நாள் : 30 -01-2023 முதல் 03 -02-2023
மாதம் : பிப்ரவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : அக்கறை
அறிமுகம் :
Ø தாய்
தன்னுடைய குழந்தைக்கு ஏதேனும் இடர் நேர்ந்தால் துடிப்பது ஏன்?
Ø தந்தை
தன்னுடைய குடும்பத்திற்கு இரவு பகல் பாராமல் உழைப்பது ஏன்?
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø புதுக்கவிதைகளைப்
படிப்பதால், தற்காலக் கவிதையின் போக்கினை அறிதல்
Ø மனிதம்
சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனித நேயப் பண்புடன் வாழ்தல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø புதுக்கவிதையின்
தோற்றம் பற்றி கூறுதல்
Ø கல்யாண்ஜி
ஆசிரியர் குறிப்பு பற்றிக் கூறல்
Ø புதுக்கவிதை
மூலம் மனித நேயம் வளருவதைக் காணலாம்
Ø மனிதம்
நசுங்கி விட்டத்தை கவிதையின் மூலம் உணர்த்துதல்
Ø கவிதை
நடைமுறை வாழ்வியலோடு தொடர்புக் கொண்டுள்ளமையைக்
கூறல்
கருத்து வரைபடம் :
அக்கறை
விளக்கம் :
( தொகுத்தல் )
அக்கறை
Ø ஆசிரியர்
: கல்யாண்ஜி
Ø இயற்பெயர்
: கல்யாண சுந்தரம்
Ø ஒரு
சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய
அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.
Ø உரைநடையில்
கவிதை எழுதுவதை பாரதியார் கொண்டு வந்தார்
Ø அவற்றின்
தொடர்ச்சியாக வந்த கவிதைகள் புதுக்கவிதைகள்
Ø புதுக்கவிதைகள்
மனிதத்தை வெளிப்படுத்துகின்றனவாக அமைகின்றன.
Ø தக்காளிக்
கூடை தெருவில் சரிந்து உருண்டது.
Ø அதனை
கண்டும் காணாமல் மக்கள் செல்கின்றனர்,
Ø இதில்
பழங்களை விட நசுங்கியது அடுத்தவர் மீதான அக்கறை
Ø மனிதத்தை
அழகாக வெளிப்படுத்திக்கிறார்.
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
·
வலையொளி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø புதுக்கவிதைப் பற்றி
அறிதல்
Ø புதுக்கவிதையின் தோற்றம்
குறித்து அறிதல்
Ø புதுக்கவிதையின் வாயிலாக
மனிதம் வெளிப்படுவதை உணர்தல்
Ø பாடலை சீர் பிரித்து
வாசித்தல்
Ø பாடலின் மையக் கருத்தை
உணர்தல்
Ø பாடலில் வெளிப்படுத்தப்படுள்ள
மனிதம் குறித்து கலந்துரையாடுதல்
Ø பாடலை இனிய இராகத்தில்
பாடுதல்
மதிப்பீடு :
LOT :
Ø புதுக்கவிதை என்பது யாது?
Ø கல்யாண்ஜி அவர்களின் இயற்பெயர் என்ன?
MOT
Ø புதுக்கவிதையின் மூலம் வெளிப்படும்
மனிதம் குறித்துக் கூறுக.
Ø
பாடலில்
காணப்படும் நயங்கள் யாவை?
HOT
Ø பழங்களை விட நசுங்கி
போனது – பொருள் கூறுக
Ø மனிதம் குறித்து நீ அறிந்த வேறு கவிதை ஒன்றை கூறுக.
கற்றல் விளைவுகள் :
Ø T945 தற்காலக்
கவிதைப் போக்கினை அறிந்து புதுகவிதைகளைப் படித்தல், அவை போல எழுதுதல்
தொடர் பணி :
Ø
புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை