9TH - TAMIL - NOTES OF LESSON - JANUARY/23 - 4TH WEEK

  

நாள்               :           23 -01-2023 முதல் 27 -01-2023     

மாதம்                          ஜனவரி

வாரம்               :              நான்காம்   வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு        : விரிவாகும் ஆளுமை

அறிமுகம்                 :

Ø  உனது தந்தை உங்களது குடும்பத்தினை காக்கும் விதம் பற்றிக் கூறுக.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                                   :

Ø  சான்றோர்கள்,அறிஞர்கள் ஆகியோரின் உழைப்பாகிய உரத்தில் தமிழ்ப்பயிர் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதனை உணர்ந்து, தம்மால் இயன்ற பங்களிப்பை நல்குதல்

ஆசிரியர் குறிப்பு                     :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  தனிநாயகம் அவர்களைப் பற்றிக் கூறல்

Ø  முதிர்ந்த ஆளுமைக்குத் தேவையான மூன்று இலக்கணங்களைப் பற்றிக் கூறல்

Ø  பிறர் நலத்திற்கு பாடுபடும் போது ஆளுமை தானாக வளருவதைக் கூறல்.

Ø  ஒற்றுமை உணர்வு ஏற்பட பாணரும் புலவரும் காரணம் என்பதைக் கூறல்.

Ø  தமிழ் இலக்கணத்தில் பரந்த மனப்பான்மை பற்றிக் கூறல்

Ø  நன்மை என்பது நன்மை செய்வதற்கே என்பதனை உணர்த்துதல்

Ø  ஒவ்வொருவரும் சான்றோர் ஆக முடியும் என்பதனைக் கூறல்

Ø  மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர் என்பதனை அறிதல்

கருத்து  வரைபடம்                   :

விரிவாகும் ஆளுமை

 


 

விளக்கம்  :

( தொகுத்தல் )

விரிவாகும் ஆளுமை

Ø  உலக நாடுகளையும், மக்களையும் உட்படுத்தி அன்பு பாராட்டுவது நம் இயல்பு.

Ø  முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை

Ø  பிறர் நலம் என்பதில் வாழ்க்கையைத் தன்னலம் தேடுவதிலிருந்து விடுவித்து ஆளுமையை முழுமைப்படுத்துகிறது.

Ø  ஒற்றுமை உணர்வு வளர்த்ததில் புலவருக்கும், பாணருக்கும் பெரும் பங்கு உண்டு.

Ø  அகத்திணை இலக்கியம் பல்வேறு வழிகளில் பரந்த மனப்பான்மையையும் விரிவான ஆளுமையையும் வளர்த்தது

Ø  பிறருக்காக வாழும் மக்கள் இவ்வுலகில் இல்லையென்றால் நாம் வாழ்வது அரிது.

Ø  தமிழ்நாட்டின் ஆளுமை வட இந்தியாவுடன் தொடர்புகள் வளர வளர கங்கையும், இமயமும் அடிக்கடி தொகை நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.

Ø  தமிழ் சான்றோன் சமுதாயத்திலேயே வாழ்ந்து தன்னால் இயன்றவரை சமுதாயத்திற்குப் பல நன்மைகளைச் செய்வான்.

Ø  உரோம நாட்டுச் சிந்தனையாளர்களும் தமிழ்ப்புலவர்களைப் போல ஒன்றே உலகம் என்ற கொள்கையைப் பாராட்டி வந்தனர்.

Ø  உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் என்பதன் மூலம் ஆளுமை விரிவாகும்.

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  தனிநாயகம் பற்றி அறிதல்

Ø  முதிர்ந்த ஆளுமைக்குத் தேவையான மூன்று இலக்கணங்களைப் பற்றி அறிதல்

Ø  ஆளுமையை வளர்க்கும் விதம் பற்றி அறிதல்

Ø  ஒற்றுமை உணர்வு வளர்த்த விதம் பற்று அறிதல்

Ø  இலக்கண இலக்கியத்தில் காணப்படும் ஆளுமைப் பண்புகளை அறிதல்

Ø  சான்றோர் ஆகும் தன்மைப் பற்றி அறிதல்

Ø  ஆளுமைக் குறித்து வள்ளுவம் உரைத்த குறட்பாக்களைப் பின்பற்றுதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  விரிவாகும் ஆளுமையில் யாருடைய உரை கொடுக்கப்பட்டுள்ளது?

Ø  முதிர்ந்த ஆளுமைக்குத் தேவையான மூன்று இலக்கணங்கள் யாவை?

MOT

Ø  தமிழ் இலக்கியத்தில் காணப்படும் பரந்த மனப்பான்மைப் பற்றிக் கூறுக.

Ø  தமிழ்நாட்டின் ஆளுமை வட இந்தியாவுடன் எவ்வாறு தொடர்புப்படுத்தப்பட்டது?

HOT

Ø  உலகத் தமிழ்மாநாட்டு மலர், பொங்கல் மலர், தீபாவளி மலர் போன்றவற்றில் உங்களின் உலகப் பொதுவியல் சிந்தனைகளை எவ்வாறு எடுத்துரைப்பீர்கள்?

Ø  ஆளுமைக் குறித்து நீங்கள் கருதுவது யாது?

 

 

 

கற்றல் விளைவுகள்                  :

Ø  T944 சான்றோர்கள், அறிஞர்களின் தமிழ்ப்பணிகளைப் படித்துணர்ந்து தம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்தல்.

 

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post