அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் கல்விவிதைகள் மற்றும் தமிழ் விதையின் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் வாழ்த்துகளை அகம் மகிழத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வாழ்வில் இன்பம் பொங்க., மகிழ்ச்சிப் பொங்க.., வாழ்வு வளம் செழிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறோம். இந்த பொங்கல் வரலாற்றை இன்றைய மாணவர்கள் அறிந்துக் கொள்வது இன்றைய சூழலில் அவசியம் ஆகிறது. தைப் பொங்கல் நான்கு நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்னும் புறநானூறு வரிகளுக்கு இணங்க நம்மில் தேங்கி கிடக்கும் வெறுப்புணர்வு, பொறாமை, சினம் இவற்றை எல்லாம் தீயிட்டு எரித்து, அன்பு, பாசம், கருணை, கொடை என்னும் புதியப் பண்புகளை புகுத்தி நம்மை நாமே செம்மை செய்வதற்கு இந்த போகியைப் பண்டிகையை கொண்டாடுவோம். இயற்கைக்கு நன்றி செலுத்தும் உன்னத நாளாக இது உள்ளது. சங்க இலக்கியங்களிலும் நாம் இயற்கையைப் போற்றக் கூடிய பாடல்களை கண்டு இருக்கிறோம். இயற்கையோடு இணைந்த வாழ்வு தமிழர் வாழ்வு. மேலும் உழைக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கவும், உலகிற்கே உணவு அளிக்கக்கூடிய உழவுக் கருவிகளையும் வழிபடும் நாளாக மாட்டுப் பொங்கலை கொண்டாடுகிறோம். பெரியோர்களிடம் ஆசி பெறும் நாளாக காணும் பொங்கலை வழிபடுகிறோம். இது இந்தியாவில் மட்டுமே கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.
மாணவர்களே! இந்த தைப் பொங்கல் வரலாற்றை கீழ்க்காணும் காணொளியில் காணுங்கள். காண்பதோடு மட்டுமல்லாமல் அந்த காணொளி தகவல்கள் அடிப்படையில் வினாக்கள் தொகுக்கப்பட்டு இணைய வழி வினாடி - வினா தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த வினாடி வினா போட்டியில் பங்கேற்று 60% மதிப்பெண் பெறும் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும். ஒருவர் ஒரு முறை மட்டுமே பங்கேற்க இயலும். போட்டியில் பங்கு பெற காணொளியைக் காணுங்கள், மின் சான்றிதழ் வெல்லுங்கள்.
வாழ்த்துகள்,
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
இவண்
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள்
காணொளி
இணைய வழித் தேர்வு