முழு ஈடுபாட்டைக் காட்டுவான்.
·
கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ உடற்சோர்வோ பாதிப்பை
ஏற்படுத்துவதில்லை.
அனுமார் ஆட்டம்
·
ஆளுயரக் குரங்கு ஒன்று மரத்தில் இருந்து இறங்குவது
கண்டு அதிசயித்தான் அழகு.
·
நாதசுரமும் மேளமும் ஒன்றாக இழைந்து ஒலித்தன.
·
வலது, இடது எனக் கால் மாற்றி சதங்கை ஒலியோடு ஆடியது
அனுமார் என உணர்ந்தான்.
அனுமார் ஆட்டம் உச்சம் தொட்டது
·
கடையில் தொங்கிய வாழைத்தாரில் இருந்து பழங்களைப் பறித்துக்
கூட்டத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்தார்.
·
பெருங்குரல் எழுப்பியபடி கீழே குதித்தபோது வாலில்
தீப்பந்தம். கரணமடித்தல்,
பெரிய சத்தம், பெரிய சிரிப்பு என அனுமார் ஆட்டம் உச்சம் தொட்டது.
அனுமாரின் களைப்பு
·
ஆட்டத்தில் அனுமாருக்கு அவ்வளவு ஈடுபாடு.
·
வாய், வேட்டி, மார்புக்கச்சை, சதங்கைகளைக் கழற்றிப்
போட்ட படி சுவரில் சாய்ந்தார்.
வாரிசை வாழ்த்தும் கலைஞன்
·
அனுமாரைப் போல, ஆட ஆசை எனச் சொன்னான் அழகு.
·
அனுமாருக்கு உடனே, உற்சாகம் தொற்றியது காலில் சலங்கை,
பின்னர் வாலில் தீப்பந்தம் கட்டி அழகு ஆட இவர்
உற்சாகப்படுத்தியபடி ஓட, இறுதியில் அழகு மட்டும் ஆடிக்கொண்டிருந்தான்.
முடிவுரை
·
தனக்கு ஒரு
வாரிக உருவாகி
விட்டதைக் காணும் போது உடம்பின் வலியும் வேதனையும் இருமலும் ஒரு
பொருட்டல்ல.
·
கற்றுகொள்ளக் கற்றுகொள்ளக், கலைஞனுக்குக் கொடுப்பது உயிரானாலும் வலி தெரிவதே இல்லை.
இயல் – 7
நிகழ்வுகளைத்
தொகுத்து அறிக்கை எழுதுக.
மகளிர் நாள் விழா
இடம் –
பள்ளிக்
கலையரங்கம் நாள்
-08.03.2019
கலையரங்கத்தில்
ஆசிரியர்கள்,மாணவர்கள்
கூடுதல்
– தலைமையாசிரியரின்
வரவேற்பு
– இதழாளர்
கலையரசியின் சிறப்புரை – ஆசிரியர்களின்
வாழ்த்துரை
– மாணவத்
தலைவரின் நன்றியுரை.
மகளிர் நாள் விழா
அறிக்கை
எம்பள்ளிக் கலையரங்கத்தில்
08-03-2019 அன்று
மகளிர் நாள் விழா நடைபெற்றது.
மாணவர் ,ஆசிரியர்
கூடுதல்:
கலையரங்கத்தில்
மாலை
3.00 மணியளவில்
மாணவர்கள்,
ஆசிரியர்கள்
மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கூடினர்.தமிழ்த்தாய் வாழ்த்து
பாடி விழா தொடங்கப்பட்டது.
தலைமையாசிரியர்
வரவேற்பு:
தலைமை ஆசிரியர்
வந்திருந்த அனைவரையும் தேன் தமிழ் சொற்களால் வரவேற்றார். தலைமை
ஆசிரியர் கூறிய இதழாளர் கலையரசி பற்றிய வரவேற்பும்,அறிமுகமும்
மிகவும் சிறப்பாக இருந்தது.
இதழாளர்
கலையரசியின் சிறப்புரை:
இதழாளர் கலையரசியின்
பேச்சு மகளிருக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உந்து
சக்தியாக அமைந்தது.
Ø மகளிரின்
சிறப்புகள்
Ø மகளிருக்கு
அரசின் நலத் திட்டங்கள்
Ø சுய
உதவிக்குழுக்களின் பங்கு
Ø மகளிர்
கல்வி
போன்ற கருத்துகள் தெளிவாகவும்,அருமையாகவும்
இருந்தன.
ஆசிரியர்களின்
வாழ்த்துரை:
ஆசிரியர் கலையரசியின்
உரைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நம் பள்ளி மாணவிகளையும் பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும்
என வாழ்த்துரை வழங்கினார்.
மாணவத் தலைவரின் நன்றியுரை:
மாணவத் தலைவர்
சிறப்பு விருந்தினருக்கும்,தலைமை ஆசிரியருக்கும்,ஆசிரியர்களுக்கும்,மாணவர்கள்
மற்றும் அவர் தம் பெற்றோருக்கும் நன்றி கூறினார். மகளிர்
நாளில் உறுதி மொழி எடுக்கப்பட்டு நாட்டுப்பண் பாடி விழா இனிதே நிறைவுற்றது.
மங்கையராய்
பிறப்பதற்கே
முன்னுரை
”மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்ற வரிகளுக்கு ஏற்ப பல
சாதனைகளைப் புரிந்த பெண்களில் சிலரைப் பற்றி இங்கு நாம் காண்போம்.
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
·
இசைப் பேரரசி
·
தாமரை விருது, மகசேசே விருது, இந்திய மாமணி விருது பெற்றார்.
·
திருப்பதியில் ஒலிக்கப் பெறும் வெங்கடேச
சுப்ரபாதம் இவரின் குரலில் பதிவு செய்யப்பட்டது தான்.
·
காற்றினிலே வரும் கீதமாக திழ்கிறார்.
பாலசரஸ்வதி
·
பரதநாட்டியக் கலைஞர்
·
நம் நாட்டின் நாட்டு பண்ணுக்கு நடனமாடியுள்ளார்.
·
டோக்கியோவில், இவர் ஆடிய பரத நாட்டியம், பரதநாட்டியத்திற்கு உலகலாவிய புகழைப் பெற்றுத்தந்தது.
·
தாமரை செவ்வணி விருது பெற்றவர்
இராஜம் கிருஷ்ணன்
·
சமூக சிக்கல்களை களப்பணியாற்றி கதையாக எழுதியவர்.
·
ஒலிப்பதிவு கருவியை எப்போதும் கூடவே வைத்து
இருப்பார்.
இவர் எழுதிய புதினங்கள்
·
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி, கரிப்பு மணிகள்
·
குறிஞ்சித் தேன், அலைவாய்க் கரையில்
·
சேற்றில் மனிதர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள்
விருதுகள்
·
தாமரைத்திரு விருது, வாழ்வுரிமை விருது, காந்தி
அமைதி விருது
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
·
காந்திய சிந்தனைவாதி
·
காந்தியின் விடுதலைப் போராட்டங்களில் பங்கு
பெற்றவர்.
·
நாட்டின் விடுதலைக்குப் பின் பூதான இயக்கத்தில்
பணிபுரிந்தவர்.
·
'உழுபவருக்கே நிலம் உரிமை இயக்கம்'
தொடங்கியவர்.
சின்னப்பிள்ளை
·
படிப்பறிவு இல்லை என்றாலும் பட்டறிவால் கற்றுக்கொண்டவர்.
·
பெண்களுடன் குழுவாக இணைந்து வேலை செய்து
வருகிற கூலியை சரிசமமாக பிரித்துக் கொடுத்து சமூக
முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்.
சிறப்புகள்
·
பெண் ஆற்றல் விருது – வாஜ்பாய் அவர்கள் வழங்கி கெளரவித்தார்.
·
அவ்வை விருது, பொதிகை விருது, தாமரைத்திரு விருது
முடிவுரை
”பெண்கள் நாட்டின் கண்கள்”
என்பதற்கேற்பச் சமுதாயத்திற்கு உழைத்த மகளிரைப் பற்றி இக்
கதையின் வாயிலாக கண்டோம். பெண்களைப் பேற்றுவோம்! பெண்கள் முன்னேற்றத்திற்கு
உறுதுணையாய் நிற்போம்!
இயல் – 8
இராமானுசர் நாடகம்
முன்னுரை
தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலரும் மூங்கில் போல,
நம் தலைமுறைக்கு ஒருமுறை பிறப்பவர்கள் ஞானிகள் அவ்வாறு
வந்தவரான இராமானுசரைப் பற்றி நாம் இங்கு காண்போம்.
இராமானுசரும் அவரது நண்பர்களும் பூரணர் இல்லத்திற்கு செல்லுதல்.
முதலியாண்டான் இராமானுசர்,
கூரேசர் ஆகிய மூவரும் பூரணர் இல்லத்திற்குச் சென்றனர்.
பூரணரின் கோபம்
§
மூவரையும் கண்ட பூரணர், இராமானுசரைப் பார்த்து, தண்டும் கொடியுடன் உங்களைத் தானே வர சொன்னேன்
இராமானுசர் நட்புக்கு அளித்த மரியாதை
· தங்கள் விருப்பப்படியே தான் வந்துள்ளேன்.
· தாங்கள் கூறிய தண்டு கொடிக்கு இணையானவர்கள் இவர்கள் என்றார்.
பூரணர் கூறியவை
·
நான் கூறும் மந்திரம் மறைபொருள் பரம ஆச்சார்யார்
ஆளவந்தாரால் எனக்கு மட்டுமே கிடைத்தது.
·
இதை நாள்தோறும் தியானிப்பதால் பிறவிப்பணி
நீங்கும்.
·
வேறு யாரிடமும் இதை வெளிப்படுத்தக் கூடாது.
·
வெளிப்படுத்தினால் தண்டனையாக நரகமே கிட்டும்.
பூரணர் திருமந்திரத்தை வழங்கல்
· நான் கூறும் திருமந்திரத்தை நீங்களும் சேர்ந்துக் கூறுங்கள்.
· திருமகளுடன் கூடிய நாராயணனின் திருப்பாதங்களை புகலிடமாக கொள்கிறேன்.
திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்.
இராமானுசர் பொதுமக்களுக்கு திருமந்திரம் வழங்குதல்
·
மக்களிடம் பிறவிப் பிணியைத் தீர்க்கும் திருமந்திரத்தை உரத்த குரலில்
மூன்று முறை கூறி, மக்களையும் மூன்று முறை கூறச் சொல்கிறார்.
பூரணர் இராமானுசரை அழைத்தல்
·
பூரணர் தங்கள் மீது
கோபமாக உள்ளார். உடனே தங்களை அழைத்து வரச் சொன்னார் என பூரணரின் சீடர் கூறினார்;.
பூரணர் இல்லம்
· இராமானுசர் பூரணர் இல்லம் செல்கிறார்.
· பூரணர், குருவிற்கு நம்பிக்கை கேடு செய்து விட்டீர்கள் இதற்கு என்ன
தண்டனை தெரியுமா என்கிறார்.
· இராமானுஜர் நரகமே கிட்டும் குருவே என்கிறார்.
· அது தெரிந்தும் ஏன் இப்படி செய்தீர்கள் எனக் கேட்கிறார் பூரணர்.
o இச்செயலால் நான் மட்டுமே நரகத்தை சேர்வேன். ஆனால்,
பல்லாயிரக்கணக்கான மக்கள் பேறு பெறுவர் என்றார்
இராமானுசர்.
பூரணர் மகிழ்வும், பூரணரின் மகனை இராமானுசர் தன் சீடனாக பெறுதலும்.
§ இராமானுசரின் பதிலைக் கேட்ட பூரணர் மனம் மகிழ்ந்து இந்த எண்ணம் எனக்கு
தோன்றாமல் போய்விட்டதே எனக்கூறி, தன் மகனை இராமானுசரிடம் அடைக்கலமாக அளித்தார்.
முடிவுரை
இவ்வுலகில் பலர் தோன்றலாம் மறையலாம். ஆனாலும்,
வாழும் காலத்தில் பலருக்கும் பயன் அளித்துச் செல்பவர்கள்
சிலர். அந்த வகையில் மிகவும் சிறப்பு பெற்றவர் நம் ஞானியான இராமானுசர் அவர்கள் என்பதை
இக் கதையின் வாயிலாக உணர்ந்தோம்.
இயல் – 9
அழகிரிசாமியின்
“ ஒருவன் இருக்கிறான்
“ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை
மாந்தர் குறித்து எழுதுக
குறிப்புச் சட்டகம் முன்னுரை குப்புசாமி பக்கத்து வீட்டுக்காரர் முடிவுரை |
முன்னுரை:
கல்மனதையும்
கரைய வைக்கும் கதை இந்த ஒருவன் இருக்கிறான்.
இதை இக்கட்டுரையில் காண்போம்.
குப்புசாமி:
Ø
குப்புசாமி
25 வயது வாலிபன்.வயிற்று
வலிக்காரன்
Ø
உறவினர்கள் இவனை அனாதை
போல நடத்தினார்கள்.
Ø
காரணமில்லாமல் பக்கத்து
வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.
Ø
வயிற்றுவலிக்கு மருத்துவம்
பார்க்கச் சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.
பக்கத்து
வீட்டுக்காரர்:
Ø
பக்கத்து வீட்டுக்காரர்
காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர்.
அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.
Ø
குப்புசாமிக்கு ஆறுமுகம்
மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும்
தன் பங்காக இரு சாத்துக்குடியும்,
மூன்று ரூபாய் பணமும் கொடுத்தார்.
Ø
பக்கத்து வீட்டுக்காரர்
குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார்.
கடன் வாங்கிக்
கொடுத்த அந்த மூன்று ரூபாய் அவரின் மனதை மாற்றியது.
Ø
மனைவியை உடன் அழைத்துக்கொண்டு
மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.
முடிவுரை:
எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை
இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம்
துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது.
WAIT FOR 15 SECONDS
ஆக்கம்
:
WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
JOIN
OUR GROUPS
WHATSAPP
: https://chat.whatsapp.com/K7UPRIJ6GFFLmPqgIIrMaS
TELEGRAM
: https://t.me/thamizhvithai