9TH - TAMIL - NOTES OF LESSON - FEBRUARY/23 - 2ND WEEK


                                                                 

நாள்               :           06 -02-2023 முதல் 10 -02-2023     

மாதம்                          பிப்ரவரி

வாரம்               :              இரண்டாம்   வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

            தலைப்பு        :     குறுந்தொகை

அறிமுகம்                 :

Ø  ஓயாமல் அழுதுக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையை நீங்கள் எவ்வாறு சமாதானம் செய்வீர்கள்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                                   :

Ø  மனிதம் சார்ந்த  படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனித நேயப் பண்புடன் வாழ்தல்

Ø  குறிப்பிட்ட தலைப்பில்  கருத்துகளைத் திரட்டிக் கலந்துரையாடும் திறன் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  குறுந்தொகைப் பற்றி கூறுதல்

Ø  செய்யுளினை சீர்ப்பிரித்து வாசித்தல்

Ø  செய்யுளின் நயங்களை அறிதல்

Ø  செய்யுளின் பொருளைக் கூறல்

Ø  செய்யுளின் பொருளை நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புப்படுத்துதல்.

கருத்து  வரைபடம்                   :

குறுந்தொகை

 


 

விளக்கம்  :

( தொகுத்தல் )

குறுந்தொகை

Ø  ஆசிரியர் : பெருங்கடுங்கோ

Ø  எட்டுத்தொகை நூல்களில் ஒன்று

Ø  நான்கடி சிற்றெல்லையும் எட்டடி பேரெல்லையும் உடையது.

Ø  பெண்யானையின் பசியினைப் போக்க ஆண் யானை மெல்லிய கிளையை உடைய “யா” மரத்தின் பட்டையை உரித்து நீரைப் பருகச் செய்தது

Ø  தலைவியை பிரிந்த தலைவன்

Ø  தலைவிக்கு தோழி ஆறுதல் கூறுதல்

Ø  இலக்கணக்குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  குறுந்தொகை பற்றி அறிதல்

Ø  இறைச்சி குறித்து அறிதல்

Ø  செய்யுளின் நயங்களை அறிதல்

Ø  செய்யுளை சீர் பிரித்து வாசித்தல்

Ø  செய்யுளின் மையக் கருத்தை உணர்தல்

Ø  செய்யுளில் வெளிப்படுத்தப்படுள்ள மனிதம் குறித்து கலந்துரையாடுதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  எட்டுத்தொகை நூல்களில் ஒன்று __________

Ø  எட்டுத்தொகையின் அடி எல்லை ____________

MOT

Ø  செய்யுளில் காணப்படும் நயங்கள் யாவை?

Ø  பெண்யானையின் பசியை ஆண் யானை எவ்வாறு தீர்த்தது?

HOT

Ø  தோழி தலைவிக்கு எவ்வாறு ஆறுதல் கூறுகிறாள்?

Ø  தந்தையை இழந்த குடும்பத்திற்கு நீ எவ்வாறு ஆறுதல் கூறுவாய்?

கற்றல் விளைவுகள்                  :

Ø  T946 அன்பின் வயப்பட்ட வாழ்க்கை சங்க காலத்திலும் நிலவி வந்ததை இலக்கியம் வாயிலாகப் படித்தறிதல்.

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post