7TH - TAMIL - NOTES OF LESSON - JANUARY/23 - 4TH WEEK

 

நாள்               :           23 -01-2023 முதல் 27-01-2023     

மாதம்                          ஜனவரி

வாரம்               :              நான்காம்   வாரம்                     

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. புதுமை விளக்கு

அறிமுகம்                                 :

Ø  உங்களை நீங்கள் எவ்விதம் அழகு செய்து கொள்வீர்கள்? என வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்துதல்.

Ø  அறநெறிச்சாரப் பாடலில் உள்ள உருவகத்தையும் அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினையும் படித்தறிதல்.

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடலின் நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்புப் பற்றிக் கூறல்

Ø  பாடலினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  பாடலில் புதிய சொற்களின் பொருள் கூறல்

Ø  பாடலின் மையக் கருத்தினைக் கூறல்

Ø  பாடலின் பொருளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்.

Ø  மனப்பாடப் பாடலை இனிய இராகத்தில் வாசித்தல்

நினைவு வரைபடம்                   :

                                                                                                     புதுமை விளக்கு


விளக்கம்  :

( தொகுத்தல் )

புதுமை விளக்கு

Ø ஆசிரியர் : பொய்கை ஆள்வார்.

Ø பூமி – அகல் விளக்கு

Ø கடல் – நெய்

Ø கதிரவன் – சுடர்

Ø திருமாலை போற்றி பாடியுள்ளார்.

 

Ø  ஆசிரியர் : பூதத்தாழ்வார்

Ø   அன்பு – அகல்விளக்கு

Ø   ஆர்வம் – நெய்

Ø   உருகும் மனது – திரி

Ø   ஞானம் – சுடர்

Ø   திருமாலைப் போற்றி பாடியுள்ளார்

 

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

o  ஆழ்வார்கள் பற்றி அறிதல்

o  பொய்கையாழ்வார் பற்றி அறிதல்

o  பொய்கை ஆழ்வார் திருமாலுக்கு செய்துள்ள ஒப்புமைகளைக் காணல்

o  இயற்கையை திருமாலோடு ஒப்பிட்டுள்ளமையைப் பற்றி அறிதல்

o  புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்

o  மனப்பாடப்பகுதிகளை மனனம் செய்தல்

o  பூதத்தாழ்வார் அன்பை விளக்காக ஏற்றி திருமாலை வணங்கியுள்ளதை அறிதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  வையம் என்பதன் பொருள் யாது?

Ø  ஞானம் என்பதன் பொருள் யாது?

MOT

Ø  பொய்கை ஆழ்வாரும், பூதத்தாழ்வாரும் அகல் விளக்காக எவற்றை உருவகப்படுத்தியுள்ளனர்?

Ø  பொய்மையாழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?

HOT:

Ø  நீங்கள் ஞானத்தை எவ்வாறு உருவகப்படுத்துவீர்கள்?

கற்றல் விளைவுகள்  :

புதுமை விளக்கு        

T710  ஒன்றைப் படித்து முழுமையான பொருளை உணர்ந்து அதன் பயன்பாட்டினைக் கூறல்

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களை திரட்டுக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post