நாள் : 18-01-2023 முதல் 20-01-2023
மாதம் : ஜனவரி
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. மகனுக்கு எழுதிய கடிதம்
2. யாப்பிலக்கணம்
அறிமுகம் :
Ø ஊரில்
உள்ள உன் உறவினருக்கு எவ்வாறு கடிதம் எழுதுவாய்? என வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்.
Ø தமிழ்
எழுத்துகளில் குறில், நெடில்,ஒற்று எழுத்துகளை கூறுக.
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø கடித
இலக்கியவகையைப் படித்துப் பொருளுணர்ந்து எழுதுதல்.
Ø செய்யுள்
உறுப்புகளை யாப்பிலக்கணம் வழி அறிந்து,அலகிடல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø கடிதம்
எழுதும் முறையைக் கூறல்
Ø கடிதம்
எழுதும் படிநிலைகளைக் கூறல்
Ø நா.முத்துக்குமார்
பற்றிக் கூறல்
Ø கடிதத்தில்
கூறப்பட்டுள்ள மையக் கருத்தைக் கூறல்
Ø தமிழ்
எழுத்துகளின் வகை தொகைகளைக் கூறல்
Ø யாப்பின்
உறுப்புகள் பற்றிக் கூறல்
Ø யாப்பின்
உறுப்புகளை விளக்கிக் கூறல்
Ø அலகிடும்
முறைகளைக் கூறல்
கருத்து வரைபடம் :
மகனுக்கு எழுதியக் கடிதம்
யாப்பிலக்கணம்
விளக்கம் :
( தொகுத்தல் )
மகனுக்கு எழுதிய கடிதம்
Ø கடிதம்
எழுதும் பாங்கு
Ø நா.
முத்துக்குமார் தனது மகனுக்கு எழுதிய கடிதம்
Ø உலகின்
மிகப்பெரிய இன்பம் மெய் தீண்டல்.
Ø இந்த
உலகில் இப்படி தான் அழ வேண்டும், சிரிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கிறது.
Ø கல்வியில்
தேர்ச்சிக் கொள்.
Ø எங்கும்,
எதிலும் அன்பாய் இரு.
Ø உழைக்கத்
தயங்காதே.
Ø உனக்கான
காற்றை நீயே உருவாக்கப் பழகு.
Ø கிடைத்த
வேலையை விட பிடித்த வேலையை செய்
Ø உறவுகளை
விட மேலானது நட்பு.
யாப்பிலக்கணம்
Ø யாப்பின்
உறுப்புகள் : 6
Ø எழுத்து(3)
: குறில், நெடில்,ஒற்று
Ø அசை
(2) : நேர், நிரை
Ø சீர்(4)
: ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர்
Ø தளை(7)
: நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை,
கவித்தளை, ஒன்றிய வஞ்சித் தளை, ஒன்றா வஞ்சித் தளை
Ø அடி(5)
: குறளடி,சிந்தடி,அளவடி,நெடிலடி,கழிநெடிலடி
Ø தொடை
: எதுகை, மோனை, இயைபு
Ø அலகிடும்
முறை
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
·
வலையொளி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø கடிதம் எழுதும் முறை
அறிதல்
Ø கடிதம் எழுதும் நோக்கம்
அறிதல்
Ø கடித படிநிலைகளை அறிதல்
Ø தனது மகனுக்கு எழுதிய
கடிதத்தின் கருத்தை உணர்தல்
Ø உலகினில் எப்படி வாழ
வேண்டும் என்பதனை அறிந்து பின்பற்றுதல்
மதிப்பீடு :
LOT :
Ø கடிதம் எழுதும் வகைகள் யாவை?
Ø யாப்பின் உறுப்புகள் யாவை?
MOT
Ø உலக வாழ்வு குறித்து நா. முத்துக்குமார்
கூறியது யாது?
Ø
அசை என்பது
யாது? அதன் வகைகள் யாவை?
HOT
Ø உலகத்தில் எவ்வாறு வாழ
வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
Ø மனப்பாடக் குறளில் ஏதேனும் ஒரு குறளை அலகிடுக
கற்றல் விளைவுகள் :
Ø T9042
செப்பமான
மொழிநடையைப் படித்துச் சுவைத்தல், பல்வேறு கடித உத்திகளையும் வடிவங்களையும் அறிந்து
எழுதுதல்.
Ø T9043
தலைப்பை மையமிட்டுக் கவிதை புனைதல்/பாடல் எழுதுதல்.
தொடர் பணி :
Ø
புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை